வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்


Kathir Kathirvelu
நாம் வாழும் இந்த உலகம் இறைவனுக்கு சொந்தமானதாகும் இங்கு பொருளைத்தேடினால் மரணம் வரும்.அருளைத்தேடினால் கடவுளை அடையலாம்.அருள் என்பது நம் சிரநடுவில் உயிர் ஒளியில் அமுதம் வைக்கப்பட்டு இருக்கிறது.அதை எடுக்கமுயற்ச்சி செய்யவேண்டும்.தியானம்,யோகம்,தவம்,சன்னியாசம்,தவம்,போன்றவற்றால் பெற முடியாது.ஜீவகாருண்யத்தால்தான் பெற முடியும்.ஜீவகாருண்யம் என்பது எல்லாஉயிர்களும் கடவுள் வாழும் ஆலயம் என்பதை உணர்ந்து எந்த உயிர்களுக்கும் துன்பம் தராமல் வாழவேண்டும்.துன்பம் படும் உயிர்களை நம்மால் முடிந்த அளவு காப்பாற்றவேண்டும்.முடிவில்லை எனில் மனதால் இறைவனை நினைத்து அந்த உயிர்களின் துன்பம் போக்க வேண்டுதல் வேண்டும்.இந்த உலகில் உள்ள பொருள்களை நமது என்று எக்காரணத்தை கொண்டும் நினைக்ககூடாது,இடைவிடாது அருளைத்தேடும் முயற்ச்சியில் இருக்கவேண்டும்.இப்படி இருந்தால் உங்களை கடவுள் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடமாட்டார்.உங்களை ந்ல்ல பிள்ளையாக தேர்வு செய்து.அருளைப்பெரும் வழியை காட்டுவார்.நம் சிரநடுவில் இருக்கும் அருளை திரந்து விடுவார்.அதன் சுகமே தனிச்சுகம்.அந்த சுகத்தை சொல்ல வார்த்தைகள் கிடையாது.இதை உணர்ந்தவர் வள்ளலார்.ஆதாலால் தான் யான் அடையும் சகத்தினை நீங்களும் அடையவேண்டும் என்று திருஅருட்பாவை எழுதிவைத்துள்ளார்.திருஅருட்பா இறைவனுடைய படைப்பாகும்.அதை படித்து அதில் உள்ல உண்மைகளை கடைபிடித்து நாம் அனைவரும் கடவுள் அருளை பெற்று மரணத்தை வெல்வோம்.அன்புடன்;-கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு