திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஆணவம்,மாயை, கன்மம்

 ஆணவம் ,மாயை, கன்மம் 
மும்மல பேதமும், சிருட்டியும் ;--

    ஆணவம் மாயை கன்மம்,என மலம் மூன்று இதில் 
பக்குவம் 3 ,அபக்குவம் 3 ,ஆக 6 இவை ஒவ்வொன்றும் மும்மூன்றாக
விரிதலின் 18 ,ஆம் .இந்தக்  கனம் பேதத்தால் அருட் சத்தியின் 
சமூகததில் எழுவகைத் தோற்றம் முண்டானது .மேற்படி கனம
மலத்தால் சிருட்டி உண்டாகும் விபரம் ஒருவாறு 
.
     பக்குவ ஆணவம் ,பக்குவ மாயை,இவ் இரண்டினாலும் 
விஞ்ஞான கலாபேதம்,

    அபக்குவஆணவம்,அப்க்குவ மாயை,அபக்குவ கன்மம் ,கூடியது
தேவ,நரக பைசாசங்கள் .

    பக்குவ மாயை,அபக்குவ கன்மம்,கூடியது ஜீவர்கள் .
    அபக்குவ கன்மம்,அபக்குவ கனமஆணவம்,அபக்குவ கனம மாயை,
இவை கூடியது தாவர உயிர்கள்.இதை விரிக்கில் பெருகும்
     ( இவை அனைத்தும் ஆன்மாவான உயிரொளி வாழ்வதற்கு,
பூலோகத்திற்கு வந்தவுடன் பற்றிக்கொள்ளும் செயல்களாகும் )
(ஆன்மாக்களில் மூன்றுவ்கைகள் உண்டு அவை ;-பக்குவ ஆன்மா,
அபவுக்குவ ஆன்மா, பக்குவா பக்குவ ஆன்மா என மூனறு
வகைகள் உண்டு,இவற்றை பிறகு பார்ப்போம்)  
.
       ஆணவம், மாயை,கன்மம் ,

 ஆணவம் ;--

  . ஆன்மா இந்த உலகத்திற்கு வரும்போது ஆணவம் என்னும் 
உந்துதல் சத்தியை ஆன்மாவில் பதிய வைத்து அனுப்பப் படுகிறது.
அதை யாராலும் அழிக்க முடியாது.

    ஆணவம் இருந்தால் தான்ஆன்மா எங்கும் செல்லமுடியும்,எதையும் 
செய்ய முடியும்.எப்படியும் வாழ முடியும் 


     ஆணவம் என்னும் சத்தியை அருட்பெரும் ஜோதி என்னும் 
பேரொளியால் பதிய வைத்து அனுப்பப்படுகிறது. அந்த பேரொளிதான்
பல கோடி அண்டங்களையும்,(அதாவது அனைத்து உலகங்களையும்)
இயக்கிக் கொண்டு இருப்பதாகும்.அதுவே எல்லாவற்றிற்கும் 
முழு முதல் காரியமாயும்,காரணமாகியும் இருந்து கொண்டு 
இருக்கின்றது. 
       
  மாயை ;--

   மாயை என்பது ;-பஞ்ச பூத உலகை ஆட்சி செய்வது மாயை என்னும் 
சத்தியாகும்.ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்தவுடன்,மாயை 
பற்றிக் கொளகிறது.மாயையைக்கு தெரியாமல் எதுவும் செய்ய முடியாது.
மாயையின் அனுமதி இல்லாமல் இந்த பஞ்ச பூத எல்லையை விட்டு 
வெளியேறமுடியாது.

     தாவரம் முதலான புல், மரம்,செடி ,பூண்டு,முதலியனவாகவும் ,
கல,மலை ,குன்று ,முதலிய தாவரங்களாகவும். 


    பின்னர் எறும்பு,செல்,புழு,பாம்பு,உடும்பு ,பல்லி,முதலியவையாகவும்,
தவளை,சிறுமீன்,முதலை,சுறா,திமிங்கலம்,போன்ற ஊர்வன 
முதலியவையாகவும்,


   பின்னர் ,ஈ ,வண்டு,தும்பி,குருவி ,காக்கை,பருந்து ,கழுகு ,முதலிய 
பறவை போன்ற வகைகளும்  


     பின்னர் அணில்,கிரங்கு,நாய்,,பன்றி, பூனை,ஆடு, மாடு, யானை, 
குதிரை,புலி, கரடி, போன்ற விளங்கு வர்க்கங்களும்.


    பின்னர் , பசாசர், பூதர்,இராக்கதர், அசுரர், சுரர், போன்ற தேவ 
யோனி வர்க்கங்களும் 


   பின்னர்,காட்டகத்தார், கரவுசெயவார், கொலை செய்வார்,
முதலிய நரக யோனி வர்க்கங்களும் 
     மனிததேகம் ;--.


     பிறந்து பிறந்து ,இறந்து ,இறந்து பல்லாயிரம் ஆண்டுகள் பல 
பல, பிறவிகள் எடுத்து பின் மனித தேகம் கிடைத்துள்ளது.

     இந்த பிறவிகள் யாவும் மாயையால் கொடுக்கப்பட்டவைகளாகும்
கடவுளால் கொடுக்கப் பட்டது என்பது தவறான செய்திகளாகும் .
மாயைக்கு கொடுத்த கட்டளையை தவறாமல் முறையாக 
செயல்படுத்தும் வேலையை செய்து கொண்டு இருப்பதாகும் .
    மனித தேகத்திற்கு மட்டும் விதி விலக்கு அளிக்கபட்டு 
இருக்கிறது .அவை என்ன வென்றால்,


    மனித தேகத்திற்கு மட்டும்  சிந்திக்கும் திறன் ,செயல்படும் திறன்.
அறிவு விளக்கம்,உண்மை அறியும் அறிவு போன்ற சிறப்பு 
அம்சங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.


      இவ்வுலகில் உள்ள எதையும் தெரிந்து அறிந்து கொள்ளலாம் .
அதற்க்கு மாயை துணைபுரியும்.மாயையின் விசித்திரங்களை 
கண்டு மனிதன் ஆசையின் காரணமாக,மண்ணாசை,பெண்ணாசை,
பொன்னாசை,போன்ற மூவாசைகளில் சிக்குண்டு அழிந்து 
மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறான்.ஆதலால் 
மாயையில் சிக்கி கொண்டு இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டு 
இருக்கிறார்கள் .


      மாயை மனிதன் விருப்பத்திற்கு தகுந்தாற் போல் துணை 
பிரிந்து கொண்டு இருக்கிறது .மாயையில் மனிதன் சிக்கிக் 
கொண்டு இருக்கிறானே தவிர,மாயை மனிதனை சிக்க வைக்க 
வில்லை.மாயையின் விசித்திர ஜாலங்களில் மனிதன் 
விரும்பி அனுபவித்து,அழிந்து கொண்டு இருக்கிறான்.


வேதம், ஆகமம்,புராணம்,இதிகாசங்கள்,


     மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டான்,மாயையை  
ஒழித்தால்தான் மனிதன் சொர்க்கம்,வைகுண்டம்,பரலோகம்,
போன்ற இடங்களுக்கு சென்று பிறவி இல்லாமல் வாழ்லாம் 
போகலாம் என்பது தவறான கருத்தாகும்.


    மாயையை விட்டு விலகுவதற்கு,பல தெய்வ வழிபாட்டு 
முறைகளையும்,சடங்கு சம்பிரதாயங்குகளும்,பரிகாரங்களையும்
வைத்து,பொய்யான கற்பனைக் கதைகளை கட்டி,எழுதி 
வைத்துவிட்டார்கள். அதையும் உண்மை என்று நம்பி
கடைபிடித்து,உண்மை அறியாமல் வாழ்ந்து கொண்டு 
வருகிறார்கள்.


     மாயை ஆன்மாவுக்கு உதவி செய்யுமே தவிர கெடுதல் 
செய்யாது.உண்மையை தேடினால் உண்மைக்கு வழி காட்டும்.
ஆனால்.இந்த பஞ்ச பூத உலகத்தில் இதுவரை அனுபவித்த 
வாழ்ந்த,பொருள்கள் அனைத்தும் திருப்பி தரவேண்டும் 
.
     தனக்கென இருந்த தேக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்,போக 
சுதந்திரம்,அனைத்தும் மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அப்படி ஒப்படைத்தால்தான்.ஆன்மாவுக்கு உண்மையை 
வெளிப்படுத்தும்.


     உண்மையை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, 
எங்கு செல்ல வேண்டும் என்பதை மாயை வழிக்காட்டும்.
எங்கு செல்லவேண்டுமோ,அங்கு செல்ல வேண்டுமானால். 
ஆன்மாவில் இருக்கும் அருள் அமுதத்தை,தன்னுடைய 
நன் முயற்ச்சியால்,எடுத்து தன்னுடைய உடம்பை,ஒளி 
உடம்பாக மாற்றி,சுத்த பிரணவ ஞானதேகம் கிடைத்தவுடன் 
ஆன்மா வந்த இடத்திற்கு,மாயை அனுப்பிவைக்கும்.இதுவே 
மாயையின் வேலையாகும்
.
    இன்னும் இதை விரிக்கில் பெருகும் .வள்ளலார் எழுதிய 
திரு அருட்பாவை நன்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள். 
      கன்மம் ;--  
     .  
.   ஆணவம் ஆன்மாவில் முன் கூட்டியே பதிவு செய்துள்ளது.
மாயை, ஆன்மாவிற்கு தேவையான அனைத்தும் செய்து 
கொடுப்பதால் ஆன்மாவில் மாயை பதிவாகி உள்ளது, என்பதை 
பார்த்தோம்.கன்மம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்
.
       கன்மம் என்பது கர்மம் என்றும் சொல்லுவதுண்டு .நாம்
செய்யும் செயல் அனைத்தும் கன்மம் எனப்படும் .எதை செய்ய
வேண்டும்,எதை செய்யக் கூடாது,என்பது தெரியாமல் அனைத்தும்
செய்கிறோம்.

  வினைப்பயன் ;=
     நாம் செய்யம் செயல் அனைத்தும் வினை எனப்படும்.அதனால்
ஏற்படும் விளைவுகள் அனைத்தும் எதிர் வினை எனப்படும்.
நல்லதை செய்தால் நல்  வினை எனப்படும்.தீயவை செய்தால்    .
தீவினை என்பதாகும் .இந்த இரண்டு வினைகளும், நம் உடம்பை 
இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே 
இருக்கும்.


      பஞ்ச மகா பாவங்கள் ;--
    கள்,காமம்,கொலை,களவு,பொய்,இவை ஐந்தும் கொடிய 
துக்கத்தை உண்டு பண்ணும்.இவ்வைந்திலும் ,கொலை 
விசேஷ் பயங்கர பாவமாகும்.என்னினும் கள்ளுண்டவனுக்குக் 
காமம் உண்டாகாமலிருக்காது.கொலை செய்யத் துணிவு 
வராமலிருக்காது..களவு செய்யாமல் இருக்க மாட்டான்,
பொய் பேச அஞ்சமாட்டான்,ஆகையால் இந்த ஐந்தும் உலகில் 
உள்ள அனைவரும் செய்து கொண்டு இருக்கிறார்கள் .இவை 
ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும் .இவைகள் மற்றும் 
வேறு விதமான செயல்கள் அனைத்தும் ஆன்மாவில் பதிவு 
ஆவதால் அவை கன்ம வினைகளாக பதிவாகி  மனிதனை 
அழித்து கொண்டு இருக்கின்றது 
.
    மேலே கண்ட ஐந்து பஞ்ச மகாபாவங்களின் கிளைகளாக 
மற்ற அனைத்து,செயல்களும் செயல்பட்டுக் கொண்டு 
இருக்கின்றது. .

       இவற்றிற்கு யாரும் காரணம் இல்லை,எந்த கடவுளும் 
எந்த தெய்வங்களும் எந்த கர்த்தாக்களும் காரணம் இல்லை,
நன்மையையும் தீமையும்,பிறர்தர வாரா,என்பதுபோல் 
அனைத்திற்கும் காரணம் அவரவர்களே தவிர வேறு யாரும் 
இல்லை என்பதை உணரவேண்டும்.
      இதற்குபெயர்தான் கன்மம் என்பதாகும்.இவை ஆன்மாவில் 
பதிவாகிவிடுவதால்,ஆன்மாவை கன்மம் பற்றிக் கொண்டது 
என்கிறார்கள்.இந்த உலகம் மனிதர்களுக்கு நண்மையை 
செய்யுமே தவிர தீமைகள் செய்யாது. 


மரணம் இயற்கை அல்ல செயற்கையாகும்;-- 
     நாம் உந்த உலகத்திற்கும், உலக உயிர்களுக்கும் தீமையை,
செய்துகொண்டே இருக்கிறோம்,நாம் குற்றம் செய்து குற்றத்திற்கு,
தண்டனையாக மரணம் என்பது வருகின்றது.மரணம் என்பது 
இயற்கை என்று சொல்லுவது அறியாமையாகும்,தெரியாமையாகும்.
மரணம் செயற்கை என்பதுதான் உண்மையாகும்
 .
    வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்;-
வான் சொல்லில்நல்லது வாய்திறப்பரியீர்
வாய்மையும் தூயமையுங் காய்மையில் வளர்ந்தீர் 
முன்சொல்லு மாறென்று பின்சொல்வ தொன்றாய் 
மூட்டுகின்றீர் வினை மூட்டையைக் கட்டி 
மன் சொல்லு மார்க்கத்தை மறந்து துமார்க்க 
வழி நடகின்றீர் இம் மரணத் தீர்ப்புக்கே 
என் சொல்ல விருக்கின்றீர் பின் சொல்வதரியீர் 
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.


  அடுத்த பாடல் ;--
துன்மார்க்க நடையிடைத் தூங்கு கின்றீரே
தூக்கத்தை விடுகின்ற துணை யொன்றுங் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச சார்ந்திட விழையீர்
சாவையும் பிறப்பையும் தவிர்ந்திடவிரும்பீர் 
பன்மார்க்கஞ் செல்கின்ற படிற்றுளம் மடக்கீர் 
பசித்தவர் தம்முகம் பார்த்துணவு வளியீர்
என்மார்க்க மெச்சுகம் யாது நும் வாழ்க்கை 
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீர் 


  என்பதை தெளிவு படுத்துகின்றார் மரணம் என்பது இயற்கை 
அல்ல ! செயற்கைதான் மரணம் என்பதை மிகத் தெளிவாக 
தெரியப்படுத்தியுள்ளார் .
.    
      மனிதர்கள் இங்கு வாழப் பிறக்கவில்லை ;--
     .        .  .
   மனிதர்கள் பிறப்பு பலகோடி பிறப்புகளுக்கு பிறகு உயர்ந்த நிலையை அடைவதற்கு கிடைத்த பிறப்பாகும் .அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வழியை அடைய வேண்டும் .அதைத்தான வள்ளலார் திரு அருட்பாவில் தெளிவாக எழுதி வைத்தும் ,வாழ்ந்தும் காட்டியுள்ளார்.அவற்றை  அறிந்து புரிந்து நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும் .


     மாயை ,கன்மம் , ஆணவம் ,இவை நம்மை விட்டு விலக வேண்டுமானால்,கடவுள் ஒருவரே என்பதை உண்மை அறிவால் தெரிந்து கொள்ள வேண்டும் ,சாதி ,மத, சமய பற்றுகள் எதுவும் இருக்கக் கூடாது .எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும் .ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை உணர்ந்து அனைத்து உயிர்களையும் உண்மை அன்பால் நேசிக்க வேண்டும் .உயிர்களுக்கு வரும் இடைஊருகளை போக்க வேண்டும் .


       அருட்பெருஞ்சோதி ஆண்டவர்தான்  நம் தந்தை என்பதை உண்மையுடன் பற்றிக் கொள்ள வேண்டும் .அவர் எங்கும் இல்லை நம் உடம்பில் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்,அந்த உயிர் ஒளியை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.அந்த தொடர்பு கிடைக்க மற்ற உயிர்களை நேசிக்க வேண்டும்,முடிந்த அளவு உபகாரம் செய்ய வேண்டும்.அப்படி செய்து வந்தால் நம் உயிர் ஒளியின் தொடர்பு கிடைக்கும் .


      பரோபகாரமும் இடைவிடாது ஆன்மாவான உயிர் ஒளியின் தொடர்பும், இருந்து கொண்டே இருக்கவேண்டும் .அப்பொழுது நமக்கு அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தெளிவு படுத்திக் கொண்டே இருப்பார்.அறிவு விளங்கும்,சிறிய அறிவைக் கொண்டு பெரிய அறிவை தேடவேண்டும் .அறிவை அறிவால் அறிகின்ற பொழுது அனுபவம் கிடைக்கும்,அனுபவம் அருளைத் தேடும் அருள் கிடைத்தால் அனைத்தும் வெட்ட வெளிச்சமாக தெரியும் .இறைவன் திரு அருளைப் பெற்று பேரின்ப நிலையை அடையலாம் 


      முயற்ச்சி செய்து முன்னேற வேண்டும் நாம் அனைவரும் நம் தந்தையின் சொந்த வீடான அருட்பெரு வெளிக்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.


மீண்டும் பூக்கும் .                   
                 

3 கருத்துகள்:

3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:50 க்கு, Blogger THOUGHT GURU கூறியது…

Hi sir, thank u very much for the very informative articles that ur posting...keep on the good works going...sir myself selvakumaran from Chennai,I find vallalars work to be very genuine..and logical that am able to accept, previously one or other issues am am not comfortable with various ideas/institutions available here...but vallalars work is great.I find his tamil work to be a little bit difficult to comprehend, and that is when i came across ur blog, even when i can read/write/speak tamil fluently i still find difficult to comprehend his works...am writing this note with an idea that u might help - with this problem...my mail id - kselvakumaran@gmail.com,hope u see this comment of mine...pls keep up the good work...

 
13 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:03 க்கு, Blogger செ.கதிர்வேலு கூறியது…

ஆன்மநேய அன்புடையீர் உங்கள் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி இந்த உலகத்திற்க்கு உண்மையை சொன்ன ஒரே ஞானி வள்ளலார் ஒருவர்தான்.அவருடைய தமிழ் எளிய நடையில்தான் இருக்கிறது அதை விருப்பதோடு படித்தால் எளிதாக விளங்கும்.எங்களுடைய வலைப்பூவை தொடர்ந்து படித்து வாருங்கள் வள்ளாரெழுதிய முக்கியமான செயதிகளை கொடுத்து கொண்டே வருகிறோம்.உங்களுக்கு எதாவது சந்தேகம் இருப்பின் உரிமையுடன் கேட்கலாம் உங்கள் தொடர்புக்கு எங்களுடைய அன்பையும் நன்றியையும் மனமகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொல்கிறோம்.அன்புடன் --கதிர்வேலு.

 
17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:20 க்கு, Blogger SUNDARAN கூறியது…

மாயை ஆன்மாவுக்கு உதவி செய்யுமே தவிர கெடுதல்
செய்யாது.உண்மையை தேடினால் உண்மைக்கு வழி காட்டும்.
ஆனால்.இந்த பஞ்ச பூத உலகத்தில் இதுவரை அனுபவித்த
வாழ்ந்த,பொருள்கள் அனைத்தும் திருப்பி தரவேண்டும்.இந்த கருத்து மிகவும் நுட்பமாக இருக்கிறது.
இன்னொரு சந்தேகம் வள்ளலார் அவர்கள் கடவுள் இருக்கிறது என சொல்லியிருக்கிறாரா? அல்லது இல்லை என சொல்லியிருக்கிறாரா? தயவு செய்து விளக்கவும். வணக்கத்துடன், சுந்தரம்.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு