வெள்ளி, 18 மார்ச், 2011

அருட்பெருஞ் ஜோதியை அறிவது எப்படி?

     

     (  வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் போதித்த 

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முலம் அறியவும் 

அனுபவகிக்கவும், தவறிய சன்மார்க்கிகளுக்கும், சாதி, சமய மத

வாதிகளுக்கும் ஓர் அறிய தகவல். )

       உலகமக்கள் அனைவரும் ஒருதாய் மக்களே அதுவே சன்மார்க்கம் !

மனிதகுலத்தின் எதிர்கால மார்க்கம் சுத்த சன்மார்க்கமே !

உலக சமாதானம் அடையும் ஒரே மார்க்கம் சுத்த சன்மார்க்கமே !

உலக சமய மத சாதிகளை,சடங்குகளை பூசல்களை ஒழிக்கும் 

ஒரே மார்க்கம், பொது மார்க்கம் சுத்த சன்மார்க்கமே !

உலகம் அமைதி பெற,செழிப்படைய ஒரே மார்க்கம் சுத்த சன்மார்க்கமே !

       சமரச பட்டம் பெற்றவர் வள்ளலார் ,

சுத்த சன்மார்க்கம் என்பது ,பள்ளிகளிலோ,கல்லூரிகளிலோ,

பலகலை கழகங்களில்,அறிவுத்திறன் முலம் கிடைக்கும் 

பட்டங்கள் அல்ல என்பதை உணரவேண்டும். உலகியல் 

படிப்பு அனைத்தும்  சந்தை படிப்பாகும்.வள்ளலார் காட்டிய 

சுத்த சன்மார்க்க படிப்பு,சொந்தபடிப்பாகும்.  அருள் பெரும் படிப்பு 

( அதாவது )சாகாதக் கல்வி யாகும் .சாகாத கல்வி கற்றவர்

இவ்வுலகில் வள்ளலார் ஒருவர்தான் என்பதை ,உணர்ந்த

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் (அருட்பேரொளி )வள்ளலாருக்கு

 பட்டம் சூட்டுகிறார்.என்னபட்டம் என்பதை பின்வரும் பாடலில் 

காண்போம்.  .      

கட்டமுங் கழன்றேன் கவலை விட்டு ஒழிந்தேன் 

கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச 

சட்டமும் கிழித்தேன் துக்கமும் துறந்தேன் 

சாவையும் நோவையும் தவிர்ந்தேன் 

சித்தமும் அடைந்தேன் சிற்சபை யுடையான் 

செல்வ மெய்ப்பிள்ளை என்று ஒருபேர்ப்

பட்டமுந் தரித்தேன் எனக்கு இது போதும் 

பண்ணிய தவம் பலித்ததுவே .

எல்லாம் நீயே எனக்கு துணை என, அருட்பெருஞ் ஜோதி 

ஆண்டவர் பாதமே பிடித்தேன்.எனக்கு போதிய அளவிற்கு 

அனைத்து சக்தி களையும் கொடுத்து,மரணத்தை வெல்லும்,

சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்தி,சாகா வரத்தையும் 

தந்து அன்பையும் விளைவித்து,அருட்பேரொளியால் அருள் 

அமுதம் அளித்து அருள் நிலை ஏற்றி,அருள் அறிவு அளித்து,

சாவதும் பிறப்பதும் என்னும் உலகியல் சட்டத்தை கிழித்து 

புதிய சட்டத்தை உருவாக்கி,வள்ளலார் தலைமையில் 

சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது அதை இந்த உலக மக்கள் 

அனைவரும்,சன்மார்க்கத்தை சார்ந்த சன்மார்க்க அன்பர்கள் 

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் .

விட்டு விட சொன்னவற்றை விட்டுவிட வேண்டும். 

      சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பது வள்ளலார் 

அவர்கள்,கைக் கொள்ளச சொன்னவற்றைக் கைக்கொள்வதும்,

விட்டுவிடச சொன்னவற்றை விட்டு விடுவதும் ஆகும்.இதனைப் 

பின்பற்றுபவரே சன்மார்க்கிகளாவார்கள்.இதனை பின்பற்றாதவர்கள் 

சன்மார்க்கிகளாக வள்ளலார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .

     1823 ,ஆம் ஆண்டிலிருந்து 1865 ,ஆம்ஆண்டுவரை வள்ளல் 

பெருமான் தமது 42 ,வயதுவரை சமயம் சார்ந்த சைவ சித்தாந்தத்தைப் 

பின்பற்றினார் ( மக்களை தன்வசமாக்கி பின் உண்மையை சொல்லலாம்

என்ற எண்ணத்தில் சமயத்தை பின்பற்றியுள்ளார் என்பதும் 

பொருத்தமுடையதேயாகும்) பின் இது மலமுடையது என்று 

அறிந்து அதனை விடுத்து,குற்றமில்லாத நிர்மல,சுத்த சிவ நெறியாகிய 

உண்மை நெறியை, சாதி சமய மதமற்ற,பொது நெறியாகிய 

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க சன்மார்க்கத்தை பின் பற்றினார்.

என்பதை வள்ளலாரே தெளிவுபடுத்தியுள்ளார்.

    ''அருட் சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ் அருட்சிவபதியாம் 

அருட்பெருஞ் ஜோதி '' என அருட்பெருஞ் ஜோதி அகவலில் 

அருளிச செய்துள்ளார். .

      சிவநெறி என்பது உருவமற்ற சத்திய நெறியாகும் .

சமய நெறி என்பது ;--அழிந்து போகும் அசத்திய நெறியாகும் 

என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதனை ''சாதியம் மதமும் 

சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி ''

எனும் வாசகத்தின் முலம் அறிய முடிகிறது. 

      கொல்லும் நெறியே சமயமாகும். 

    சமயங்கள் யாவும் கொல்லும் கடவுளைப் பற்றியே பேசுகிறது. 

அவைகள் கோபம் உடையது,உயிர்பலி வாங்குவது,பழி வாங்குவது.

போன்ற கருத்துக்களை சமய நுலகளே கூறுகின்றன. இதற்கு 

சமய சாத்திரங்களே ஆதாரமாகும் .அவற்றைப்பற்றி பின்வரும் 

பாடல்கள் அருட்பா ஆறாம் திருமுறையில் பதிவு செய்துள்ளார்.

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங் 

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் 

பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கெனையே

பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே 

தள்ளரிய மெய்யடியார் போற்ற மணிமன்றில் 

தனி நடஞ்செய் அரசே என சாற்றும்அணிந்தருளே .

      அடுத்த பாடலில் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளார். 

நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா 

நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இல்லை நீ 

விழித்துப்பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே 

கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே 

காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப் பொருளே 

மால் வருணம் கடந்தவரை மேல் வருணத் தேற்ற 

வயங்கு நடத்தரசே என்மாலை அணிந்தருளே .

     என பல பாடல்களில் விளக்கியுள்ளார் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி ;-சத்திய நெறியாகும் .

சமய நெறி ;--சத்திய மற்ற அசத்திய நெறி என்பதைத தெளிவுப் 

படுத்தியுள்ளார். இதனை ''சாதியும் மதமும் சமயமும் பொய்யென 

ஆதியில் உணர்த்திய ''அருட்பெருஞ் ஜோதி'' எனும் வாசகத்தின் 

மூலம்அறிய முடிகிறது .

       சமயங்கள் யாவும் கொல்லும் கடவுளைப் பற்றியே பேசுகிறது. 

அது கோபம் உடையது என்றும் கூறுகிறது.இதற்கு சமய 

சாத்திரங்களே ஆதாரமாகும். வள்ளல் பெருமான் தமது அருள் 

ஞானத்தால் அறிந்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை ப்பற்றி 

போதித்துள்ளார்.அருட்பெருஞ் ஜோதியே அருளாகவும் 

கருணையாகவும் என்றும் வீ ற்றுள்ளது எனப் போதித்துள்ளார். 

ஆகவே கொல்லாமையும்,புலால் உண்ணாமையும் சன்மார்க்கத்தின் 

முக்கிய திறவு கோளாகும் எனக் கூறியுள்ளார்வள்ளலார் காட்டிய 

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மார்க்கம் எப்படிப்பட்ட 

மார்க்கம் என்றால் ,சமய மதங்களில் உள்ள சன்மார்க்கம் இல்லை 

வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை 

யாதெனில் .. 

சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .

சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .

சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .

சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .

சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .               

     வள்ளலார் மேட்டுக் குப்பத்தில் அருட்பெருஞ் ஜோதி 


ஆண்டவருடன் சேரும் காலத்தில் (மரணம் இல்லா பெருவாழ்வு)


கடைசியாக தமது அணுக்கத் தொண்டர்களுக்கு,சமயங்களையும்,


மதங்களையும், வேதம் ஆகமங்களையும், புராணங்களையும்,


நம்ப வேண்டாம் என்று நிராகரித்துப் போதித்து அருளினார் .


ஆதியும் நடுவும்  அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி 


தன்னையே நினைமின்கள் சுகம் பெறுவீர்கள் என தெரியப்படுத்தி


யுள்ளார்.அதனை பின் வரும் பாடலில் பதிவு செய்துள்ளார். 


பாடல் 


ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி 


என்னுளத்தே நீதியிற் கலந்து நிறைந்தது,


நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் 


சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க 


வீதியில் உமைத்தான் நிறுவதல் உண்மை விளம்பினேன் 


வம்முனோ விரைந்து .


     என்றும் உலகம் முழுவதும் சாதி சமயம் மதங்களை 


இல்லாமல் செய்து,உயிர்களுக்கு துன்பம் தராத பொது நெறியாகிய 


சுத்த சன்மார்க்கத்தை வீதிகளெல்லாம் நிறுவி உண்மையை 


உலகுக்கு தெரியப் படுத்துவேன்.ஆகையால் நீங்கள் எதற்கும்


பயப்படாமல்,கவலைப்படாமல் சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றி 


அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று,மரணத்தை 


வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள் 


என்று உலக மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார் .


அத்துடன் இல்லாமல் புனைந்துரையேன், பொய் புகலேன், 


சத்தியம் சொல்கிறேன்,ஏன் என்றால் நீங்கள் அனைவரும் 


புனிதம் பெறவேண்டும் என்பதற்காக,நீங்கள் அனைவரும் 


என்னுடைய உடன் பிறப்புகள்,ஆனமநேய ஒருமை யுடையவர்கள் 


ஆதலால் கருணையுடன் உங்களை அழைக்கிறேன்,என்னுடைய


வார்த்தையை ஆண்டவருடைய வார்த்தை எனக் கருதி நம்பி 


வாருங்கள் என அழைகிறார் .


     அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை அறிந்து ஞான செலவமான


அருளைப் பெற்று ஆனந்தமான பேரின்பமான பெருவாழ்வில் 


வாழ்வோம் ,




அன்புடன் ;--கதிர்வேலு 


மிண்டும் பூக்கும்.              
                       

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு