வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நன்பருக்கு கடிதம்


Kathir Kathirvelu
ஜீவகாருண்யம் என்பது பிற உயிர்களுக்கு துன்பம் வரும்போது அதை தீர்ப்பதுதான் அதாவது துன்பத்தில் இருந்து காப்பாற்றுவது தான் ஜீவகாருண்யம் என்பதாகும்.பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை ,பயம் கொலை,துன்பம்.போன்றவைகள் அனைத்து உயிர்களுக்கும் வரும் பொதுவான துன்பங்களாகும்.அவற்றை கண்டபோதும்,கேட்டபோதும் துன்பபடுகிறார்கள் என்று அறிந்த போதும் நம்மால் முடிந்த அளவு அவற்றை நிவர்த்தி செய்விக்க வேண்டும்,அதுவே ஜீவகாருண்யம் என்பதாகும்.அப்படி செய்தால் அவர்கள் துன்பத்தில் இருந்து விலகி மகிழ்ச்சியடைவார்கள்,அவைகள் அடையும் ம்கிழ்ச்சிஅவர்கள் உயிரில் இருந்துஅணு அளைகளாக வெளிப்படும்.அந்த வெளிப்படும் ஆற்றல் என்னும் அலைகள் யார் அந்த துன்பத்தை நீக்கினறார்களோ அவட்கள் உயிரில் வந்து பதிவாகும்.அந்தபதிவு அவர்கள் உயிரையும்,உடம்பையும் தூய்மைபடுத்தும்.அப்பொழுது அவர்கள் அறிவு தெளிவான விளக்கம்டையும்.அவர்களுக்கு மேன்மேலும் உண்மைகள் தெரியவரும்.உண்மைகள் தெரியும்போது நல்லவை எது, கெட்டவை எது என்பது,அறிவின் மூலமாக அறிந்து கடவுள் அருளைப்பெறலாம்.அருள் என்பது மாபெரும் சக்திவாய்ந்தது அவை வெளிப்படும்போது நம்முடைய உயிரையும் உடம்பையும்,எந்த ஆபத்துகளும் இல்லாமல் பாதுகாக்கும்.அதுவே கடவுளை அறியும் வழியாகும்.வேறு எந்தவழியாலும் கடவுளை காணமுடியாது.இதுவே வள்ளலார் வகுத்து தந்த வழியாகும்.அவர் வாழ்ந்து காட்டிய வழியாகும்.அதை நாமும் கடைபிடித்து நல் வாழ்வு வாழலாம்.அன்புடன் ;-கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு