வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்.


Kathir Kathirvelu
அன்பரே வள்ளலாருக்கு யாரும் குருவல்ல.ஓதி உணர்ந்தவரெல்லாம் எனை கேடக ஓதாமல் உணர்த்திய என் மெய்யுறவாம் பொருளே,என்றும் ஓதாது உணர்ந்திட ஒளியளித்து எனக்கே ஆதாரம் மாகிய அருட்பெருஞ்ஜோதி என்கிறார்.ஆதலால் முதல் திரை நீக்கும் குருமார்கள் யாரும் இல்லை நாம் நம்முடைய முயற்ச்சியில் தான் நீக்கவேண்டும்.மற்ற திரைகளை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நீக்குவார்.நாம் வாங்கிய கடனை நாம் தான் திருப்பி தரவேண்டும்,நமக்காக மற்றவர்கள் கொடுத்தாலும்.அவர்களுக்கு நாம் கொடுத்தாக வேண்டும்.திரு அருட்பாவில் ஆறாம் திருமுறையில் அனைத்து உண்மைகளும் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார்.நாம் எங்கும் செல்லவேண்டாம்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாமல் தொடர்பு கொள்ளுங்கள் தெரியவேண்டியதை தெரிவிப்பார்.நமக்கு தன்னைதானே விளக்கம் கிடைக்கும்,மனதின் மூலமாக செல்லாமல் அறிவின் மூலமாக செல்லவேண்டும்.எனக்கு எந்த குருமார்களும் கிடையாது.அருட்பெருஞ்ஜோதிதான் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.பிறகு உங்கள் விருப்பம் யாரும் யாருக்கும் தடை இல்லை.இதையே உங்கள் அன்புக்காக தெரிவிக்கிறேன்.நாம் அனைவரும் இறைவனுடைய குழந்தைகள்.நாம் அனைவரும் அன்பு சகோதரர்கள் என்ற உணர்வு.30 ஆண்டுகளாக உணர்கிறேன்.ஆதலால் ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன்.உங்கள் கேள்விகளுக்கு பதில் தருகிறேன்.வேறு எந்த நோக்கமும் இல்லை.எனக்கும் ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.அவர் எப்படி என்னை கொண்டு செல்வார் என்பது தெரியாது.எப்படி செய்தாலும் நல்லதைதான் செய்வார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.எல்லாம் செயல் கூடும் என்ணாணை அம்பலத்தேஎல்லாம் வல்லான் தனையே யேத்து.அன்புடன்;-கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு