திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஒரு இரவில் தோன்றிய விஞ்ஞானம்


        திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய ஆறு திருமுறைகளில் ஆறாம் திருமுறை என்பது அருள் நிறைந்த அருட் பொக்கிஷமாகும்.அதன் இதையமாக அமைந்திருப்பது, அருட்பெருஞ்ஜோதி அகவல் ஆகும்.சன்மார்க்க ஞானி கருணை வள்ளலார் அவர்கள் ஒரே இரவில் அருளப்பட்ட அகவல் அவரது  கைப்பட எழுதப்பட்டது, அதனை வடலூர் தருமச்சாலையில் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது,அனைவரும் பார்த்து மகிழலாம் ,கண்ணால் கண்டும் மனதால் உருகியும் வழிபட்டு வருகின்றனர் .  

      இன்று விஞ்ஞானம் அறிவியல் ஆய்வாளர்கள் கூறும் விஞ்ஞான உண்மைகள்  அருட்பா அகவலில் அடங்கியுள்ளன.அதற்கு மேலும் அறிய முடியாத அதிசிய உண்மைகள் அருளால் அறிவிக்கப்பட்டுள்ளன.

      பூமி சூரியனைச சுற்றிவருகிறது சூரியனைச சுற்றி கோள்கள் பல சுழல்கின்றன.இது அண்டப்பகுதி, இத்தகைய அண்டப்பகுதிகள் வானில் உள்ளன என்று விஞ்ஞானம் அறிவித்துள்ளன .அணுவில் ஒளி இயங்கிக் கொண்டு இருக்கின்றன,என்றும் விஞ்ஞானம்,அறிவியல் சொல்லுகின்றன,
இன்று கண்டு பிடிக்கும் விஞ்ஞானம் அடுத்து ஆராச்சியில் பொய்யாகிவிடுகின்றன

     அகவலில் வள்ளலார் கூறுவதை பார்ப்போம் 

அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள் 
பண்டமும் காட்டிய பரம்பர மணியே 

பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள் 
பண்டமும் காட்டிய பராபர மணியே .

அண்ட கொடிகளெல்லாம் அரைக்கனத்தேகி கண்டு 
கொண்டிட ஒளிர் கலை நிறை மணியே .

      என்கிறார் வள்ளல் பெருமான் .பல கோடி அண்டங்கள் நம் ஊனக் கண்களுக்கு தெரியாமல் தன்னைத்தானே ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன,அத்தகைய அண்டப்பகுதிகள் அனைத்தும் சேர்ந்தது ஒரு பகிரண்டம் என்கிறார்,பேரண்டம் என்கிறார் .
     வள்ளலார் அண்டங்கள் எப்படி இயங்கிக் கொண்டு இருக்கின்றன் எனபதைபின் வரும் பாடலில் தெளிவுபடுத்துகிறார்.
    ஒருபிரமன் அண்டங்கள் அடி முடிப்பெருமையே உன்னமுடியாது,அவற்றினோராயிரம் கோடி மாலண்டம்,அரனண்டம், உற்ற கோடாகோடியே திருகலறு பலகோடி ஈசன்ண்டம்,சதாசிவனண்டம்,மெண்ணிறந்த திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர்தஞ் சீரண்டம் என்புகழ்வேன்,உருவுறு மிவ் வண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடசைய  அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒரு பெருங்கருணை அரசேஎன்கிறார் அணடங்கள் இன்றளவும் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கின்றன அதனை அண்டவெளி என்கிறது ஆறாம் திருமுறை என்னும் திருஅருட்பா.அதை வள்ளலார் தெளிவுபடுத்தியுள்ளார் உலகமே வியந்து அருட்பாவை ஆராய்ச்சி 
செய்ய தயாராகிக் கொண்டு இருக்கின்றன.

    நம் கண்ணுக்குத் தெரிவது தூலவெளி.ஆகும்.கண்களுக்குத் தெரியாத வெளிகள் சூட்சுமவெளிகளாகும். அதில காரணவெளி,காரியவெளி,காரணகாரியவெளி,மகாகாரணவெளி என்றெல்லாம்
இருகின்றன,இதற்கு அறிவியலார் வேறுபெயர்கள் வழங்குகின்றனர்.
    
      மகா பேர் அண்டத்தில் அளவிட முடியாத பல கோடானுகோடி அண்டங்களும்,சூரியன்களும்,கோள்களும்,நம் பூமியைப்போல் பல்லாயிரக்கணக்கான பூமிகளும்,உலகங்களும்,தன்னைத்தானே இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்று திருஅருட்பா தெளிவாக்கி இருக்கிறது..அவைகளில் நம்மை விட மேலான சக்தி படைத்த அருளாளர்கள் இருக்கின்றனர் என்பதை வள்ளல் பெருமான் உண்ர்த்தியுள்ளார்..  வெளியினில்  சக்திகள் வியப்புறு சத்தர்கள் அளவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி என்று அகவலில் உண்ர்த்தியுள்ளார்.

    பூமியைச் சுற்றி காற்று மண்டலம் சுழல்கிறது. அதனை வலி மண்டலம் என்கிறோம்.வலிமண்டலத்திற்கு மேல் ஓடுபோல் சூழ்ந்துள்ள அமைப்பு ஒன்று உள்ளது,அதை விஞ்ஞானிகள் ஓசோன் என்று கூறுகின்றனர்,அந்த ஓசோன் சூரியனில் இருந்து வெளியாகும் உயிர்களை அழிக்க வல்ல ஊதாக் கதிர்களைத் த்டுக்கிறது,வளி மண்டலம் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுத்து பிடிக்கப்பட்டுள்ளதால் இவ்வுலக வாழ்வில் உயிர்கள் ஊறு இன்றி வாழ்கின்றன,இல்லையெனில் எவ்வுயிரும் வாழ முடியாது,இந்த உண்மையைத்தான் வள்ளல் பெருமான் சக்திகள் என்று கூறுகின்றார்.சத்தர்கள் என்றும் விளக்குகிறார்,அறிவியல் உண்மையோடு இணைத்த்ப்பார்க்கும் போது எல்லாம் தானே விளங்கும்.            

     பூதங்கள் ஐந்தாகும் நிலம்,நீர், நெருப்பு,காற்று ஆகாயம்,ஆகும் .ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்புடையது.ஒன்றுக்குள் ஐந்தும் அடங்கியுள்ளது. என்பதை பெருமான் அகவலில் அர்றிவுறுத்துகிறார்.பிண்ணிப் பினைந்திருப்பதைக் காட்டுகிறார். நீர்மேல் நெருப்பும், நெருப்பின்மேல் உயிர்ப்பும்,ஆருற வகுத்த அருட்ப்ருஞ்ஜோதி என்பதை உணர்த்துகிறார்.அடுத்து வானிடைக் காற்றும்,காற்றிடை புவியும்,நெருப்பிடை நீரும்,நீரிடைப்புவியும்,என்றுவிளக்குகிறார்.அண்டவெள,அகப்புறவெளி,ஐம்பூதவிரிவு, வெளிவகை விரிவு,முதலியன விஞ்ஞான உலகிற்கு பெருமான் தந்த ஆய்வுரையாகும்.வியக்கும் உண்மைகளாகும் .அண்டத்தில் உள்ளவைகள் யாவும் மனித பிண்டத்தில் (உடம்பில்) உள்ளன என்கிறார் வள்ளல் பெருமான்..அருள் பெறுகின்ற போது எல்லாம் விளங்கும் என்கிறார்.அருள் எவ்வாறு விளங்கும் அறிவை ஆறிவால் அறிகின்ற போது அனுபவம் தோன்றும்.கடவுள் ஒருவரே அவர் அருட்பெரும் ஒளியாக உள்ளார்.அவருடைய ஒளியின் மூலமாக எல்லா உயிர்களும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன்,ஆதலால் எல்லாஉயிர்களையும் தம் உயிர்போல் பார்க்கும் அறிவு விளங்க வேண்டும்.அதைத்தான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்கிறார் நம வள்ளல் பெருமானார். அன்புடன் கதிர்வேலு.---மேலும் பூக்கும் . 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு