புதன், 11 ஆகஸ்ட், 2021

தூக்கத்தை தொலைக்க வேண்டும் !

 *தூக்கத்தை தொலைக்க வேண்டும்*


உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலரே என்பார் வள்ளலார்.


*ஒரு மணிதன் ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் தூங்கப் பழகினால் ஆயிரம் வருடம் உயிரோடு வாழலாம் என்பார்*


இவ்வுலகில் தூங்குவதே சுகம் என்பதால் நிறைய நேரம் மக்கள் தூங்கிக்கொண்டே இருப்பார்கள்.

தூங்காமல் விழித்திருக்கும் சூது(உளவு) அறிவித்து எனையாண்ட துரையே என்பார் வள்ளலார்.


தூக்கமுஞ் சோம்பலும் என் துன்பமும் அச்சமும்

ஏக்கமும் நீக்கிய என் தனித் ததாயே! ( அகவல்)


தூக்கத்தால்  சோம்பல் துன்பம் அச்சம் ஏக்கம் உண்டாகி உயிர் பிரியும் நிலை ஏற்படுகிறது.

எனக்கு அவ்வாறு உண்டாகாமல் தூக்கத்தை நீக்கிய என் தனித்தாயே என்கிறார் வள்ளலார்.


*உணவு உண்பதாலும்  உழைப்பதாலும்* *உடம்பில் உள்ள தத்துவ உறுப்புகள் அதிகமாக இயங்குகிறது*. இயக்கத்தின் கலைப்பால் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உண்டாகி தூக்கம் வருகிறது.


*தூக்கம் வருவதற்கு காரணம் உணவு*


வள்ளலார் பாடல்!


அன்னம் உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்

அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்

உன்னைநினைத் துண்டேன் என் உள்ளகத்தே வாழும்

ஒருதலைமைப் பெருந்தலைவர் உடையஅருட் புகழாம்


இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்

இரதமும் என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்

கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே

களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.! 


பசியின் உணர்வில்லாமல் இறை உணர்வோடு வாழ்ந்தவர் வள்ளலார்.

வள்ளலாரின் பசியை அறிந்து பொருள் உணவை நீக்கி அருள் உணவை வழங்கினார் ஆண்டவர்.


உடம்பு இயக்கம் ! 


*தூங்குகின்ற தருணத்தில் ஆன்மா உயிர் விழிப்பு நிலை இழந்து மயக்க நிலைக்கு வந்து விடுகிறது*.

*அதனால் உடம்பிற்குள் இருள் சூழ்ந்துவிடுகிறது.இருளில் தத்துவங்கள் தன் விருப்பம் போல் இயங்கி ஆன்ம சக்தியை கிரகித்து கொண்டே இருப்பதால் உடல் உறுப்புக்கள் அதிகம் பாதிப்படைந்து முதிர்ச்சி பெற்று சோர்வடைந்து இறுதியில்  இயங்க முடியாமல் உடம்பை விட்டு உயிர் பிரிந்து விடுகிறது.* 


உதாரணம் !


*ஒருவீட்டில் வெளிச்சம் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் தூங்கினால் திருடன் வீட்டிற்குள் புகுந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிக்கொண்டு சென்றுவிடுவான்*.

*அதே போல் நாம் தூங்குகின்ற தருணத்தில் நம் உடம்பில் உள்ள விலை மதிப்பில்லா ஆன்மசக்தி கலைகள் மற்றும்  பிராண சக்திகள் அதிகம் விரயமாகிவிடும். அதனால் உயிர் இயக்கம் குறைந்து  தத்துவ உறுப்புக்கள் இயங்க முடியாமல்  உடம்பின் இயக்கம் நின்று  மரணம் வந்து விடுகின்றது.


*வள்ளலார் தூங்கிய வரலாறே இல்லை !*


வள்ளலார் பாடல் !


*தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்*

*தொலைந்தன* *தொலைந்தன* எனைவிட்

டேக்கமும் *வினையும் மாயையும்* *இருளும்*

*இரிந்தன ஒழிந்தன*  முழுதும்


*ஆக்கமும் அருளும்* *அறிவும்மெய் அன்பும்*

*அழிவுறா உடம்பும்*

 *மெய் இன்ப*

*ஊக்கமும்* *எனையே உற்றன*  உலகீர்

*உண்மை இவ் வாசகம் உணர்மின்.!* 


*தூக்கம் வந்தால் மாயை. வினை. இருள் மூன்றும் ஆன்மாவை கவ்விக்கொள்ளும் என்பதால் நான் தூங்காமல் விழித்திருந்து ஆக்கமும் அருளும்  அறிவும் மெய் அன்பும் மெய் இன்ப ஊக்கமும் பெற்றேன் இவ்வுண்மை வாசகத்தை அறிந்து தெரிந்து நான் சொல்வதை உணர்ந்து பின்பற்றுங்கள் என்கிறார்* 


*தூங்குகின்றவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்க வாய்ப்பே இல்லை* 


*எனவேதான் பசித்திரு தனித்திரு விழித்திரு என்கின்றார்*


*வள்ளலார் பாடல்!*


 தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது

துரைவரும் ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ


ஈங்கினி நான் தனித்திருக்க வேண்டும் ஆதலினால்

என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடைய தாக்கி


ஏங்கலறப் புறத்தே போய்த் தூங்குக நீ தோழி

என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே


ஓங்குறவே நான் அவரைக் கலந்தவரும்எல்லா நானும்

ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.! 


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்போது வருவார் என்பது தெரியாது. தூங்கிவிட்டால் ஆண்டவர் வந்து அருள் வழங்காமல் சென்றுவிடுவார்.

ஆதலால் நான் தூங்காமல் விழித்து இருக்கின்றேன் என்றும் தூக்கத்தை விரட்டி அடிக்கின்றார். தூங்காமல் இருந்தால்தான் என் கணவர் வந்து எனை இணைந்து  அணைந்து அருள்வழங்குவார் என்பார்.


மேலும் சொல்லுகின்றார்.


தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே

ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - 


ஆக்கமிகத்

தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க

வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.! 


தூக்கம் கெடுத்ததான் சுகம் கொடுத்தான் என் ஏக்கம் எலாம் தீர்த்தான் என்றும் மேல்கொண்டு ஆக்கம் எல்லாம் தந்தான் என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லுகின்றார்.


உண்மையுடன் ஆண்டவரை நினைப்பவர்களுக்கு அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்பார்.


*ஆதலால் சோறு போடுவதால் மட்டுமே மரணத்தை வெல்லமுடியாது*


அது ஆரம்பநிலை  நாம் உண்ணாமலும் உறங்காமலும் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்*


அருள் உணவிற்காக விழித்திருப்பவரே சுத்த சன்மார்க்க சுகநிலை அடையும் தகுதிப் பெற்றவராகும்.

  

வள்ளலார் பாடல்!


தூக்கம் தொலைத்தான்

என்று ஊதூது சங்கே

துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே

ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே

ஏம சபையான் என்று ஊதூது சங்கே.!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு