புதன், 14 ஜூலை, 2021

வள்ளலார் திருமணம் !

 *வள்ளலாரின் திருமணம்!* 

சென்னையில் இராமலிங்கத்தின் தாயார் சின்னம்மை உடன்பிறந்தோர் *சபாபதி* *சுந்தராம்பாள்* *பரசுராமன்*

*உண்ணாமுலை* ஐந்தாவதாக இராமலிங்கம் என்னும் வள்ளலாரும் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

*ஓதாது உணர்ந்தவர் இராமலிங்கம்*

இளமையிலே இராமலிங்கம் ஓதாது உணர்ந்தவராக விளங்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே. 

உலகியல் இன்பத்தில் நாட்டம் கொள்ளாமல் இறை சிந்தையிலே அதிக பற்றும் விருப்பமும் கொண்டு பல ஆலயங்கள் தோறும் சென்று கவிபாடும் ஆற்றல் உள்ளவராக திகழ்ந்தார்.  

*இராமலிங்கம் மன்மதனைவிட அழகில் சிறந்தவர் அதனால் தம் உடம்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்துக்கொள்வார்*

*திருமணம் ஏற்பாடு*

தாயார் சின்னம்மை மற்றும் உற்றார் உறவினர் வற்புறுத்தலால். இராமலிங்கத்திற்கு  திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து முயற்சி மேற்க் கொண்டார்கள்.

*இராமலிங்கத்திற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.* விருப்பம் இல்லாதிருந்தும் தாயார் சின்னம்மைக்கு. தன் உயிர் உள்ளபோதே  தம் கடமையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம்  செய்தே ஆகவேண்டும் என்ற விருப்பத்தோடும் வேகத்தோடும் பெண்பார்க்கும் படலம் ஆரம்பமானது. 

*உண்ணாமலை மகள் தனம்மாள்* ! 

(வள்ளலார்) அக்காள் மகள் தனம்மாளுக்கு தன் இராமலிங்க மாமாவைப்பற்றி சிறுவயதுமுதல் நன்கு அறிந்தவர்.அவர் தன் அம்மாவிடமும் பாட்டியிடமும் *ராமலிங்கம் மாமாவை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று அன்புடனும் ஆசையுடனும் சொன்னார்.* அதைக்கேட்ட பாட்டி சின்னம்மையும் தாய் உண்ணாமுலையும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

தனம்மாள் விருப்பத்தை இராமலிங்கத்திடமும் எடுத்து சொன்னார்கள்.

*தடை சொல்ல  முடியாமல் இறைவன் சம்மதம்  எதுவாக இருந்தாலும் நடைபெறட்டும் எல்லாம் இறைவன் செயல் என அமைதியானார்*.

*உற்றார் உறவினர் நண்பர்கள் சூழ தனம்மாள் கழுத்தில் இராமலிங்கம் மாங்கல்யத்துடன் தாலியைக்கட்டவும் திருமணம் சிறப்பாக நிறைவாக ஆண்டவர் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாக நடைபெற்றது.*

*முதல் இரவு நிகழ்ச்சி* 

*இராமலிங்கரையும் தனம்மாளையும் முதல்இரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்*. பால் பழங்கள் வைத்திருந்தனர். *இருவரும் பாயில் அமர்ந்து கொண்டார்கள்*.

சற்றுநேரம் அமைதிக்குபின் இராமலிங்கம் பேசுகிறார்.

*நீ எதற்காக என்னைத் திருமணம் செய்துகொண்டாய்* *என்னிடம் என்ன இன்பம் அனுபவிக்கப் போகிறாய் என்று தனம்மாளிடம் கேட்கிறார்* 

*அதற்கு தனம்மாள் நீங்கள் எனக்கு தாலிகட்டும்போது உங்கள் கரங்கள் என்மீதுபட்டது அப்போதே என் உடம்பெல்லாம் ஓர் அருள்சக்தி ஊர்ந்து செல்வதை உணர்ந்தேன்.அப்போதே எனக்கு எல்லா இன்பமும் கிடைத்துவிட்டது என்கிறார்* *அதற்குமேல் வேறு எந்த இன்பமும் எனக்கு வேண்டாம் என்கின்றார்*.

அந்த வார்த்தையைக் கேட்டவுடன் இராமலிங்கம் அதிர்ந்து ஆச்சரியத்துடன் அமைதியானார்.

*மேலும் தனம்மாள் சொல்லியது* 

உங்களை சிறுவயதுமுதலே எனக்கு நன்குத்தெரியும்.

நீங்கள் இறைவனின் குழந்தை என்பதும் தெரியும். உங்களுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டி பாட்டியும் அம்மாவும் வேறு பெண்ணைத் தேடியதும்தெரியும்.

*வேறு பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்கள் அருள்பயணம் துண்டிக்கப்படும் தடைபடும் என்பதாலும்*. தடையில்லாமல்  தொடர்ந்து உங்கள் அருள்பயணம் வெற்றிபெற வேண்டும் என்பதாலும்.

*என் தாய் மாமாவாகிய நீங்கள் என்னை மட்டுமே தொடவேண்டும் என்ற அன்புகலந்த விருப்பம் மற்றும் பேராசையால்தான் திருமணம் செய்து கொண்டேன்* *என்று ஆனந்த கண்ணீர் மல்க தெளிவாக எடுத்துரைத்தார்.*

தனம்மாள் சொல்வதைக் கேட்ட இராமலிங்கத்தின் பார்வைக்கு *தனம்மாள் அருள்சத்தியாகவே காட்சி அளித்தார்.*   

*நான் வணங்கும் அருள் சத்தியாகவே உன்னை நினைக்கிறேன் என்றார். அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள்தான் எனக்கு கண்கண்ட தெய்வம் என்றார் தனம்மாள்* இருவரும் உரையாடிக்கொண்டே இருக்க இரவு விடிந்தது.

*விடைப்பெற்று செல்லுதல்* 

இனிமேல் *உங்கள் அருள் பயணம் தடையில்லாமல் வெற்றிபெற வேண்டும்.இறைவன் உங்களை ஆட்கொள்ள வேண்டும்* என்று சொல்லிக்கொண்டே தனம்மாளும் இராமலிங்கமும்  கதவைத்திறந்து  வெளியே வருகிறார்கள்.

*வெளியே காத்திருக்கும் உறவினர்கள்* 

பாட்டி அம்மா பெரியம்மா மாமன்மார்கள் அனைவரின் முன்பு தனம்மாள் ஒரு நீண்ட அருள் உரைபோல் தெளிவான விளக்கம் நிகழ்த்தி தன் அன்பு கணவர் மாமா இராமலிங்கத்தின்  அருள்பயணத்திற்கு யாரும் தடை  செய்யவேண்டாம் சஞ்சலப்படவேண்டாம் என்று ஆனந்த கண்ணீர்விட்டு  வழிஅனுப்பி வைக்கிறார். 

அதைக்கண்ட உறவினர்கள் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மெய்ப்பொருள் காணச்செல்லும் இராமலிங்கத்திற்கு ஆனந்த கண்ணீர்விட்டு அழுது புலம்பி *தனம்மாள் விருப்பபடி தடைசொல்லாமல் மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கிறார்கள்*.

இராமலிங்கம் என்னும் வள்ளலார்  அனைவரின் அன்பையும் ஆசியையும் சிரமேற்க்கொண்டு வணங்கி மகிழ்ந்து வாழ்த்தி விடைபெற்றுக்கொண்டு தன்னுடைய  அருள்பயணத்தை மேற்கொண்டு தொடர்ந்து செல்கிறார். 

*வள்ளலார் பாடல்!* 

முனித்த வெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்

தனித்தனி ஒருசார் மடந்தையர் *தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்*

குனித்தமற் றவரைத் *தொட்டனன் அன்றிக் கலப்பிலேன்* மற்றிது குறித்தே

பனித்தனன் நினைத்த தோறும் உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.! 

மேலே கண்ட பாடலில் ஒரு பெண்ணை தாலிகட்டும்போது தொட்டுள்ளேன் அன்றி

கலப்பிலேன் ( உடல் உறவு கொள்ளவில்லை) என்கிறார் வள்ளலார். 

*உலகியலார் கேள்வி*

*வள்ளலார் ஒரு பெண்ணை திருமணம் முடித்து அம்போ என்று விட்டுவிட்டு போய்விட்டார் என்று சிலபேர் ஏளனமாக பேசுவதும் உண்டு* 

*என்னிடமே சிலபேர் வள்ளலார் திருமணம் முடித்து மனைவியை விட்டுவிட்டு செல்வது சரியா ? என்று  கேட்பவர்களும் உண்டு*.

வள்ளலார் வாழ்க்கை வரலாறு எழுதியவர்கள் திருமணம் முடிந்து முதல் இரவில் தன்மனைவி தனம்மாளிடம் *திருவாசகம் என்ற நூலை* கொடுத்துவிட்டு இராமலிங்கம் சென்றுவிட்டார் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.அதனால் மக்கள் குழப்பத்தினால் பலவிதமான கேள்வி கேட்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த அனுபவத்தின் வாயிலாக இக்கட்டுரையைத் தந்துள்ளேன்.

இக்கட்டுரை மக்கள் சந்தேகத்திற்கு விடைதரும் என நினைக்கிறேன்.(விரிக்கில் பெருகும்)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சிமையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு