ஞாயிறு, 3 மே, 2020

கொரோனோ வைரஸ்!

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

2020.மார்ச்சு மாதம் முதல் மே மாதம் வரை இந்தியாவின் நிலை.

மனிதனை மனிதன் தொடாமல் தனித்து இருப்பது.

ஆண் பெண் உறவு கொள்ளாமல் இருப்பது.

குடும்பத்தில் உள்ளவர்கள் வாய்கவசம் போட்டுக் கொண்டே இருப்பது.

வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளே அடங்கி கிடப்பது.

காய்கறிகள் மளிகை சாமான்கள் போன்ற உணவுப்பொருள்கள் வாங்குவதற்கு வழிதெரியாமல் திண்டாடியது.

காய்கறிச்
சந்தைகளாய் மாறிப்போன
*பேருந்து நிலையங்கள்.*!

நடமாடும்
மருத்துவ மனைகளாக
மாறிப்போன *ரயில் பெட்டிகள்.!*

கதவடைக்கப்பட்ட
*வழிப்பாட்டுத் தளங்கள்.!*

காக்கும் கடவுளர்களாக
உருவகம் கொண்ட
*மருத்துவப் பணியாளர்கள்.!*

தீண்டாமை ஒரு
புண்ணியச் செயலென
மாற்றிய *நுண்ணுயிரி.!*

இருபது நபர்களுக்கு மிகாமல்
ஆடம்பரங்களின்றி நடந்த
*திருமணங்கள்.!*

சாலை விபத்துகள்
பற்றிய செய்திகளின்றி
வெளியாகிய *செய்தித்தாள்கள்.!*

காட்சிகள் காட்டாமல்
மூடப்பட்டிருந்த *திரையரங்குகள்.!*

சமையலறைக்குள்
தஞ்சமடைந்த *கணவன்கள்.!*

சீரியல்கள் தொல்லையின்றி
நல்ல முறையில் நேரம்
செலவழித்த *மனைவிகள்.!*

பரபரப்புகளில் ஓடித்திரிந்து
நிதானத்தை பழகிக்கொண்ட
*இன்றைய தலைமுறையினர்.!*

தானாகவே
குறைந்துபோன *காற்றின் மாசு.!*

சுதந்திரமாய் சுற்றித்திரிந்த
*பறவைகள், விலங்குகள்.!*

பழங்கதைகள் பேசி
பல்லாங்குழி ஆடி குடும்பமாய்
மாறிய *குடும்பங்கள்.*!

இவற்றோடு...
ஆயிரம் கிலோமீட்டர்களை
பசியின் கொடுமையோடு
நடந்தே தாண்டிய *நாடோடி*
*உழைப்பாளிகளின் கால்கள்*

*எழுதி வையுங்கள்...*
*இல்லையெனில்*
*வருங்காலத்தில்*
*யாரும் நம்ப மாட்டார்கள்.!*

**தனிமை நாட்கள்-41**
(மேலும் 15 ++? நாட்கள்)

✍✍✍✍

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு