வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கிண்டல் அடித்த சமுதாயம் !

*கிண்டல் அடித்த சமுதாயம்* !

வள்ளலார் கொள்கையில் முக்கியமானது ஜீவகாருண்யம்.
அதில்  *பசிப்பிணியை போக்குவதே முதல் செயலாகும்*.

* *அடுத்து உயிர்க்கொலை செய்யக்கூடாது அதன் புலாலை உண்ணக்கூடாது என்பதாகும்*

*அதற்காகவே வள்ளலார் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் நாள் வடலூரில் சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார்*

சாதி.சமயம்.மதம் சாராத உலகப்  பொதுநெறியான திருநெறியை *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற பெயரில்   1872 ஆம் ஆண்டு வடலூர் தோற்றுவித்தார்.

அதே தேதியில் உலகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் ஒரே கடவுள் என்ற கொள்கையை ஆன்மீக அருளியல் ஆதாரத்துடன் மக்களுக்கு தெரிவிக்கும் நோக்கத்துடன். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* தோற்றுவித்துள்ளார்*

*கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்ற உண்மையை உலக மக்களுக்கு அழுத்தமாக தெரியப்படுத்துகின்றார்.
கடவுள் ஒளியாக உள்ளார் என்பதனால் சத்திய ஞானசபையில் ஒளி வழிப்பாட்டை ஏற்படுத்தி இன்றுவரையில் தொடர்ந்து தினமும் ஒளிவழிபாடு நடந்து கொண்டு வருகின்றது.

* *உண்மையான ஒளி வழிபாட்டை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளபட்டது*.
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்னும் உண்மையை. வள்ளலார்  ஏற்படுத்திய சன்மார்க்க சங்கங்களின் வாயிலாக உலக  மக்களுக்கு தெரிவித்து *ஜீவகாருண்ய பணியை*.உலகில் உள்ள எல்லா சன்மார்க்க சங்கங்களும் கடைபிடித்தும். செயல்படுத்திக் கொண்டும் வருகிறார்கள்.

சன்மார்க்க சங்கங்களில் ஏழை எளிய வசதி இல்லாத வறுமையில் வாடும் மக்களுக்கும். பசியோடு வருபவர்கள் யாராக இருந்தாலும் ஏழை பணக்காரன்.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இல்லாமல் சாதி சமய மத வேற்றுமை இல்லாமல் அனைவருக்கும் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறார்கள்.

*கேலி கிண்டல் செய்தார்கள்* !

சன்மார்க்க சங்கங்களில் எல்லோருக்கும் அன்னதானம் ((சோறுபோட்டு) வழங்கி வேலைக்கு போகாமல் மக்களை சோம்பேரிகளாய் ஆக்கி விட்டார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்தார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பார்த்தார்.. உலகமே பயந்து நடுங்கும் வகையில் கொரோனோ என்ற கொடூரமான தொற்று வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
அனைவரும் அறிந்த்தே.

அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டும் என்ற தடை உத்தரவை உலகமே செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

நம் இந்தியநாடும் தடை உத்தரவை கடைபிடித்து வருகின்றது. தமிழ்நாடும் தமிழக அரசும் கடைபிடித்து வருகின்றது.

இன்று ஏழை எளிய ஆதரவு அற்ற அனைத்துதர  மக்களும் வேலை இல்லாமல் .வேலைக்கு போகமுடியாமல்.பொருளாதாரம் இல்லாமல்  பசியால்  வாடி வதங்கி பசிவேதனையை தாங்க முடியாமல்.மக்கள் தினமும்  சொல்ல முடியாத வேதனையில் துவண்டு கொண்டு உள்ளார்கள்.

*நரகவேதனை. ஜன்னவேதனை. மரண வேதனையைவிட மிகவும் கொடுமையான வேதனை  பசியின் வேதனை* என்பதை அருள் அனுபவத்தில் அறிந்துதான் சத்திய தருமச்சாலை யை நிறுவினார் வள்ளலார்.

இன்று அரசியல் வாதிகள்.ஆன்மீகவாதிகள்.தொண்டு நிறுவணங்கள்.சினிமாத்துறையை சார்ந்தவர்கள்.வியாபார நிறுவனவ்கள்.விவசாயிகள்.மற்றும் தனிநபர்கள்.ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகள் போட்டிப்போட்டுக் கொண்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறார்கள்.

உயிர்களின் பசியின் அவத்தையை .பசிப்பிணியை புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்தவர்கள்.
கேலிசெய்தவர்கள் எல்லாம் சோற்றுக்காக வரிசையில் காத்துக் கொண்டு
உள்ளார்கள்.என்பதை மக்கள் தினமும் கவனித்துக் கொண்டு உள்ளார்கள்.

மக்களை நல்வழிப்படுத்தவே இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார் .

இனி வள்ளலார் சொல்லிய வண்ணம் ஒழுக்க நெறிகளை மக்கள் கடைபிடித்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல். மகிழ்ச்சி யுடன் வாழலாம்.

*இல்லையேல் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை*.

 வள்ளலார் பாடல் !

உண்மை யுரைக் கின்றேன் இங் குவந்தடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறிஅழி யாதீர்

எண்மையினான் எனை நினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள்அமர்ந்து இசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்து விரைந் தேறுமினோ சத்திய வாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே.!

என்ற பாடலின் வாயிலாக உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக சொல்லுகின்றார்.

எல்லாம் செய்ய வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து சொல்ல சொல்ல நான் சொல்கிறேன் என்கிறார்.

நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு