வெள்ளி, 15 டிசம்பர், 2017

ஆன்மாவும் தேகங்களும் !

ஆன்மாவும் தேகங்களும் ! ஆன்மாவானது .அகண்ட பெருவெளியான அருட்பெருவெளியில் (அதாவது ""அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்"' இயங்கிக் இயக்கிக் கொண்டு இருக்கும் இடத்தில்) உள்ளனவாக உள்ளது.அதற்கு ஆன்ம ஆகாசம் என்று பெயர். ஆன்மாக்களை அருள் அசைவினால்(விசிரிம்பத்தல்) வெளியேற்றப் படுகின்றது.ஆன்மா அருளால் அனுப்பப் படுவதால் அன்பு.தயவு.அருள்.கருணை.ஆனந்தம் இயற்கையாக உள்ளதாக விளங்கப்படுகின்றது. ஆன்மா இவ் பூத உலகத்திற்கு வந்து பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து இறுதியில் மனித தேகம் கொடுக்கப் படுகின்றது.மனித தேகத்தில் வாழ்வதற்கு ஜீவ சுதந்திரம்.தேக சுதந்திரம்.போக சுதந்திரம் கொடுக்கப் படுகின்றது.அந்த சுதந்திரத்தை பயன் படுத்தும் வகையில் தான் வாழ்க்கை அமைகின்றது... போக சுதந்திரத்தை அதிகம் விரும்புவதால்.ஜீவன் என்னும் உயிரையும்..ஆன்மாவையும். ஆன்மாவை அனுப்பிய அருட்பெருஞ்ஜோதி யையும் மறந்து. தேக சுதந்திரம் என்னும் போகத்திலே வாழ்கின்றது.இறுதியில் சலிப்பு என்னும் துன்பம் வருகின்றபோது .எங்கு செல்ல வேண்டும் என்ற வழித்தெரியாமல்.தேகம் பழுது அடையும் தருணத்தில். உடம்பை விட்டு உயிரும்.ஆன்மாவும் பிரிந்து விடுகின்றது.இதற்குப் பெயர்தான் மரணம் என்பதாகும்....இப்படியே பிறந்து பிறந்து.இறந்து இறந்து வெவ்வேறு உடம்பு எடுத்துக் கொண்டே வாழ்ந்து வருகின்றது... மூன்று சுதந்திரத்தையும் விட்டுவிட்டு. அருள் என்னும் சுதந்திரத்தை பெற்றால் மட்டுமே .ஆன்மா வந்த இடம் தெரிந்து செல்ல முடியும்.அதற்குப் பெயர்தான் பேரின்ப வாழ்வு என்பதாகும். ஆன்மா தன்னை அறியாமல் வாழ்வதால் .போக சுதந்திரத்தினால் ஆன்மாவை சுற்றி அறியாமை என்னும் மாயா திரைகள் மறைத்துக் கொண்டு உள்ளன.திரைகள் நீங்கினால் தான் ஆன்மா தன்னை அறிய முடியும்.ஆன்மா தன்னை அறிந்தால் மட்டும் போதாது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் தொடர்பு கொண்டு அருள் பெறல் வேண்டும். அருளால் போக சுதந்திரத்தையும். தேக சுதந்திரத்தையும்.ஜீவ சுதந்திரத்தையும். நீக்கி ஆன்ம சுதந்திரம் பெற்று .அருள் சுதந்திரம் பெற்று .கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடைய முடியும்.இதுதான் வள்ளலார் காட்டிய. காட்டுகின்ற சுத்த சன்மார்க்க புது தனி நெறியாகும்.புதிய பாதையாகும். அருளைப் பெறுவதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ.அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வெளியே வரவேண்டும் என்கிறார் வள்ளலார்.... வள்ளலாருக்கு முன்னால் வந்த அருளாளர்கள் தவறான வழியைக் காட்டி மக்களை குழப்பி விட்டார்கள் என்று சொன்னால் .சமய மத வாதிகளுக்கு கோபமும்.வருத்தமும் வருகின்றது.அதற்கு நாம் என்ன செய்ய முடியும்... வள்ளலாரே பதிவு செய்கின்றார்.! குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனதுமெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.! என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார். நாம் என்ன செய்ய வேண்டும்....நம் உடம்பில் ஆன்மா இயங்கிக் கொண்டு இருக்கும் இடமான சிற்சபையைத் தெரிந்து.இடைவிடாது தொடர்பு கொண்டு துதிக்க வேண்டும் என்கிறார்....உண்மை அறியாமல் புறத்திலே தேடாதீர்கள்.அன்பும் விளங்காது.தயவும் விளங்காது.அறிவும் விளங்காது.கருணையும் தோன்றாது.அருளும் கிடைக்காது என்கிறார்.. நான் சொல்லுவது.நீங்கள் இதுவரையில் படியாத படிப்பு என்கிறார் முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.! என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார் இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்களை திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார். இன்னும் என்ன சந்தேகம் நமக்கு... ஜீவகாருண்ய உணர்வோடு ..நன்கு சிந்தித்து படித்தால்தான் அறிவு விளங்கும். மேலும் சிற்சபையில் உள்ள ஆன்மாவின் தன்மையை புறத்திலே ஒளிவடிவமாக காட்டி உள்ளேன் ஒளியே கடவுளாக பாவித்து வழிபாடு செய்யுங்கள்..வழிபாடு செய்யும் போது இறைவனிடம் விண்ணப்பம் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தியுள்ளார்... அவை யாதெனில்:---- எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! இது தொடங்கி எக்காலத்தும் .சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள் எனபவற்றின் .ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் .வருணம்.ஆசிரம்ம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்.எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள்.எக்காலத்தும்.எவ்விடத்தும்.எவ்வித்த்தும்.எவ்வளவும்.விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.. எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங்கருணக்கு வந்தனம்! வந்தனம் ! என்னும் விண்ணப்பத்தை சன்மார்க்கிகள் வழிபாட்டு நேரத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் வேண்டுகோள் வைத்து. சமய.மதங்களின் கொள்கையில் இருந்து விலக வேண்டும் என்றார்... மேலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையில் இருந்து விலகி விட வேண்டாம் என்றார்..ஏன் என்றால் நாம் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்றார்.... வள்ளலார் பாடல் ! எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான் சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ.! என்னும் பாடல் வரிகளில் தெளிவுப் படுத்துகின்றார்... நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளன.. அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு