திங்கள், 11 டிசம்பர், 2017

மரணம் என்றால் என்ன ?

மரணம் என்றால் என்ன ? மரணம் இல்லா பெருவாழ்வு என்றால் என்ன? மரணம் என்பது:-- நம் பஞ்ச பூத உடம்பானது உயிரையும் .ஆன்மாவையும் உள்ளே வைத்து இயங்கிக் கொண்டு இருக்கின்றன.உடம்பான உறுப்புக்கள் தன் சக்தியை இழக்கின்ற போது உயிரும். ஆன்மாவும் உடம்பை விட்டு வெளியே சென்று விடுகின்றது.அல்லது இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது.அப்போது உடம்பின் இயக்கம் நின்று விடுகின்றது. அதற்கு மரணம் என்று பெயர். மரணம் அடைந்தால் மீண்டும் ஆன்மாவும் உயிரும் வேறு உடம்பு எடுத்து வாழத்தொடங்குகின்றது.இதற்கு பிறப்பு இறப்பு என்று சொல்லப் படுகின்றது. சில சித்தர்கள் யோகிகள்.தங்கள் தவ வலிமையால் நீண்ட நாட்கள்.பல நீண்ட வருடங்கள் உடம்பை விடாமல் .சமாதி நிலை அடைகின்றார்கள்.கூடுவிட்டு கூடுபாயும் வித்தையும் அறிந்து உடம்பையும் உயிரையும்.ஆன்மாவையும் தக்கவைத்து தங்களுக்குத் தேவையான வகையில் பயன்படுத்தி வாழ்ந்தார்கள்.அந்த வித்தையின் காலம் முடிந்தவுடன்.மறுபடியும் உயிரையும்.ஆன்மாவையும். தக்க வைக்க முடியாமல் உடம்பை விட்டு உயிரும் ஆன்மாவும் பிரிந்து.இறுதியில் மரணம் அடைந்து மீண்டும் பிறப்பு எடுக்கின்றார்கள்.. வள்ளலார் சொன்ன மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது வேறு ! உட்பையும் உயிரையும் ஆன்மாவையும் பிரிக்காமல்.மண்ணிற்கோ.தண்ணீருக்கோ .தீயுக்கோ.காற்றுக்கோ.ஆகாயத்திற்கோ.கிரகங்களுக்கோ.வேறு அபாயங்களுக்கோ.எதற்கும். இறையாக்காமல் ஒளி தேகமாக மாற்றும்.அருள் அறிவியலை கண்டு பிடித்தவர்தான் வள்ளலார்.அதற்கு வேதியல் மாற்றம் என்று பெயர்.இறைவனிடம் பூரண அருளைப் பெற்றால் மட்டுமே உடம்பை.ஓளி உடம்பாக மாற்ற முடியும்.கடவுள் நிலையை அறிய முடியும்.அதன் மயமாக மாற முடியும். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கின்றது.எந்தக் கடவுளிடம் அருளைப் பெறமுடியும்.அருளை வழங்கும் கடவுள் யார் ? என்பதை தேடிக் கண்டு பிடித்தவர் வள்ளலார்.பொய்யானக் கடவுள்களை விட்டு மெய்யான கடவுளைக் கண்டுபிடித்தார்.. அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுளாகும்...கண்டேன் களித்தேன்.களிப்புற்றேன்.கலந்து கொண்டேன் என்கிறார்.... அந்தக் கடவுள் எங்கு இருந்து செய்படுகின்றார் என்பதை ஆயிரக்கணக்கான பாடல்களிலும்.உரை நடைப்பகுதியிலும் தெளிவாக விளக்கி உள்ளார்... அறிவு உள்ளவர்களுக்கு ஒருபாடலே போதும் ! அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்தருட்பெருந் தலத்துமேல் நிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்அருட்பெருந் திருவிலே அமர்ந்தஅருட்பெரும் பதியே அருட்பெரு நிதியேஅருட்பெருஞ் சித்திஎன் அமுதே அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமேஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.! என்ற பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தத்துவங்களைக் கடந்தவர் என்றும் தெரியப் படுத்துகின்றார். தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்தத்துவா தீதமேல் நிலையில் சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்சிவநிலை தெரிந்திடச் சென்றேம் ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று அத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்அருட்பெருஞ் சோதிஎன் அரசே.! என்றும் தெரியப்படுத்துகின்றார். அந்த உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்... உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே! என்றும்... மரணப் பெரும் பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே ! என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக தெரியப் படுத்துகின்றார் வள்ளலார். உடம்பையும் உயிரையும் அழிக்காமல் மாற்றும் வல்லபம் அருள் என்னும் திரவியத்திற்கு மட்டுமே உண்டு.அந்த அருளைப் பெற வேண்டுமானால்...சாதி.சமய.மதம் என்னும் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு.வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை. நான்கு விதமான ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும். அந்த ஒழுக்கம் தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும். அதிலே இந்திரிய ஒழுக்கம்..கரண ஒழுக்கம்...ஜீவ ஒழுக்கம்...ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்... அருளைப் பெற்றுத்தான் உடம்பையும்.உயிரையும் ஓளியாக மாற்றி மரணத்தை வெல்ல முடியும். அருளைப் பெற்றால் உடம்பு.உயிர் எவ்வாறு மாற்றம் அடையும் என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றார்..... . தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்  மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட  726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட  மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட  727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்  உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட  728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்  உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட  729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட  தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட  730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்  கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட  731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்  கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட  732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்  கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட  733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட  இனம்பெறு சித்த மியைந்து களித்திட  734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்  சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட  735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்  பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்  736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்  சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட  737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட  அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட  738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட  என்னுளத் தோங்கிய என்றனி யன்பே  739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே  என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே  740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்  என்னைவே தித்த என்றனி யன்பே  741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து  என்னுளே விரிந்த என்னுடை யன்பே  742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து  என்னுளே கனிந்த வென்னுடை யன்பே  743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே  என்னுளே நிறைந்த என்றனி யன்பே  744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை  யின்புறு வாக்கிய என்னுடை யன்பே  745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா  என்னுளங் கலந்த என்றனி யன்பே ! என்னும் வரிகளில் மிகத்தெளிவாக விளக்கம் தந்துள்ளார். உடல். உயிர் .ஆன்மா மூன்றும் அருள் ஒளியாக மாற்றம் அடைவதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி! மரணத்தை வென்ற பாடல் ! காற்றாலே புவியாலே ககனமத னாலேகனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள வலியுறுத்துகிறார் வள்ளலார்.வேறு தெய்வங்கள் எதற்கும் பயன் அற்றது என்கிறார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளை வழங்க முடியும்.அருள் அறிவை அளிக்க முடியும்.அருள் நிலைக்கு ஏற்ற முடியும்.. எல்லாவற்றையும் படைத்தவனால் மட்டுமே எல்லாவற்றையும் வழங்க முடியும் என்பதை அறந்து.புரிந்து.தெரிந்து கொள்ள வேண்டும்.. இந்த உண்மைகளை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடித்தால் மட்டுமே மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும்.பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப பெருவாழ்வில் வாழமுடியும்.... அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு