ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அருளாளர் என்பவர் யார் ?

அருளாளர் என்பவர் யார் ? சாகாமல் இருப்பவரே அருளாளர் . சித்தர்களில் மூன்று வகை உண்டு , சித்து பெற்றவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர். சித்து மூன்று வகையாக உள்ளன. அவரவர் முயற்சி தகுதிக்குத் தக்கவாறு இறைவன் சித்துக்களை வழங்குகின்றார். ஆன்மீக போதகர்களில் நிறையப்பேர் உண்டு .சித்தர்கள் எழுதிவைத்த.காட்டிய கொள்கைகளைத் தான் போதகர்கள் மக்களுக்கு போதிக்கிறார்கள்.எனவே போதகர்களை விட சித்தர்கள் உயர்ந்தவர்கள். கர்ம சித்தர் , ,,யோக சித்தர்,,,,ஞான சித்தர் என்பவர்களாகும் இவர்கள் அனைவரும் இறைவனிடம் வேண்டி அருளைப் பெற்றவர்கள் . கர்ம சித்தர்கள்;---ஆலயங்களை கட்டி.தத்துவ உருவங்களை வைத்து மக்களுக்கு உருவ வழிப்பாட்டு முறைகளை தோற்றுவித்தவர்கள். எனவே அவர்களுக்கு கடின சித்தர்கள்,அதாவது கர்ம சித்தர்கள் என்று பெயர் சொல்லப்படுகின்றனர். யோக சித்தர்கள் ;-- மனத்தைக் கட்டுப் படுத்தி அகத்திலே கடவுளைக் காண யோக முறைகளை கையாண்டு யோக சித்திப் பெற்றவர்கள்.இவர்கள் உருவ வழிப்பாட்டை தாண்டி அருவ வழிப்பாட்டை பின் பற்றுபவர்கள்.யோக நிலைகளில் தான் கடவுளைக் காண முடியும் என்று யோக மார்க்கத்தை தோற்றுவித்தவர்கள் . எனவே அவர்களுக்கு யோக ஞான சித்தர்கள் என்று பெயராகும் . ஞான சித்தர்கள் ;--சரியை.கிரியை.யோகம்ஞானம் நான்கில் நான்காவது பிரிவாகிய ஞானத்தில் ஞானம் என்னும் வழியை கடைபிடித்து கடவுளைக் கண்டவர்கள்.இவ்வுலகில் ஞானத்தில் ஞானம் என்னும் படியைக் கடந்து முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்றவர்களுக்கு.ஞான சித்தர் என்று பெயர். உண்மையான கடவுளைக் கண்டு அதன் மயமாக தன்னை இணைத்துக் கொள்பவர்கள் ஞான சித்தர்கள் என்பவர்கள் . இவ்வுலகில் ஞான சித்திப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அதன் மயமான ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே.... கரம சித்தி,..யோகசித்தி,..ஞான சித்தி..என்ற மூன்று வகை சித்தி அனுபவங்களையும் பெற்று முழுமையான இறை அருளைப் பெற்று மரணம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரே அருளாளர் ''வள்ளல்பெருமான் ஒருவரே'' ! கர்ம சித்தர்கள்  ,யோக சித்தர்கள் அனைவரும் அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட அருளைக் கொண்டு நீண்ட காலம் வாழ்ந்து இறுதியில் மரணம் அடைந்து.மீண்டும் பிறப்பு எடுப்பார்கள். கருணை இல்லாமல் பொது நோக்கம் இல்லாமல். சுய நலத்திற்காக வாழ்ந்து.அற்ப அருளைப் பெற்று .அற்ப சித்துக்களைப் பெற்றவர்கள். எனவே அவர்களுக்கு கடின கர்ம சித்தர்கள் ,யோக சித்தர்கள் என்ற பெயராகும்.,அவர்கள் அறக்கருணை இல்லாமல் மறக்கருணை உள்ளவர்கள். மீண்டும் பிறப்பு.இறப்பு உள்ளவர்களின் செயல் பாடுகள் .கொள்கைகள் அனைத்தும் செல்லுபடி ஆகாது .அவர்களின் கொள்கைகளும் செல்லுபடி ஆகாது.அவர்களின் கொள்கையை பின்பற்றி வாழ்பவர்களுக்கும் எந்த வித பயனும் நன்மைகளும் கிடைக்காது. மேலும் சித்தர்கள் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் மட்டுமே கடைபிடித்தவர்கள்.ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கம் என்பதை கடைபிடிக்க தவறியவர்கள். கருணை இல்லா விட்டால் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்பது புரியாது ,விளங்காது,தெரியாது உண்மைக் கடவுள் யார் என்பதும் அவர்களுக்கு தெரியாமல் மறைக்கப் பட்டு விடும். கர்ம சித்தர்கள் இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கத்தை மட்டுமே கடை பிடித்தவர்கள். யோக சித்தர்கள்...இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம் என்ற மூன்று ஒழுக்கத்தை மட்டும் கடைபிடித்தவர்கள். வள்ளல்பெருமான் ஒருவரே ..இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தவர் வள்ளலார். வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும் பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார். அந்த நான்கு ஒழுக்கங்களும் முழுமை பெற வேண்டுமானால் ''ஜீவ காருண்யம் ''என்ற உயிர் இரக்கம் ,ஆன்ம நேயம் என்கின்ற ஆன்ம ஒழுக்கம்.இருந்தால் தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பது விளங்கும்.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பேறு பெற்று இருந்தால் மட்டுமே இறைவன் முழுமையான பூரண அருளை வழங்குவார் அருள் கிடைக்கும். எனவே தான் ''ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு'' என்றார்.''உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்றார். ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப்டுகின்ற பக்தி. தியானம்.தவம்.யோகம்.ஞானம் எல்லாம் வெற்று மாயா ஜாலங்கள் என்கிறார் வள்ளலார். ஜீவ காருண்யம் இல்லாமல் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பதால் வள்ளலார் ஜீவ காருண்யத்தைப் பற்றி மக்களுக்குத் தெளிவாக போதித்து உள்ளார். ஜீவ காருண்யத்தைப் போதிப்பதற்கும் ,கடவுளின் அருளைப் பெறுவதற்கும் '''சமரச சுத்த சன்மார்க்க சத்திய  சங்கத்தை '' அமைத்துள்ளார் .அதில் சேர்ந்து தயவுடன் இருந்தால் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்றும்.அருளைப் பெற்றால் சுத்த சன்மார்க்கத்தை அடைந்தவர்கள் என்றும் வள்ளலார் தெளிவுப் படுத்துகின்றார். அருளைப் பெறும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் என்று பெயர் வைத்துள்ளார் . ''சாகாதவனே சன்மார்க்கி'' என்றும் சாகிறவன் சன்மார்க்க நிலை அடைந்தவன்  அல்ல என்றும் தெளிவுப் படுத்தி உள்ளார் . எனவே பிறந்து பிறந்து .இறந்து இறந்து போகின்ற சித்தர்களின் கொள்கைகளை.அவர்கள் காட்டுகின்ற வழியைப் பின்பற்றாமல்,,என்றும் பிறப்பு.இறப்பு அற்று சாகாமல் வாழும் ஞானசித்திப் பெற்று வாழு்ந்து கொண்டு அருளை வாரி வழங்கும் அதிகாரம் பெற்ற . அருளாளர் வள்ளல்பெருமான் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் ''கொள்கைகளைப் பின்பற்றி கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே . மனிதன் மனிதனாக வாழ்ந்து கடவுளின் முழுமையான பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று இறைநிலையை அடைய முடியும் .வேறு எந்த மார்க்கத்தாலும்.வேறு எந்த கொள்கைகளாலும் மனிதன் கடைத்தேற முடியாது.மரணம் அடைந்து அழிந்து தான் போவான் . மண்,,நீர்..அக்கினி ,,காற்று,,ஆகாயம்,,என்னும் ஐம் பூதங்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே மார்க்கம் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற புதிய புனித அருள் நெறி தான் சுத்த சன்மார்க்க தனி நெறியாகும்.தனி மார்க்கமாகும் .. வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-- துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்--என்மார்க்கம் நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார் மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து ! சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி நாடு என்ற எந்த பேதமும் இல்லாத ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைக் கொண்ட ஒரே மார்க்கம்.வள்ளல்பெருமான் தோற்றுவித்துள்ள சுத்த சன்மார்க்கம். வள்ளல்பெருமான் தோற்றுவித்த மார்க்கத்தை உலகில் உள்ள கர்ம சித்தர்கள்.யோக சித்தர்கள் அனைவரும் சிறிய பெரிய அருளாளர்கள் அனைவரும் வள்ளலார் கொள்கையைப் போற்றிப் புகழ்ந்து கொண்டு உள்ளார்கள் . மனிதர்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள். அருளாளர்களின் கூட்டத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ளவர் வள்ளல்பெருமான் ஒருவர் மட்டுமே என்பதை மனித குலம் அறிந்து,தெரிந்து புரிந்து கொண்டு,உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் இல்லாமல் பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழ்வதற்கு வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை விட்டால் வேறு வழியே கிடையாது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ! அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் . போன்.. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு