திங்கள், 27 நவம்பர், 2017

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! எங்களை காத்து அருள வேண்டும் ! அருட்பெருஞ்ஜோதி; ஆண்டவரின் பிள்ளைகளாகிய. ஆன்ம நேய உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;             அறிவுருவான.அருள் உருவான அருட்பெருஞ்ஜோதி கடவுளின் அறிவையும்.அருளையும் பெறவேண்டுமானால் ; நமது இந்திரிய அறிவு,கரண அறிவு,ஜீவஅறிவ,ஆன்மஅறிவு,அருளறிவு இவைகளைக்கடந்து சென்று தான் மேலான கடவுள் அறிவையும்.அருளையும் பெறமுடியும்; அப்படி என்றால் "அறிவை அறிவால் அறியும் பொது அறிவைப் பெறுவதற்கு. எல்லாவற்றிற்கும் பொதுவாகிய ஒரே கடவுளான அருட்பெருஞ்ஜோதிக் கடவுளைப்" பற்றி முழுமையாக அறிந்து தெளிந்தால்தான் நாம் கடவுள் அறிவை தடையின்றிப் பெறுவதற்கு ஏதுவாகும்;            அதற்கு கடவுளைப்பற்றிய விஷயத்தில் தெளிவு வேண்டும் ; கடவுளின் "நாம,ரூப,சொரூபத்தை "அறிந்து தெரிந்து தெளிந்து ஐயமற்றிருக்கவேண்டும்; புறத்தில் சமய.மதங்களால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்களின் தத்துவ தன்மை உண்மைகளை வெளிப்படுத்தும் மார்க்கத்தைப் பற்றியிருக்க கூடாது.அறவே பற்று அற்று பொது நோக்கத்துடன் சத்விசாரணை செய்ய வேண்டும்.            கடவுள் உண்மையை வெளிப்பட தெரிவிக்காத மார்க்கத்தில் இருந்து நமது காலத்தை விரயம் செய்து ,பிறப்பு இறப்பை நீட்டித்து வீண்போகக்கூடாது;    ஒரு மார்க்கத்தை நடத்துபவரின் தரத்தையும், அந்த மார்க்கத்தின் கொள்கைப்படி அவர்  கடவுள் பூரண ஞானத்தைப் பெற்றுக்கொண்டு கடவுள் நிலையை அடைந்தவரா ? அடைந்து காட்டியவரா ?என்பதையும் அறிந்து அவர்காட்டுகின்ற மார்க்கத்தில் இணைந்து  ,அவர் வகுத்த நெறியை முழுமையாக கடைபிடித்து ,அந்த நெறிப்படி வாழ்ந்து நாமும் அவரைப்போன்றே அருளைப் பெறுவதற்கு முயன்றிடுதல் வேண்டும்;  அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளுடைய திருவுளச் சம்மதத்துடன் வருவிக்கவுற்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான்,       கடவுளின் ஏகதேச உருவம் கொண்ட ஆன்மாக்களாகிய நாம்.நமது வாழ்வு அழிந்துவிடாமல் மரணத்தை தவிர்த்துக்கொண்டு ஆண்டவருடைய பரிபூரண அருளைப் பெற்றுக்கொண்டு இவ்வுலகிலேயே நிலையான "அனக"அருள் வாழ்க்கை வாழ்ந்திடவேண்டும் என்ற பெருங்கருணையினால்,         எல்லாம் வல்ல ஆண்டவரின் பூரண அருளைப் பெற்றுக்கொண்டு ,  அவ்வருளே வடிவாய் இருந்து ,       மரணத்தை தவிர்த்துக்கொண்டு முத்தேகச் சித்தியுடன் ஒளியுடம்பு பெற்றுக்கொண்டு,  இவ்வுலகை ஐந்துதொழில் செய்யும் வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு,வாழும் தகுதி ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உண்டு. வள்ளல்பெருமான் தாம் பெற்ற "அருட்பெருஞ்ஜோதியின் இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம்.என்ற முத்தேகசித்திப் பெற்ற உடம்பைக்"கொண்டு இவ்வுலக உயிர்திரள்கள் எல்லாம் மருவிக்கலந்து நிறைந்து இன்று ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் இருந்துகொண்டு இவ்வுலகில் "சுத்தசன்மார்க்கத்தால்" அருளாட்சி செய்கின்றார் வள்ளல்பெருமான்.  தாம்பெற்றுக்கொண்ட அந்த பெரும்பேற்றை இவ்வுலகில் மனித தேகம் பெற்றுள்ள அனைவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற பெருங்கருணையுடன்,             இவ்வுலகத்திலுள்ள பிரிந்துகிடக்கும்.அழிந்து கிடக்கும். சமய மத மார்க்கங்களை எல்லாவற்றையும் ஒருநிலைப் படுத்தி "சுத்த சன்மார்க்கம் "என்ற ஒருகுடைக்குள் கொண்டுவந்து இவ்வுலகவருக்கு அருளவிளக்கம் செய்து ,அவர்கள் அனைவரும் கடவுள் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற பெரு நோக்கத்தில் இன்று இவ்வுலகில் சுத்தசன்மார்க்கத்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நடத்திக் கொண்டு இருக்கின்றார். நாமும் இதுவரை வழி.முறை.துறை.துணிவு எதுவும் தெரியாமல் வீணில் காலத்தை விரையாமாக்கிக் கொண்டும்.உண்மை அறியாமல். மாண்டு மடிந்து மீண்டும் பிறந்து கொண்டே உள்ளோம். இனிமேல் அப்படி இல்லாமல் இறப்பிற்கு இடம் .வாய்ப்பு.மரணம். கொடுக்காமல். இப்பிறவியிலேயே மரணத்தை வெல்ல வேண்டும்..அப்படி முயற்சி செய்து.முடியா விட்டாலும் இனி வரும் பிறவியிலாவது கடவுளின் பூரண அருளைப் பெற்று நிலையான அழிவற்ற அருள் வாழ்க்கை வாழ்வதற்கு சுத்தசன்மார்க்கத்தில் இணைந்து அருளைப் பெற்று வாழ்வதற்கு அதிதீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். வள்ளலார் பாடல்! பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! என்னும் பாடலிலே நான் பெற்ற நெடும் பேற்றை வார்த்தையால் சொல்ல முடியாது.அந்த ஒப்பற்ற பெரிய வாழ்க்கையை எனக்கு கொடுத்தாய். என்றும் அழியாத தேகம் எனக்கு கொடுத்தாய்.எனக்கு அதில் விருப்பம் இல்லை.என் போல் இவ்வுலகில் உள்ள ஆன்மாக்கள் அனைத்தும் அந்த பேரின்ப பெருவாழ்வு பெற வேண்டும் என்று நமக்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறார்.அவருடைய பெருங்கருணையை எப்படி போற்றுவது.சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...அவருடைய விண்ணப்பத்தை அறிந்து கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகின்றார்... நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்றநின்வார்த்தை யாவும்நமதுநீள்வார்த்தை யாகும்இது உண்மைமகனே சற்றும்நெஞ்சம்அஞ் சேல் உனக்கேஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்அழியாத நிலையின்நின்றேஅன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீஆடிவாழ்க என்றகுருவே நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்நான்இளங் காலைஅடையநல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையேநண்பனே துணைவனே என்ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனேஒருவனே அருவனே உள்ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலேஓங்குநட ராஜபதியே.! என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அனுமதிப் பெற்று சுத்த சன்மார்க்கத்தை நடத்திக் கொண்டு உள்ளார்...இதைவிட உண்மை நமக்கு வேறு என்ன வேண்டும். நாம் அனைவரும் சுத்தசன்மார்க்க சுகப்பெருநிலையைப் பெறுவோம்; ...........நன்றி; ............வள்ளல் மலரடி வாழ்க வாழ்க; எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக ! அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு