வியாழன், 30 நவம்பர், 2017

சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது !

சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது ! சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது ! அன்புள்ள ஆன்ம நேய உடன் பிறப்புக்களுக்கு வந்தனம் நாம் எவ்வளவு தான்  ஜீவகாருண்யம் செய்தாலும்.தியானம்.தவம்.யோகம். குண்டலினிபயிற்ச்சி.மூச்சு பயிற்சி. வழிபாடு போன்ற எந்த பயிற்சி செய்தாலும்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காண முடியாது.அருளைப் பெற முடியாது. நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான முதல் திரை பச்சைத்திரை .அது கருப்பும் பச்சையும் கலந்து உள்ளன.மிகவும் அடர்த்தியான கருப்புத்திரை என்பதாகும் .அவைதான் சாதி ...சமய மதங்களால் கொண்டு வந்த கொள்கைகள்.கடவுள் வழிப்பாட்டு முறைகள்.கற்பனைக் கடவுள்கள் என்பதாகும் அவைகளால் தோற்றுவிக்கப்பட்ட. சாதி.சமயம்.மதம் என்னும் அறியாமை.அஞ்ஞானம் என்ற திரைகள் ஆன்மாவை தெரிய வொட்டாமல் மறைத்துக் கொண்டு உள்ளன. முதலில் உள்ளது சாதி.இரண்டாவது சமயம்.மூன்றாவது மதம் இவைகள் மூன்றும் சேர்ந்த்துதான் முதல் திரை என்பதாகும்..அந்த முதல் திரை நீங்கினால் மற்ற திரைகள் விரைவில் நீங்கி விடும் என்கிறார் வள்ளலார். முதல் திரைகளை நீக்க அதி தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்...அது நீங்கினால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கி விடும் என்கிறார் வள்ளலார். திரைகளை நீக்க அதிகமான சுத்த உஷ்ணம் வேண்டும் என்கிறார்...அந்த உஷ்ணம் எப்படி உண்டாகும் என்றால்..உண்மையான கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி.தோத்திரம் செய்தும்.தெய்வத்தை இடைவிடாது நினைத்தும்.நமது குறையை உன்னியும்.இவ் வண்ணமாக இருக்கின்ற போதும்.படுக்கின்ற போதும்.இடைவிடாதும்.இவ் விசாரத்தோடும்.ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற நன் முயற்சியுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.வள்ளலார்... எனவே தான் சாதி.சமய .மதங்களை சாடுகின்றார்...ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரை நீங்க வேண்டுமானால்.சாதி.சமய மதக் கொள்கையில் இருந்து விலக வேண்டும்.விலகாமல் எந்த ஆனம லாபமும் கிடைக்காது.. கீழே உள்ள பாடல்களை ஊன்றி கவனியுங்கள்.... சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்சாத்திரக் குப்பையும் தணந்தேன்நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்நித்திய வாழ்க்கையும் சுகமும்ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாஅருட்பெருஞ் சோதிஎன்  அனைத்தும் நீஅறிந் ததுநான்உரைப்பதென் அடிக்கடி உனக்கே.! சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளேஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியேஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவேசோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.! சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்விடுவித்தென் தன்னை ஞானநீதியிலே சுத்தசிவ சன்மார்க்கநிலைதனிலே நிறுத்தி னானைப்பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்பராபரனைப் பதிஅ னாதிஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோதியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.! சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.! சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்! சாதி சமயச் சழக்கெலாம் அற்றதுசன்மார்க்க ஞான சபைநிலை பெற்றதுமேதியிற் சாகாத வித்தையைக் கற்றதுமெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் ! சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி - அக்கச்சிசோதியைக் கண்டேன டி.! சாதிசம யங்களிலே வீதிபல வகுத்தசாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவேஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியேஅன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.! சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி ! சாதியு மதமுஞ் சமயமுங் காணாஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி! இப்படி பல ஆயிரம் பாடல்களை பதிவு செய்து வள்ளலார்.... நாம் எவ்வளவு தான் சுத்த சன்மார்க்கம் பேசினாலும் சமய மதங்களால் விதிக்கப்பட்ட சாதி என்னும் கொடிய நோய் நம்மை விட்டு அகலவில்லை.அந்த கொடுமையான நோயை அகற்றினால் தான் நாம் உண்மையான அருட்பெரும்ஜோதியை காண முடியும்... ஆன்மாவைக் கண்களால் கண்டால் தான் இறைவன் அருளைப் பெற முடியும். அருளைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்...மரணத்தை வென்றால் தான் பேரின்ப லாபத்தைப் பெறமுடியும். எனவே முதல் திரையாகிய கருமையில் பச்சைவண்ணமாகிய திரைதான் சாதி என்னும் அழுத்தமான திரையாகும் .அதை முதலில் நீக்கி விட்டால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கிவிடும். அருள் வேண்டுமானால் சாதி என்னும் பற்றை முதலில் பற்று அற விட வேண்டும்... விட்டு பாருங்கள் அதன் லாபத்தை உண்மையாக காண்பீர்கள்.. எனக்கு நாற்பது ஆண்டுகளாக சாதி.சமயம்.மதம் என்ற பற்று அறவே கிடையாது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.... நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போன்ற பெரிய லாபத்தை பெறுவீர்கள்.பெற்றுக் கொள்வீர்கள்..இது சத்தியம்... அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல். 9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு