ஞாயிறு, 12 நவம்பர், 2017

பண்ணாத தீமைகள் பண்ணுகிறீர்கள்!

பண்ணாத தீமைகள் பண்ணுகிறீர்கள்!

வள்ளலார் பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரேபகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரேநடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தேகண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

முன் உள்ள மார்க்கங்களில் எவ்வளவு தவறு செய்து இருந்தாலும்.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றால்.இந்திரிய ஒழுக்கம் .கரண ஒழுக்கம் மிகவும் அவசியமானது.அர்த்தம் உள்ளதாகும்....

தமிழ் நாட்டில் மற்றும் வெளிநாட்டில் உள்ள சன்மார்க்க சங்கங்களும்.சங்கத்தில் அங்கம் வகிக்கும் அன்பர்களும்.வள்ளலார் காட்டிய வழிபாட்டு முறைகளையும்...ஒழுக்க நெறிகளையும் முழுமையாக கடைபிடிப்பதில்லை.
சங்கத்திற்கு வருபவர்களுக்கு உணவு மட்டுமே போடுகிறார்கள்..வள்ளலார் சொல்லிய ஒழுக்க நெறிகளையும்.வழிபாட்டு முறைகளையும் முறையாக கடைபிடிப்பதில்லை.

ஒவ்வொரு சங்கமும் அவரவர்களின் சுய நலத்திற்காகவே பயன் படுத்திக் கொண்டு வருகிறார்கள்..பொருள் ஈட்டுவதற்காகவும்.புகழுக்காகவும் பயன் படுத்திக் கொண்டு உள்ளார்கள்....

இந்திரிய ஒழுக்கத்தில்..வள்ளலார் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் ...

இந்திரிய ஒழுக்கம் என்பது..இறைவனால் எழுதப்பட்ட திருஅருட்பா பாடலகளில் உள்ள ( ஸ்தோத்திரங்களை) நாதங்களை உற்றுக்கேட்டல் .மற்ற பாடல்களை கேளாதிருத்தல்.என்பதை தெளிவாக சொல்லுகின்றார்.கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல்.

அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல் ..கொடூரமாகப் பாராதிருத்தல்.ருசியின் மீது விருப்பம் இன்றி இருத்தல்.சுகத்தம் விரும்பாதிருத்தல்.
இவைகள் யாவும்.ஞானேந்திரிய ஒழுக்கம் என்கிறார் .இவைகளை நாம் பின்பற்றுகிறோமா ? நாம் சிந்திக்க வேண்டும்..

அடுத்து இனிய வார்த்தையாடுதல்.பொய் சொல்லாதிருத்தல்.ஜீவ இம்சை நேரிடும்கால் எவ்வித்த் தந்திரத்திலாவது தடைசெய்தல்...கொலை நடப்பதை நாம் தடுக்க முயற்சி செய்து இருக்கிறோமா?..

பெரியோர் இடத்தில் செல்லுதல் என்றால் சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல்.சாதுக்கள் என்றால் யார் ? பணத்தையும்.பொருளையும் கையில் தொடாதவன் .பொய் பேசாதவன்.எதிலும் இச்சை இல்லாதவன்.எதிலும் பொது நோக்கம் உள்ளவன் தான் சாதுக்கள்.அவர்களிடம் தான் தொடர்பு கொள்ள வேண்டும்.சாதுக்கள் போல் வேஷம் போடுகிறவனிடம் செல்வது அல்ல.அவர்கள் சாதுக்கள் அல்ல...என்கிறார் வள்ளலார்.

உயிர்க்கு உபகரிக்கும் நிமித்தம் சஞ்சரித்தல்.உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்.மலஜல உபாதைகள் அளவு மீறாமலும் கிரம்ம் குறையாமலும் அளவைப் போல் .தந்திர மூலிகையாலும் ஆகாரப் பக்குவத்தாலும்.பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல்.என்னும் இவையாவும் கருமேந்திரிய ஒழுக்கம் என்கிறார் வள்ளலார்...

இந்த கருமேந்திர ஒழுக்கமும்.ஞானேந்திர ஒழுக்கமும் வள்ளலார் சொல்லியபடி கடைபிடிக்கிறோமா ? என்பதை சிந்திக்க வேண்டும்...

நாமும் கடைபிடிப்பதில்லை புதியதாக வருபவர்களுக்கு குழப்பத்தை உருவாக்கி தவறான வழியை காட்டிக் கொண்டு உள்ளீர்கள்...எப்படி மக்கள் திருந்துவார்கள்..

அடுத்து முக்கியமானது கரண ஒழுக்கம்....

கரண ஒழுக்கம் என்பது..சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்கிறார் வள்ளலார்..நாம் சிற்சபையிடம் மனதைச் செலுத்தாமல் .மற்ற எல்லா இடங்களிலும் மனதைக் கொண்டு செலகிறோம்..பணம் பறிப்பதிலே மனதை அதிகமாக பயன் படுத்துகிறோம்..கண்ட கண்ட வழிபாட்டு முறைகளிலும்.பொய்யான தவம்.யோகம்.தியான முறைகளையும் செய்யச் சொல்லி மனதை தவறான வழியில் அலைகழிக்கச் செய்து கொண்டு வருகிறோம்..

அடுத்து பிறர் குற்றம் விசாரியாயிருத்தல்..
தன்னை மதியாதிருத்தல்.செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி .இயற்கையாகிய சத்துவ மயமாதிருத்தில்.பிறர்மேற் கோபியாதிருத்தல்..தனது சத்ருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்...அக்கிரம அதிக்கிரம்ப் புணரச்சி செய்யாதிருத்தல்.இவைகள் யாவும் கரண ஒழுக்கம்.

மேலே கண்ட இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.இரண்டையும் முழுமையாக கடைபிடித்தால் தான் .ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் கை கூடும்.நான்கு ஒழுக்கமும்.சம நேர் கோட்டில் இருந்தால் தான் அருள் பெற்று  மரணத்தை வெல்ல முடியும்.

இந்திரிய ஒழுக்கமும் கரண ஒழுக்கமுமே வள்ளலார் சொல்லிய வண்ணம் எவருமே கடைபிடிப்பதில்லை.அவரவர் விருப்பம் போல் செயல் படுகிறார்கள்..ஆதலால் எவறாலும் மரணத்தை வெல்ல முடியாது.

வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை.சன்மார்க்க சங்கங்களும்.சங்கத்தில்   அங்கத்தினராக உள்ளவர்களும்.வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாகவே செயல் பட்டுக் கொண்டு வருகிறார்கள்...வழிப்பாட்டு முறைகளிலும்..ஒழுக்க நெறிகளிலும். ஒருவரும் முழுமையாக கடைபிடிப்பதில்லை...

எப்படி அருள் கிடைக்கும்.? எப்படி மரணத்தை வெல்ல முடியும்..?..

சன்மார்க்கிகளின் இந்த தவறான வழியைக் கண்டுதான் வள்ளலார்.

பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன்மொழி பகருகின்றீரே என்று வேதனையுடன் சொல்லுகின்றார்...

இவைகளை எல்லாம் எண்ணி கண்ணீர் விட்டு கதருகின்ற காலம் வரும்.என்று எச்சரிக்கின்றார் ..மேலும் பித்துலகிரே என்கிறார்.பித்துலகிரே என்றால் பைத்தியம் பிடித்தவர்கள் என்பதாகும்...ஒன்றுகிடக்க ஒன்று செய்வது பைத்தியக்காரன் செயல் என்பதை சுட்டிக் காட்டுகின்றார்....

வள்ளலார் கொளகையில் உள்ளவர்கள் சன்மார்க்க சங்கம் நடத்துபவர்கள்.மிகவும் எச்சரிக்கையாக.தானும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்ட வேண்டும்.அதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்.

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார்..

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றைநாடாதீர்

பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்

விரைந்தினிஇங்கென்மார்க்க மும்ஒன்றா மே.!

என்கின்றார்.வள்ளலார்.

நாம் உண்மையை விட்டு வேறு ஒன்றை நாடிச் சென்றால் அதனால்.வரும் துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிவரும் என்பதை எச்சரிக்கின்றார்...

அடுத்து ஒரு எச்சரிக்கை தருகின்றார்...வள்ளலார்

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர்

ஆடுதற்கே அறிவீர்கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ

கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரேவேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்

சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்றதருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.!

மேலே கண்ட பாடல் அனைவரும் தெரிந்து.புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய தமிழில் சத்தியம் வைத்துச் சொல்லுகின்றார்...

ஆகையால் சுத்த சன்மார்க்கத்தில் உள்ளவர்கள்.எக்காலத்திலும் சுய நலத்திற்காக  சன்மார்க்கத்தை பயன் படுத்த வேண்டாம்.மற்றவர்கள் நலன் கருதியே பாடுபட வேண்டும்..தவறு செய்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

சிந்திப்போம் திருந்துவோம் செயல்படுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு