வெள்ளி, 17 நவம்பர், 2017

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872.

சத்திய ஞான சபை விளம்பரம் 25-11-1872. வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது ! வள்ளலார் சொல்லியதை கேட்டு நாம் இதுவரையில் பின் பற்றுகிறோமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். கவனமாக படித்து தெளிவு பெற வேண்டும் .. உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே ! அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும் அடைந்து அறியாத அற்புத குணங்களையும் ,கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,செய்து அறியாத அற்புதச் செயல்களையும்.கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்.அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும். இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன் .என்று உணர்கின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையவனாகி இருக்கின்றேன். நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் . இயற்கையில் தானே விளங்க்குகின்றவராய் உள்ளவர் என்றும்.இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்.இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும். எல்லா அண்டங்களையும்.எல்லா உலகங்களையும்.எல்லாப் பதங்களையும்.எல்லாச் சத்திகளையும் .எல்லா சத்தர்களையும்.எல்லாக் கலைகளையும்.எல்லாப் பொருள்களையும்.எல்லாத் தத்துவங்களையும்.எல்லாத் தத்துவிகளையும் .எல்லா உயிர்களையும்.எல்லாச் செயல்களையும் .எல்லா இச்சைகளையும்.எல்லா ஞானங்களையும்.எல்லாப் பயன்களையும்.எல்லா அனுபவங்களையும்.மற்று எல்லா வற்றையும் .. தமது திருவருட் சத்தியால் ..தோற்றுவித்தல்..வாழ்வித்தல்..குற்றம் நீக்குவித்தல் ..பக்குவம் வருவித்தல்..விளக்கம் செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்.எல்லாம் ஆனவர் என்றும்.ஒன்றும் அல்லாதவர் என்றும்.சர்வ காருண்யர் என்றும் சர்வ வல்லபர் என்றும்.. எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வும் இல்லாத் தனிப்பரும் தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர் ''என்றும்.சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நிக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவென்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.. அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ் வுலகத்தினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து .அழிவில்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் .பல்வேறு சமயங்களிலும்.பல்வேறு மதங்களிலும்.பல்வேறு மார்க்கங்களிலும்.பல்வேறு ல்ட்சயங்களைக் கொண்டு .நெடுங்காலம் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றார்கள்.. இனி இச் சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ..உண்மை அறிவு.உண்மை அன்பு..உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் ..எல்லாச் சமயங்களுக்கும் .எல்லா மதங்களுக்கும்.எல்லா மார்க்கங்களுக்கும் .உண்மைப் பொது நெறியாக விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று ''பெரும் சுகத்தையும்.பெரும் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு உள்ளம் கொண்டு .சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை ''இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ...இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்கே யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் ..என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி .அருட்பெருஞ்ஜோதியிராய் வீற்று இருக்கின்றார் .. ஆகலின் .அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி .இறந்தவர் உயிர் பெற்று எழுதல்..மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்.முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள் . என்னும் உண்மையை வள்ளலார் தெரிவித்து உள்ளார்/ நாம் இதுவரையில் வள்ளலார் சொல்லிய வண்ணம் பின் பற்றுகிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்...இவ்வளவு உண்மையைத் தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் நாம் நம் விருப்படியே செயல்படுகிறோம்....அருட்பருஞ்ஜோதியர் நமக்கு கருணைக் காட்டுவாரா என்பதைக் கருத்தில் கொண்டு உண்மை உணர்வோடு செயல்பட வேண்டும்.சன்மார்க்கிகளே இனிமேலாவது திருந்துங்கள் செயல்படுங்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ௧ அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

1 கருத்துகள்:

19 நவம்பர், 2017 அன்று PM 1:26 க்கு, Blogger Unknown கூறியது…

மிக அற்புதமாக ஐயாவின் கருத்துக்களை வெளியிடுகின்றீர்கள்!உங்கள் தொண்டு வளரட்டும்!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு