சனி, 11 நவம்பர், 2017

பக்தி வேண்டுமா ? ஞானம் வேண்டுமா ?

பக்தி வேண்டுமா ? ஞானம் வேண்டுமா ?

பக்தி என்பது ஆன்மீகத்தின் தொடக்க நிலை.அதற்கு சரியையில் சரியை என்று பெயர்.

அதே போல் சரியையில் சரியை.கிரியை. யோகம். ஞானம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.

அடுத்து கிரியையில் .கிரியையில் சரியை.கிரியையில் கிரியை.கிரியையில் யோகம்.கிரியையில் ஞானம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.

அடுத்து யோகம் என்பதில்.யோகத்தில் சரியை.யோகத்தில் கிரியை.யோகத்தில் யோகம்.யோகத்தில் ஞானம் என்னும் நான்கு நிலைகள் உள்ளன.

அடுத்து இறுதியாக ஞானம் என்பதில் ஞானத்தில் சரியை.ஞானத்தில் கிரியை.ஞானத்தில் யோகம்.ஞானத்தில் ஞானம் என்னும் நிலைகள் உள்ளன.

ஆன்மீகத்தில் மொத்தம் 16.நிலைகள் உள்ளன...

ஞானத்தில் ஞானம் பெறுவதே மனித குலத்தின் முக்கிய இறுதி நிலையாகும்.பக்தி என்னும் ஆரம்ப சரியை நிலையில் இருந்து மேலே ஏறுவதற்கு காலம் போதாது என்பதால்.வள்ளலார் நேரடியாக ஞான நிலைக்கு வரும்படி உலக மக்களை அழைக்கிறார்..

வள்ளலார் சொல்லும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்..ஞானம் பெறுவதற்கு உண்டான ஒழுக்க நெறிகளை போதிக்கின்றன.இதிலே. சாதி.சமயம் மதங்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது.

ஞானம் என்பது ஆன்மீகத்தின் இறுதி நிலை.அதில் நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்தால் இறைவனிடம் அருளை மிகச் சுலபமாக பெற்றுக் கொள்ளலாம்.என்கிறார் வள்ளலார்..

ஞான சரியை என்பது இந்திரிய ஒழுக்கம்.

ஞான கிரியை என்பது .கரண ஒழுக்கம்.

ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கம்.

ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கம்.

இந்த நான்கு ஒழுக்கங்களை வள்ளலார் சொல்லியபடி முழுமையாக கடைபிடித்தால் இறைவன் அருளை வாரி வாரி வழங்குவார்..அருள் பூரணம் அடைந்தால் மனிதனின் ஊன் உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து மரணத்தை வென்றால் மட்டுமே இறைவனுடன் கலக்க முடியும்...

அப்படி கலந்து வாழும் வாழ்க்கை தான் பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்....

கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .உலக வரலாற்றில் வள்ளலார் ஒருவரே !

எனவே ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையான பக்தி நிலையை விட்டு விட்டு ஞான நிலைக்கு வாருங்கள் என அழைக்கின்றார் வள்ளலார்...

வள்ளலார் பாடல் !

சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள் அறிந்ததே எந்தாய்.!

சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.!

என்னும் பாடல்கள் வாயிலாக தன் அனுபவத்தை வெளிப்படையாக தெரிவிக்கின்றார்...

மேலும்.ஞானத்தைப் பெறுவதற்கு ஞான சரியை என்னும் தலைப்பில் 28.பாடல்களை தந்து உள்ளார்..அந்த பாடல்களில் உள்ளபடி வாழ்க்கையில் கடைபிடித்து.அனுபவித்து அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என தெளிவாக பதிவு செய்துள்ளார்.

ஞான சரியையில் உள்ள முதல் பாடல் ஒன்றே நாம் அனைவரையும் உருக வைத்து விடுகின்றது..

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

என்னும் பாடலை தொடங்கி இறுதி பாடல்..

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தேசத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை

நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி

ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னைஎல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை

ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!

என்ற பாடலுடன் நிறைவு செய்கின்றார்...

எனவே ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய அன்பர்கள் அனைவருக்கும் தெரியப் படுத்துவது..

பக்தி நிலையை புறம் தள்ளிவிட்டு ஞான நிலைக்கு வாருங்கள் வாருங்கள் என அழைக்கிறார் வள்ளலார்.....

மேலும் அவரவர் விருப்பம்.எதுவோ ! நீங்களே முடிவு எடுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

வந்தனம் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு