இறைவன் படைத்த உலகம் !
இறைவன் படைத்த உலகம் !
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..படைத்த உலகத்தையும்,உயிர்களையும் ஆள்வதற்கும் ,ஆட்சி செய்வதற்கும் ,
மாண்டுபோகும் மனிதர்கள் ஆசைப் படுகின்றார்கள்.எத்தனை காலம் தான் இவர்களால் ஆட்சி செய்ய முடியும்.
மக்களின் குறைகளை எவராலும் எக்காலத்திலும் நீக்க முடியாது..அவை அனைத்தும் இறைவன் கையில் உள்ளது.
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ, முடிசூடா மன்னர்கள்,ராஜாக்கள்,எஜமானர்கள்,அரசியல் வாதிகள் .ஆன்மீக வாதிகள்,நாட்டை ஆண்டு பார்த்தார்கள் .அவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல்,மாண்டு, அழிந்து போய் விட்டார்கள்.
மக்களுக்கு நன்மை செய்வதற்கு ஆட்சியில் அமர வேண்டிய அவசியம் இல்லை.எந்த வழியிலும்
நன்மை செய்யலாம்.
மக்கள் உழைப்பையும், பணத்தையும் பெற்று மக்களுக்கு நன்மை செய்வது நல்லதுதான் .ஆனால் இறைவன் பார்வையில் அவை நல்லது அல்ல !
அவரவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு,ஏழை .எளிய மக்களுக்கு நன்மை செய்வதுதான் நல்லது அதுவே உயர்ந்தது ,அதைத்தான் ஜீவ காருண்யம் என்று வள்ளலார் சொல்லுகின்றார்.
ஜீவ காருண்யம் உள்ள மனிதர்களே உயர்ந்த மனிதர்கள் .ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்கின்றார் வள்ளலார் ..
ஒவ்வொரு தனி மனிதனும் அன்பும் ,தயவும் கருணையும்,ஒழுக்கமும் உள்ளவர்களாக மாறினால் மட்டுமே நாட்டில் உள்ள மக்களின் குறைகள் நீங்கி..எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்..
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர் கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என் தந்தை நினது அருட் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சுவ மார்க்கம்
திகழ்ந்து ஒங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !
என்றும் ;----மேலும்
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்ஜோதியைப் பெற்றே அகங் களித்தல் வேண்டும்
தேத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாய்ச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவத்திலே நானும்
எந்தையும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே !
என்னும் பாடல்களின் வாயிலாக எளிய தமிழில் பதிவு செய்துள்ளார் .விளக்கம் தேவை இல்லை என நினைக்கின்றேன் ...
வள்ளலாரின் இந்த அருட் பாடல்களை இந்த அரசியல் வாதிகளுக்கும்,ஆன்மீக வாதிகளுக்கும் மக்களுக்கும் எப்போது தான் புரியப் போகின்றதோ தெரியவில்லை.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் இவர்களை காப்பாற்ற வேண்டுமாய், வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை .
நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும் என்ற வழியில் செல்வதுதான் நம்முடைய வழிபாடாக,வேண்டுதலாக செயல்பட வேண்டும் .
எல்லா உயிரக்ளும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு