தெருவில் உருண்டு வந்த அவதானியார் !
தெருவில் உருண்டு வந்த அவதானியார் !
வள்ளல்பெருமான் வடலூருக்கு அடுத்த கருங்குழி என்னும் ஊரில் தங்கி இருந்தார் .அந்த வீட்டின் உரிமையாளர் மகன் .புருசோத்தம ரெட்டியார் என்பவர் கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள ''திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளது ''மடத்திற்குப் போய் விட்டார் .அவற்றை அறிந்த அவரது தாய் தந்தையர் .,வள்ளல்பெருமானிடம், தம் மகனை அங்கிருந்து அழைப்பித்து அருள வேண்டும் என வேண்டினர் .
அவர்களின் வேண்டுதலை ஏற்று ,நிறைவேற்ற வேண்டும் எனக் கருத்தில் கொண்டவராய் .அம் மடத்தில் உள்ள தம்முடைய மாணவராகிய திருசிற்றம்பல ஞானியார் அவர்களுக்கு எளிய தமிழ் நடையில் .அங்குள்ள புருசோத்தம ரெட்டியாரை அனுப்பி வைக்குமாறு கடிதம் ஒன்று எழுதினார் .
அந்த கடிதமானது ,அந்த திருச்சிற்றம்பல ஞானியாரும், கணக்கில் அவதானி தேவிபட்டினம் ,முத்துசாமி பிள்ளையும் உரையாடிக் கொண்டு இருக்கின்ற வேளையில் போய்ச் சேர்ந்தது... அக் கடிதத்தை அம் முத்துசாமி பிள்ளையும், படித்துப் பார்த்தார். ..படித்துப் பார்த்து விட்டு திருசிற்றம்பல ஞானியாரை நோக்கி, ''வள்ளலார் பெரிய மேதாவி'' என்று சொன்னீர்கள் ''பெரிய மேதாவி ஒருவர் எழுதிய கடிதம் இலக்கண இலக்கியச் செறிவு இன்றி இவ்வாறு இருக்கின்றதே'' என்று பதறி ஞானியாரைக் கேட்டார் .
அதற்கு ஞானியார் '' வள்ளலார் வார்த்தையாடிக் கொண்டு இருக்கும் காலங்களில் சிந்திய இலக்கணமே இந்த உலகில் பரவி இருக்கின்றது'' என்று அவ் விடையை மறுக்க ,..அதற்கு அந்த அவதானியார் 'அங்கனமாயின் அம்மாதிரி ஒரு கடிதம் அவரிடம் இருந்து வரவழையுங்கள் ''என்று கூறினார் .
உடனே ஞானியாரும் ,அவ்வாறே ஒரு கடிதம் எழுதி அனுப்புமாறு ,இங்கு நடந்த வரலாற்றையும் உடன் கூட்டி எழுதி வள்ளல்பெருமானுக்கு அனுப்பி வைத்தனர்...அக் கடிதத்தைக் கண்ட சுவாமிகள் வெறுப்புடன் அதனை ''பிச்'' என்று சொல்லி கீழே வைத்து விட்டனர்...ஆனால் அச்சமயம் உடன் இருந்த தொழுவூர் --வேலாயுத முதலியாருக்கு ஆற்றாமையால் அவர் ,வள்ளலாரிடம் பதில் கடிதம் ஒன்று இலக்கண இலக்கியத்தோடு எழுதி அனுப்புமாறு விண்ணப்பஞ் செய்து கொள்ள ....வள்ளலார் இரண்டு வரிகள் மாத்திரம் எழுதி அவரிடம் தந்து மீதத்தை ''நீரே எழுதிவிடும் ''என்று கூறி விட்டார் .
அவ்வாறே அக் கடிதத்தை தொழுவூர் ''வேலாயுத முதலியார் எழுதி முடித்து அனுப்பி வைத்தார் ..( மிகவும் நீளும் என்பதால் அந்த கடிதத்தை பின் அனுப்பி வைக்கிறேன்) அக்கடிதம் ஆறாம் திருமுறையில் உள்ளன .
அக்கடிதம் ;--அன்பர்களின் விருப்பத்திற்கு கீழே தந்துள்ளேன்.!
இலக்கண வியனடை !
உணர்ந்தோரானியில் வகையவின்ன வென்றவற்றிற் பின் மொழிமதிக்கு முன்மொழி மறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய் பின் மொழியடை சார் முன் மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு ;--
பொய்யற் கெதிர்சார்புற்ற மூலியொன்று வளைத்து வணக்கஞ் செய்த ககன நீரெழிலென்றும் ,வான் வழங்கு பண்ணிகாரமென்றும் நாகச்சுட்டு மீனென்றும்
வேறு குறிப்பதொன்று ...
அண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மை யும்மை யடுத்த பல்லோர் வினாப் பெயர்ப் பொருள் குறிஞ்சி யிறைச்சிப் பொருளொன்றைனோடு புணர்ப
சேய்மைச் சுட்டடுத்த வத்திறத்தியல் யாது ?
இரண்டனுருபொடு புணர்ந்த தன்மைப் பன்மை யாறாவதன் பொருட்டாக்கினார்க் குய்த்த கற்பிய லதிகரிப்பின் வருந்தலை மகட் பெயர விரண்டிரண்டூகக் கழிவிலைப் பெயரவு மாகார வீற்று முதனிலைத் தனிவினைச் செயவென் வாய்ப்பாட்டு வினையெச் சத்தனவாகக் கலம்பகச் செய்யுளுறுப்பாற் சிறத்தும்
இருவகை முதற்பொரு ளொன்றன பாகுபாட்டு றுப்பிற் குறித்த வைபெரும் பூதத்தோர் விசேடனத் தெதிர் மறை நடுக்குறை யியற் சொற் பெயர வுயிர்ப் பெயராக வேதிர்காலாங் குறித்து நின்றது ..
சில வினைச் சார்பான் ,விலங்கு சூடிய வரையில் வெளியாம் இதனோடு இரு வகைப்பட்ட வோர்சார் புதுநிலஞ் செல வுய்த்தனம் ,வேண்டுழி வேண்டியாங் குய்க்க ,மற்றைய பின்னர் வரைதும்
இற்றே விசும்பிற் கனைச்சலம்.
இங்கனம்
நங்ககோச் சோழன்
வீரமணிச் சூடியார் திருவாணைப் படிக்கு
அடிமை
தொழுவூர் -வேலாயுதம் .
பார்வதிபுரம் ,
சுக்கிலவருடம்
துலா ரவி 27,
என்ற விசாலம் இட்டு கடிதத்தை அனுப்பினார் ....
அக் கடிதத்தை ஞானியார் அவர்கள் அவ் அவதானியார் இடம் காட்டினார் .அவர் பன் முறை படித்துப் பார்த்தும் பொருள் விளங்கவில்லை ..பொருள் விளங்காமை கண்டு ...''வேண்டும் என்றே ஒரு வித்வான் பூட்டிப் போட்டால் அந்த வித்வான்தான் அதைத் திறக்க வேண்டும்.''என்று கூறினார் .
அதைக் கேட்ட ஞானியார் புன்னகையுடன் ,அங்கனம் ஆயின் தாங்களும் '' வேண்டும் என்றே ஒரு பூட்டுப் போடுங்கள் '' என்றார்கள்.
அவ்வாறே அவதாநியாரும் ..
தகர வரிக் குழல் காமாதி யைந்திற் றங்கும்
தகரவரி நாலைந்து சாடும் ---தகரவரி
மூவொற்றி யூர் பதங்கள் மூன்று மங்கை யேந்து மொரு
சேவொற்றி யூர் பதத்தைச் சேர்
என்ற கவியினை எளிதில் பொருள் விளங்காதவாறு எழுதித் தந்தார் ...அந்தக் கவியினை ஞானியார் நம் பெருமானுக்கு அனுப்ப , அக்கடிதத்தை கண்ணுற்ற பெருமான் அவர்கள்,.அதற்கு உரிய உரையினையும் அவர் ,உணராத மற்றோர் தத்துவ உரையையும் எழுதி அனுப்பினார் .
வள்ளல் பெருமான் எழுதி அனுப்பிய உரையினைக் கண்ட அவதானியார்,உடனே அங்கு இருந்து புறப்பட்டு ,வள்ளலார் தங்கி இருக்கும் கருங்குழிக்கு வந்து சேர்ந்தார் .,,சேர்ந்தவர் வள்ளலார் இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு அவ்வீதிக் கோடியிலேயே இருந்து இரு கரங்களைச் சிரமேற் குவித்துக் கொண்டு தெருவிலே உருண்டு வந்து வள்ளல்பெருமான் திருவடிகளில் அடியற்ற மரம் போல் விழுந்து வணங்கினார்.
''யான் செய்த பிழைகளை எல்லாம் பொறுத்து அருளல் வேண்டும் ...நீங்கள் வித்வான் என மதித்து இருந்தேன் '''பூரண ஞானி என உணர்ந்திலேன் '''என்று அழுது புலம்ப ...தாயினும் தயவுடைய நம் வள்ளல்பெருமான் அவரை மன்னித்து ஆட்கொண்டார் ..
இச்செய்தி புயல் காற்றுபோல் தமிழகம் எங்கும் பரவியது..தமிழ் நாட்டில் உள்ள ஆதினங்கள்,மற்றும் இலக்கணம் இலக்கியம் தெரிந்த யாவரும் கருங்குழிக்கு வந்து வள்ளலாரை நேரில் கண்டு ஆசி பெற்றனர் .வள்ளல்பெருமான் தான் அருள் பெற்ற பூரண ஞானி என்பதை வெளியில் எங்கும் காட்டிக் கொள்ளவே இல்லை.அவையே அவருடைய பெருங் கருணையாகும்.அவருடைய பெரும் அடக்க ஒழுக்கமாகும் .
கையுற வீசி நடப்பதைக் நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால்
மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்
வையமேல் பிறர் தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படிப்பேன் !
காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பாட்டு அயல் கேட்டுப் பாடவும் பயந்தேன்
பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து
நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை
நினைக்கவும் பயந்தனன் எந்தாய் !
என்றும் பல நூறு பாடல்களின் வாயிலாக பதிவு செய்து உள்ளார் . தன்னுடைய அடக்கத்தையும்..,உண்மை ஒழுக்கத்தையும் ,இடைவிடாது கடைபிடித்து வாழ்ந்து வந்தவர் தான் நமது வள்ளலார் ..அவர்போல் நாமும் கடைபிடித்தால் மட்டுமே,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் பெற்று மரணத்தை வென்று வாழ முடியும்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு