ஞாயிறு, 7 மே, 2017

கடவுளால் மட்டுமே இந்த உலகத்தை காப்பாற்ற முடியும் !

கடவுளால் மட்டுமே இந்த உலகத்தை காப்பாற்ற முடியும் !

மனிதன் உயர்ந்த அறிவு படைத்தவன் .அவன் உண்பதற்கு இயற்கை வளங்கள் நிறைய உள்ளன.,அதிலே இலைகள்,பூக்கள்,காய் ,கனிகள் எல்லாம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக இறைவன் படைத்து உள்ளான் ,

ஆனால் மனிதனோ வாய் இல்லாத ஜீவன்களை கொன்று அதன் புலாலை உண்டு மகிழ்ச்சியுடன் வாழ நினைக்கின்றான்,வாழ்ந்து கொண்டு உள்ளான் .இவை எவ்வளவு கொடூரமான செயல் என்பதை அறிந்து கொள்ளாமல் புலால் உண்டு,பல துன்பங்களுக்கு ஆளாகி இறுதியில் நோய் வாய்பட்டு அழிந்து கொண்டு உள்ளான்.

இவற்றை ஆன்மீக போதகர்களும் ,ஆன்மீக சிந்தனையாளர்களும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள்.ஏன்? ஆன்மீக வாதிகளே கொலையும்,புலையும் செய்துகொண்டு உள்ளார்கள்..இவர்களை எல்லாம் ஆன்மீக வாதிகள் என்று எப்படி ஏற்றுக் கொள்வது .

இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை கொன்று தின்னுகின்ற வரையில் இந்த உலகத்தை இறைவன் காப்பாற்ற மாட்டார்.

குடிப் பழக்கத்தைவிட மோசமானது புலால் உண்பது ,குடிபழக்கத்திற்கு கூட இறைவன் மன்னித்து விடுவார் .கொலை செய்பவர்களையும் அதன் புலாலை உண்பவர்களையும் இறைவன் மன்னிக்கவே மாட்டார் என்பது மக்களுக்குத் தெரியாமலே தவறு செய்து கொண்டு உள்ளார்கள் .

இதைப்பற்றி வெளிப்படையாக சொன்னவர்கள் தமிழ் நாட்டில் தோன்றிய திருவள்ளுவர் ,,திருஅருட்பிரகாச வள்ளலார் .என்னும் அருளாளர்கள் .

வள்ளுவர் சொல்லுகின்றார் !

தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊண் உண்பான
எங்கணும் ஆளும் அருள் !

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று !

கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிர்களும் தொழும்.!

கொல்லாமை மேற் கொண்டு ஒழுகுவான் வாழ நாள் மேற்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று !

நல்லார் எனப்படுபவர் யாதெனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழு நெறி !

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான் பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை !

எனக் கொல்லாமை ,புலால் உன்னாமைப் பற்றி இரண்டு அதிகாரங்களில் இருபது குறள்கள் எழுதி வைத்து உள்ளார்.

வள்ளலார் ஆயிரக் கணக்கான பாட்ல்களில் கொல்லாமைப் பற்றியும் புலால் உண்ணாமைப் பற்றியும் எழுதி வைத்து உள்ளார்.

கொலை புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குளத்து முதல் மகனே ..என்றும்.

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல் என்பெலாம் கருக இளைத்தனன் ...என்றும்.

கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத் தல்லானைக் கொலை புலையைத் தள்ளாதாரைத் தாழுவானை ....என்றும்

உயிர்க் கொலையும் புலைப் போசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் ...என்றும்

வன்புடையார் கொலை கண்டு புலை உண்பார் சிறிதும் மரபினர் அன்று ....என்றும்

கொடியவரே கொலை புரிந்து புலை நுகர்வார் ....என்றும் ஆயிரக்கணக்கான பாடல்களில் கொல்லாமைப் பற்றியும் அதன் புலால் உண்பதால் உண்டாகும் தீமைகள் பற்றியும் தெளிவாக எழுதி வைத்தும் உள்ளார் .அதற்காக ஜீவ காருண்யம் என்ற தனி நூலை எழுதி வைத்து உள்ளார் .

கருணையே வடிவாய்ப் பிறர் களுக்கு அடுத்த
கடும் துயர் அச்சம் மாதிகளைத்
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம்
தரவும் வன் புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க
உஞர்றவும்அம்பலம் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை
வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய் !

என்று இந்த உலகில் உள்ள மக்கள் கொலை செய்யாமலும்,அதன் புலாலை உண்ணாமலும் காப்பாற்ற வேண்டுமாய் மக்களுக்காக இறைவனிடம் வேண்டுகின்றார்.

எனவே இந்த உலகத்தையும் உயிர்களையும் காப்பாற்ற இறைவனால் மட்டுமே முடியும்.

அறிவுள்ள மனிதர்கள் கொலை செய்யாமலும்.புலால் உண்ணாமலும் இருந்தால் மட்டுமே இறைவன் காப்பாற்றுவார் .வேறு வகையில் காப்பாற்ற வழியே இல்லை ..

இவற்றை அறிந்து மக்கள்,இறைவனால் படைக்கப் பட்ட எந்த உயிரையும் கொன்று அதன் புலாலை உண்ணாமல் இருப்பதே மனிதத் தன்மையாகும் .

புலால் உண்பவர்கள் மிருகத்தை விட கேவலமானவர்கள் என்று திருவள்ளுவரும் வள்ளலாரும் தெளிவாகச் சொல்லி உள்ளார்கள்.

திருவள்ளுவர்..வள்ளலார் சொல்லி உள்ள கருத்துக்களை சிரமேற்க் கொண்டு பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மக்களை இறைவன் காப்பாற்றுவார் ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு