ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆன்ம நேய அன்பு உள்ளங்கள் இனைவருக்கும் வந்தனம் !

ஆன்ம நேய அன்பு உள்ளங்கள் இனைவருக்கும் வந்தனம் !

  நான் எந்த மொழிக்கும் விரோதி அல்ல.மொழி வெறியனும் அல்ல !

இந்த உலகத்தில.வாழ்பவர்கள் எவற்றைத் தெரிந்து கொள்வதாக இருந்தாலும் மொழி வாயிலாகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

வள்ளலார் சொல்லியுள்ள சாகாக்கல்வியைத் தெரிந்து கொள்ளவும்
இறைவன் யார் ? என்ற உண்மையைத் தெரிந்து கொள்வநற்கும் ஒரே மொழி தென்மொழியாகிய தமிழ் மொழி என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில் மிகத்தெளிவாக தமிழ் மொழியின் சிறப்பை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதை கீழே படித்துப் பாருங்கள்.

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

என்கிறார்

மேலும் தமிழ் மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றார்.

திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி என்கிறார்.

திருவருள என்றால்் என்ன ?

தமிழ் இறைவனால் தோற்றி வைத்துள்ள மொழி என்பதாகும்.

மற்ற உலகில். உள்ள மொழிகள் அனைத்தும் மனிதர்களால் தோற்றி வைக்கபபட்டது .

மனிதன் மாயையில் சிக்குண்டவன்.அதனால் மாயை என்னும் சாத்தான் என்னும் பஞ்ச பூத உணர்வினால் எழுதியது.அனைத்து மொழிகளும் என்பதாகும்

ஆதலால் தமிழ் மொழி இறைவனால் தோற்றி வைக்கப்பட்ட மொழி என்றும்.செம்மொழி என்றும் .மெய்மொழி என்றும் .அருள்மொழி என்றும் எழுதி இருந்தேன்.

சாகாக்கல்வி கற்பதற்கு தமிழ்தான் உரிய மொழி என்பதை சன்மார்க்கிகள்.ஏன் உணர்ந்து கொள்ளவில்லை.புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

தமிழ்மொழி தமிழனுக்கும் மட்டும் சொந்தம் அல்ல .உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது. பொதுவானது.

இறைவன் எல்லோருக்கும் எப்படி பொதுவானவரோ.அப்படி தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது.என்பதை அனைவரும் தெரிந்து.புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.

மற்ற மொழிகளை கற்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.எவை சிறந்த மொழி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் எழுதியதே தவிர யாரையும் புன்படுத்துவது அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர் தமிழ்வேங்கை மிகச் சிறப்பான விளக்கம் தந்து உள்ளார் அவருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் மொழி இறை மொழி என்பதால் ..அதனால் உங்களுக்கு என்ன நட்டம் என்ன கஷ்டம் என்று எனக்குத் தெரியவில்லை.
சிந்தித்து செயல்படுங்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு