சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கை !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ! என்பது வள்ளலார் தோற்றுவித்த மார்க்கமாகும்.இந்த மார்க்கம் உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி வள்ளல்பெருமான் தோற்றுவித்து உள்ள மார்க்கமாகும் .
இந்த புதிய மார்க்கத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் தலைவர் இந்த மார்க்கத்திற்கு செயல் தலைவர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பதை அனைத்து உலக மக்களும் அறிந்து, தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச்
சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே -- சுத்தசிவ
சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
என் மார்க்கம் நின் மார்க்கமே !
இந்த மார்க்கத்திற்கு சுருக்கமாக சுத்த சன்மார்க்கம் என்று பெயர் வைத்து
உள்ளார் வள்ளலார் . இந்த மார்க்கம் இறைவனோடு நேரிடையாக தொடர்பு
கொள்ளும் ஞான மார்க்கமாகும்.. இந்த மார்க்கத்தின் முக்கிய கொள்கை சாகாக் கல்வி கற்றுத் தரும் மார்க்கமாகும் . சாகாக்கல்வி என்பது மரணம் இல்லாமல் வாழும் ,மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதாகும்..
மரணம் இல்லாப் வாழ்வு என்பது !
மனித தேகம் மண்ணுக்கோ ,நீருக்கோ, நெருப்புக்கோ ,காற்றுக்கோ,ஆகாயத்திற்கோ இறை ஆகாமல்,மரணத்தை வென்று ''ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகம்'' பெற்று பேரின்ப சித்திப் பெரு வாழ்வில் வாழ்வதாகும் .
பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பது !
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும். அதாவது நமது உண்மையான தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பரி பூரண அருளைப் பெற்று , மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் என்றும் அழியாத தேகம் பெற்று வாழ்வதாகும் .அந்த தேகத்திற்கு ஞான தேகம் என்று பெயர் ....அந்த ஞான தேகம் தான் கடவுளின் தேகம் .அந்த ஞான தேகத்தைப் பெறுவதுதான் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.
கடவுளின் ஞான தேகம் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம்
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் --- ஓதரிய
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ் ''ஞான
தேகா'' கதவைத் திற !...........என்கின்றார் வள்ளலார் .
மனித தேகம் கொடுத்ததின் நோக்கமே.,,வாடகை வீட்டில் குடி இருக்கும் நாம்
( அதாவது அசுத்த பூத காரிய தேகம் ) அந்த வாடகை வீட்டை இறைவன் அருளைக் கொண்டு சுத்த தேகமாக மாற்றி,,,பின் பிரணவ தேகமாக மாற்றி...மேலும் ஞான தேகமாக மாற்றினால் தான் சொந்த வீடான ஆன்ம தேகம் கிடைக்கும் ..ஆன்ம தேகம் கிடைத்தால் மட்டுமே ஆண்டவரின் மேல்வீட்டுக் கதவு திறக்கப்படும் ..அதன் பின்புதான இறைவனால் கொடுக்கப்படும் சுத்த பிரணவ ஞான தேகம் கிடைக்கும்.
இதுவரையில் ஞான தேகம் கிடைத்த அருளாளர்கள் எவ்வுலகிலும் எவரும் இல்லை ! என்கின்றார் வள்ளலார் .
நோவாது நோன்பு எனைப்போல் பெற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் ----தேவா நின்
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே அறை !......என்பதை பதிவு செய்கின்றார் .
எந்த அருளாளர்களுக்கும் கிடைக்காத இந்த அறிய வாய்ப்பை சுத்த சன்மார்க்கத்தின் கொள்கைகளை முழுமையாக கடைபிடிப்பவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்கின்றார் வள்ளலார் .
சுத்த சன்மார்க்க கொள்கைகள் எவை ?
1,..கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உண்மையாக ஏற்றுக் கொண்டு பின் பற்ற வேண்டும் !.
2,..சிறு தெய்வ வழிபாடு கூடாது.....அந்த தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி
செய்யக் கூடாது !
3,..எக்காரணம் கொண்டும் புலால் உணவு உண்ணலாகாது !
4,..சாதி,சமயம் ,மதம் ,இனம் ,மொழி ,நாடு முதலிய வேறுபாடுகள் கூடாது !
5,..எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !
6,.ஏழைகளின் பசி தவிரத்தலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பதை உண்மையில் உணர்ந்து செயல்பட வேண்டும் !
7,.வேதம் ,ஆகமம்,புராணம், இதிகாசம், சாத்திரம் முதலிய எதிலும் லஷியம்
வைக்க வேண்டாம் !
8,.இறந்தவரை புதைக்க வேண்டும் !..எரிக்கக் கூடாது 1
9,.கருமாதி ,திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம் !
10,.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது !
11,.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது !
12,.எதிலும் பொது நோக்கம் வேண்டும்
மேலே கண்ட கொள்கைகளை முழுமையாக கடைபிடிப்பவர்கள் எவர்களோ அவர்களே சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் !.அவர்களே இறைவன்
அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் . மரணத்தை வெல்லும் தகுதிப் பெற்றவர்கள் ஆவார்கள் .
வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை ,விட்டுவிட்டு ,ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் வைத்துக் கொண்டு,,,சமயத்தையும் .பிடித்துக் கொண்டு, மதத்தையும் பிடித்துக் கொண்டு, சன்மார்க்கத்தையும் பிடித்துக் கொண்டு சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு எந்த பயனும்
எப்போதும் கிடைக்காது .
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு