வியாழன், 30 மார்ச், 2017

சுத்த சன்மார்க்க கொள்கை !



சுத்த சன்மார்க்க கொள்கை !

வள்ளலார் காட்டிய சுத்த   சன்மார்க்க  கொள்கையானது ,  கடவுளின்    உண்மையைத்  தெரிந்து கொள்ளும் மார்க்கமாகும் .

 இதுவரை,மாயையால்    உருவாக்கப்பட்ட பஞ்ச பூத  கர்த்தாக்களாகிய ,பிரம்மா ,விஷ்ணு ,சங்கரன்,மகேச்வரன்,சதாசிவம்,போன்ற,  தத்துவங்களையும்,...தத்துவங்களைப் பின்பற்றி தொடர்பு  கொண்ட ,சித்தர்கள்,யோகிகள், ஞானிகள்,போன்ற அருளாளர்கள் காட்டிய ஆன்மீக வழியில் மனித சமுதாயம்  பின் பற்றி பின் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.மேலும் புத்தர்,ஏசு ,நபிகள் போன்ற மதத் தலைவர்கள் காட்டிய வழியிலும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றோம். இவை எல்லா வற்றிற்கும் வேதங்கள் என்று பெயராகும் .

வேதங்கள் அனைத்தும் உண்மையான கடவுளைக் காண முடியவில்லை,அதற்கு உண்டான  தகுதியை  அவர்களால்,பெற முடியவில்லை .காரணம் அவர்கள் இறைவனைக் காணும்  ''அருள் பூரணத்தைப்'' பெறவில்லை .. ஏகதேசம் பெற்று உள்ளார்கள் .

அதற்கு வள்ளலார்  பதிவு  செய்துள்ள   பாடல் !

அறங்குலவு  தோழி  இங்கே  நீ யுரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை   எதனால் எனில் இம்  மொழிகேள்
உறங்குவதும் விழிப்பதும் பின்  உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன்    பிறத்தல்   பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை  வாய்த்தனர் அங்கவர்பால்
இரங்கல் எனில்    பெசுததால் என்  பயனோ  நடஞ் செய்
இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

என்கின்றார் வள்ளலார் .

அவர்கள் உண்மை    அறியாமல் சில சில விரதங்களை கடைபிடித்து ,       உண்ணுவதும் ,உறங்குவதும்,விழிப்பதும்,பிறப்பதும், இறப்பதும் மாய்
இருந்து மதத்தலைமை,பதத்தலைமை பெற்றார்களே ஒழிய வேறு ஒன்றும் காணவில்லை.ஆதலால் அவர்களைப் பின் தொடர்ந்து செலவதால் எந்த பயனும்  இல்லை..நான் உண்மையான இறைவனைக் கண்டு அவர் புகழ் பேசிக்  கொண்டு இருக்கின்றேன் .அந்த உண்மையான   இறைவன்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் '' என்பதை தெரிவிக்கின்றார் .

அந்த உண்மையான அருட்பெருஞ்ஜோதி   ஆண்டவரைத் தெரிந்து கொள்வது தான் சுத்த சன்மார்க்க கொள்கையாகும் ..

மரணத்தை வென்றவர்களால்   மட்டுமே  உண்மையான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக்   காண முடியும் .

சுத்த சன்மார்க்க கொள்கை என்ன என்பதை வள்ளலார் சொல்லுகின்றார் !

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர் ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் - இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள் மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். 

ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள. ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை

மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.
இதற்குப் பிரமாணம்: "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், "அறங் குலவு தோழி இங்கே"* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். இதன்றி, திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் "இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்" என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.

சுத்த சன்மார்க்கிகளின் முக்கிய  கடமை,கொள்கை என்ன என்பதை  வள்ளலார் தெளிவாக  விளக்கம் தந்து உள்ளார் .
இனிமேலாவது  வள்ளலார் சொல்லியவாறு எல்லாம் வல்ல தனித்தலைமைப்                   பெரும்பதி    அருட்பெருஞ்சோதி ஆண்டவரைத் தொடர்பு  கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம் ..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு