ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

மேட்டுக் குப்பத்தில் நடந்த சம்பவம் !


மேட்டுக் குப்பத்தில் நடந்த சம்பவம் !

வள்ளலார் சித்தி அடைந்த மேட்டுக்குப்பத்தில நடந்த சம்பவம் !

வள்ளலார் அறுநூற்று நாற்பத்து ஏழு கோடி சித்துக்கள் கைவரப் பெற்றவர் .

அதிலே இறந்தவரை எழுப்பும் சித்து மிகவும் உயர்ந்தது .

 அந்த சித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மட்டுமே உரிமை   உடையதாகும் .

 அந்த சித்தையும்  வள்ளலாருக்கு ஆண்டவா் வழங்கி விடுகிறார் .

அவற்றை பெற்ற உடன் ,"செத்தார் எழுவார் என்று கைத்தாளம் போடு "என்று மகிழ்ச்சி பொங்க  பாடி பதிவு செய்கின்றார் ,

மேட்டுக்குப்பம் மணையக்காரர் குடும்பம் வள்ளலார் இடத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பு உடைய குடும்பம் .

மணையக்காரர் மரணம் அடைந்து விடுகின்றார் .அவரை எழுப்பி தரும்படி வள்ளலார் இடம் முறை இடுகிறார்கள் .

வள்ளலாரும் ஆர்வத்துடன் எழுப்புவதற்கு தயாராகி விடுகின்றார் .என்ன நினைத்தாரோ தெரியவில்லை "பிச்"" என்று சொல்லி விட்டு திரும்பி விடுகின்றார் .

 பிறகு அவரை அடக்கம் செய்து விடுகிறார்கள் .

மணையக்காரர் மனைவி வள்ளலார் சொல்லிய வண்ணம் கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது எனபதை ஏற்றுக் கொண்டு தாலி வாங்காமல் இருந்தது .

வள்ளலார் ஆண்டவா் கட்டளையை மீறாமல் செயல் பட்டார் .

செத்தவர்களை எழுப்பும் சித்து கிடைத்து விட்டது என்று எழுப்பி இருந்தால் , வள்ளலார் இறைவன் உடன் கலந்து இருக்க மாட்டார் .

மரணம் இல்லாப்பெருவாழ்வு கிடைத்து இருக்காது .

அவ்வளவு சித்துக்களையும் பெற்று .விரையம் செய்யாமல் வாழந்தவர் தான் வள்ளலார் .

இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி !

இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும் சிறந்த வல்லபம் உறு திருவருள் மருந்தே !

இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி !

என்று தான் பெற்ற பேற்றினை நிறைய பாடல்கள் மூலம் பதிவு செய்து உள்ளார் .

அவரவர்கள் வள்ளலார் சொன்ன ஒழுக்க நெறிகளை கடைபிடித்து மேலே ஏற வேண்டும் என்பதுதான் சுத்த சன்மார்க்கம் .

மக்களின் துன்பங்களான பசி ,கொலை,பிணி ,தாகம் ,இச்சை ,எளிமை .பயம் போன்ற துன்பங்களை நம்மால் முடிந்து அளவுக்கு போக்க வேண்டுமே தவிர .

உடல் உறுப்புகளை வள்ளலார் தானமாக கொடுக்க சொல்ல வில்லை என்பதை சுத்த சன்மார்க்கிகள் அறிந்து புரிந்து தெரிந்து செயல் பட வேண்டும் .

வள்ளலாருக்கு செத்தவர்களை எழுப்பும் ஆற்றல் இருந்தும் ஏன் எழுப்ப வில்லை என்பதை சிந்திக்க வேண்டும் .

ஆண்டவா் கட்டளையை மீறி நம்முடைய விருப்பம் போல் எதையும் செய்து விடக்கூடாது .

உடம்பை நாம் படைக்கவில்லை .நாம் படைக்காத உடம்பை நமக்கு கொடுக்கும் அதிகாரம் இல்லை .

பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு