வியாழன், 11 பிப்ரவரி, 2016

உண்மையான இறைவனைக் கண்டவர் யார் ?

உண்மையான இறைவனைக் கண்டவர் யார் ?


உலகில் தோன்றிய அருளாளர்கள் எவரும் உண்மையான இறைவனைக் காண முடியவில்லை .

வள்ளல்பெருமான் ஒருவர்தான் உண்மையான இறைவனைக் கண்டவர் கடவுளோடு கலந்தவர் .

மகாதேவ மாலை என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்..

உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர்
உறு கருடர் காந்தர்வர் இயக்கர் பூதர்
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை
வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடிக்
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை
வினவ மற்றவையும் காணோம் என்று
வருத்தம் உற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற
வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே !

என்றும்...

வான் காணா மறை காணா மலரோன் காணான்
மால் காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான் காணா இடத்து அதனைக் காண்போம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான் காணா உளக் கமலம்  அலர்த்தா நின்ற
வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன் காணா இளங் கன்றாய் அலமந்து ஓங்கும்
அன்பர் தமைக் கலந்து கொளும் அமலத் தேவே !

என்று தெளிவாக தெரிவித்து உள்ளார்.

நான் கண்டேன் என்ற பாடலை வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்...

காட்டை எலாம் கடந்து விட்டேன் நாட்டை அடைந்து உனது

கடிநகரப் பொன் மதிற் காட்சிகண் குளிரக் கண்டேன்

கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலம் இடப் பார்த்தேன்

கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிந்தேன்

சேட்டைஅற்றுக் கருவி எலாம் என்வசம்

நின்றிடவேசித்தி எலாம் பெற்றேன் நான் திருச்சிற்றம்பலம் மேல்

பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே

பலன் தரும் என் உளத்தினிலே கலந்து நிறைந்து அருளே

என்றும் மேலும்;--

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்

கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்

அடர்  கடந்த திரு அமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்

அறிந்து தெளிந்து அறிவு உருவாய்  அழியாமை அடைந்தேன்

உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்

உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்

இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே

இத்தனையும் பொது நடஞ் செய் இறைவன் அருட் செயலே.

மேலே கண்ட பாடல்கள் வாயிலாக மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார்.

வள்ளல்பெருமனைத் தவிர வேறு எவரும் அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மைக் கடவுளைக் காண முடியவில்லை அவரோடு கலக்கவும் முடியவில்லை.

அனைத்து அருளாளர்களும் தேடித்தேடி அலைந்து,கடவுளைக் காணமுடியாமல் சோர்ந்து போனார்கள்..பின் பிறந்து பிறந்து இறந்து இறந்து அழிந்து போனார்கள்.

ஆன்மீக அறிவுள்ள மனிதர்கள் தெளிவாகப் புரிந்து,,அறிந்து  கொண்டு வள்ளல்பெருமான்  காட்டிய சுத்த சன்மார்க்க உண்மை நெறியைப் பின்பற்றி கடைபிடித்து வாழ்ந்து,நாமும் வள்ளலாரைப் போல் உண்மையான ஆண்டவரைக் கண்டு அவர் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெரு வாழ்வு வாழ்வோம்.

வாருங்கள்   வாருங்கள்... வாருங்கள்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896,..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு