புதன், 4 நவம்பர், 2015

காதலித்தால் சாதி,சமயம்,மதம் ஒழியும் !

காதலித்தால் சாதி,சமயம்,மதம் ஒழியும் !

ஜாதியும் மதமும் சமயமும் பொய் என்றார் வள்ளல்பெருமான் .ஜாதி .சமயம் ,மதத்தை சட்டத்தினாலும்,திட்டத்தினாலும்.ஆட்சியினாலும்,அதிகாரத்தினாலும் பேச்சினாலும் ஒழிக்க முடியாது,

ஒவ்வொரு ஆண் பெண் பழக்கத்தினாலும்,அன்பினாலும்,உணர்ச்சியினாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சாதி,சமயம்,மதம் என்ற அரக்கனை ஒழிக்க முடியும்.

காதலுக்கு சாதி,சமயம்,மதம் தடை இல்லை ,அதற்கு தடைகள் எதுவும் தெரியாது.

அன்பும்,பண்பு ஒழுக்கம் உணர்ச்சியும் தான் காதலுக்கு வழிக் காட்டுகின்றது.

இனி வருங்கால இளைஞர்கள் மனது வைத்தால் மட்டுமே சாதி,சமயம், மதத்தை ஒழிக்க முடியும்,

சாதி,சமயம்,மதத்தைப் பார்க்காமல் அன்பினால்,அரவணைப்பினால் காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

வாழும் காதலாக இருக்க வேண்டும் பிரியும் காதலாக இருக்க கூடாது .அதில் ஆண்,பெண் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .

அன்பு ,பாசம்,நேசத்துடன் காதலியுங்கள் காதிலித்து வாழ்ந்து காட்டுங்கள் .

நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் ,நாம் அனைவரும் ஓர் உரிமை உடையவர்கள் .
சாதியால் ,சமயத்தால் ,மதத்தால் சுயநல வாதிகள் நம்மை பிரித்து வைத்து விட்டார்கள்.

இனிமேல் நீங்கள் எதைப்பற்றியும் கவலைப் படாதீர்கள் நம்மைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்போதும் துணை இருப்பார்.

காதலிப்பது தவறு இல்லை காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

வெற்றி உங்கள் கையில் .

இதைத்தான் வள்ளலார் சாதி,சமயம்,மதம் அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கின்றார்.
ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு