வியாழன், 5 நவம்பர், 2015

உலகை திருத்தும் ஒரே மார்க்கம் !

உலகை திருத்தும் ஒரே மார்க்கம் !

இன்னும் கொஞ்ச காலத்தில் உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போய் விடும் .

உலகத்தை திருத்தும் ஒரே மார்க்கம் இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட ..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற புனித அருள் மார்க்கமாகும்.

மற்ற மார்க்கங்கள் யாவும் மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்ட அனைத்தும் துன் மார்க்கங்களாகும் ,அவற்றை பின்பற்றுவதால் எந்த பயனும் இல்லை.

உலகில் உள்ள ஆன்மீக மார்க்கங்கள் அனைத்தும் ,மாயையால் சிக்குண்ட பெரியவர்களால் தோற்றுவிக்க பட்ட பொய்யான மார்க்கங்கள்.அதாவது சாத்தானின் மார்க்கம்  என்பதை அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகில் உள்ள மார்க்கங்கள் அனைத்தும் குற்றமே புரியும், அன்பு .தயவு,கருணையே இல்லாத  கொலைக்கார மார்க்கங்கள் .

உண்மையான கடவுளை அறியாத மார்க்கங்கள் ,கடவுளைக் காணாத மார்க்கங்கள்,கடவுளை களங்கப் படுத்திய மார்க்கங்கள்

கண்ட கண்ட பொய்யான தத்துவ உருவங்களை வைத்து இதுதான் கடவுள் என்று அதற்கு பெயர் வைத்து ,மக்களை நம்ப வைத்து,மக்களை படு குழியில்,நாற்றம் மிகும் குப்பையில்  தள்ளி வைத்து விட்டார்கள் .

மேலும் கடவுளின் பெயரால் சாதி,சமயம்,மதம் என்ற வேறு வேறு கொள்கைகளை வைத்து ,மக்களை வேறுபடுத்தி மனித சமுதாயத்தை அழித்துக் கொண்டு உள்ளார்கள் .மனிதர்களை பைத்தியக் காரர்களாக மாற்றி வைத்து விட்டார்கள்.

உலகில் உள்ள அரசியல் வாதிகள்,ஆட்சியாளர்கள்  அனைவரும் சாதி,சமயம்,மதங்களைப் பின் பற்றுபவர்கள் அவர்களால் மக்களை காப்பாற்ற முடியாது .

அவர்கள் அனைவர்களும் மதவாதிகளைப் போல் கொள்ளை அடிக்கும் கூட்டங்கள்

இன்று நாட்டை அழித்துக் கொண்டு உள்ளவர்கள் .அரசியல் வாதிகள் .ஆன்மீக வாதிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அரசியலும் ஆன்மீகமும் ஒற்றுமை இல்லாமல், சாதி,சமயம், மதம் என்ற  பிரிவினையைத் தூண்டி விட்டு ,உலகத்தையும், மனிதர்களையும்.பொருளை வைத்துக் கொண்டு பொருளைக் கொடுத்து  அழித்துக் கொண்டு உள்ளார்கள் .

உலகைத்தை காப்பாற்றும் ஒரே மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்பதாகும்.

வள்ளல்பெருமான் இறைவனுடைய அருளைப் பெற்று கொண்டு ,பொருள் உள்ள  எல்லா மார்க்கங்களையும் அழித்துக் கொண்டு வருகின்றார் .

சாதி, சமய ,மதங்களில் சிக்குண்ட மனிதர்களை காப்பாற்றவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான் .

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் ;---

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார்
மன் மார்க்கதாலே மகிழ்ந்து ....என்கின்றார்

அடுத்து '--

பன் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே -சொன் மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு .

அடுத்து ;--

சாதி குலம் என்றும் சமய மதம் என்றும் உப
நீதி இல்லா ஆசிரம நீட்டு என்றும் --ஓதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்த்துவே பிறர் தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று ...

என்று சாதி,சமயம்,மதங்களுக்கு சாட்டை அடிக் கொடுக்கின்றார் .

சாதி,சமயம்,மதம்,சாத்திரம்,வேதம் ஆகமம்,புராணம், இதிகாசம்  ஆசிரம,ஆச்சாரங்கள் போன்ற பொய்யான அமைப்புகளை வைத்துக் கொண்டு ,பேய்கள் போல் ஓதிக் கொண்டும் வழிப் பட்டுக் கொண்டும், மனித இனங்களையும்,உயிர் இனங்களையும் கருணை இல்லாமல் நீதி இல்லாமல் அழித்துக் கொண்டு உள்ளார்கள்

உலகில் உள்ள மார்க்கங்கள் யாவும் பேய் பிடித்தது போல் அடிக் கொண்டு உள்ளன .அவைகள் யாவையும் இருக்கும் இடம் தெரியாமல் அழித்து மக்களை காப்பாற்றுவது தான் என்னுடைய முதல் பணியாகும் என்கின்றார் வள்ளலார் .

இந்த துணிவும் துணிச்சலும் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை .ஏன் என்றால் வள்ளலாரை எவராலும் அசைக்க முடியாது ,அழிக்க முடியாது,நெருங்க முடியாது அவர் .இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்றவர்

மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ,இனிமேல் உங்களை காப்பாற்ற வள்ளலார் உருவாக்கிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற மார்க்கத்தை விட்டால் வேறு வழி இல்லை

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார் '=

எவ் வுலகும்.அண்டங்கள் அத்தனையும் நான் காண
இவ்வுலகில் என் தந்தை எனக்கு அளித்தான்--எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் தனை அடையச் செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி .

என்கின்றார் ,

நீங்கள் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் இருந்தாலும், உங்களை எந்த வழியிலாவது மாற்றி  புனிதர்களாக்கி சன்மார்க்கிகளாக மாற்றிவிடுவேன் .இது இறைவன் எனக்கு இட்ட கட்டளையாகும் .

நாளைய உலகம் புனிதமுறு சன்மார்க்க உலகமாக மாற்றி .மனிதர்களை புனிதர்களாக மாற்றும் காலம் நடந்து கொண்டு உள்ளன.

உலகை மாற்றும் ஒரே மார்க்கம் சுத்த சன்மார்க்கம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு