புதன், 4 நவம்பர், 2015

வள்ளல்பெருமான் உலக மகா சீர் திருத்தவாதி !

வள்ளல்பெருமான் உலக மகா சீர் திருத்தவாதி !

வள்ளல்பெருமானை எல்லா சாமியார்கள் போல்,,எல்லாத் துறவிகளைப்போல் எல்லா அருளாளர்கள் போல் நினைத்து விடாதீர்கள்.

அவர் முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்றவர் .

அவர் ஒரு ஆன்மீக பொது நல சீர் சிருத்தவாதி ....அவரைப்போல் முற்போக்கு சீர் சிருத்தவாதி உலகில் எவரும் இல்லை.

கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று முதன் முதலில் உலகத்திற்கு சொன்னவர்தான் வள்ளல்பெருமான் .

மனிதன் கடவுளை படைக்க முடியாது என்றவர் .அதே நேரத்தில் கடவுள் ஒருவர் உண்டு என்றவர் .

அவர் கடவுள் இல்லை என்று எப்போதும் சொன்னதில்லை.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது என்றவர்.

கடவுளின் பெயரால் உயிர்களை பலி வாங்குவது கொடுமையான பாவம் என்று சொன்னவர் .அவர்களுக்கு கடவுள் இடத்தில் மன்னிப்பே கிடையாது கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்றவர் .

வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரங்கள் யாவும் பொய்யானக் கற்பனைக் கதைகள் என்றவர்.

உயிர்களை கொலை செய்ய சொன்னவனும் மாமிசத்தை உண்ணச் சொன்னவனும்,மேலும் இறந்தவர்களை எழுப்புகின்ற சக்தி படைத்தவன் யாராக இருந்தாலும் அவனை ஞானி என்றோ அருளாளன் என்றோ சொல்ல வேண்டாம் என்றவர்.

மனிதர்களை அழித்துக் கொண்டு இருப்பது ,சாதி,சமயம்,மதம் போன்ற கொள்கைகள் என்பதை பறை சாற்றியவர்.

மனிதர்களுக்கு உடம்பில் ஒன்பது துவாரங்களை வைத்து படைத்த கடவுள் .. .காதுக்கு கடுக்கன் இடவும்,மூக்குக்கு மூக்குத்தி அணியவும் துவாரம் வைத்து அனுப்பி இருக்க மாட்டாரா .என்ற முற்போக்கு சிந்தனையாளர் வள்ளலார் .

கடுக்கன் அணிவதும் மூக்குத்தி அணிவதும் சமய மத வாதிகளின் சுய நல சூழ்ச்சியானது என்றவர்.

இறந்தவர் புதைக்க வேண்டும் எரிக்க கூடாது என்றவர் .அப்படி எரித்தால் அதுவும் கொலை செய்வதற்கு சமமாகும் என்றவர்.தூங்குவனை தீயில் வைத்து எரிப்பது போலாகும் என்றவர்.

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றவர்.

உயிர்களுக்கு உதவி செய்வதும்,இரக்கம் காட்டுவது மட்டுமே கடவுள் வழிபாடு என்றவர்.

கருமாதி திதி போன்ற சடங்குகள் செய்வது கூடாது .அவை அறியாமையால் செய்யும் மூடத்தனம் என்றவர் .

ஆனம்நேய ஒருமைப்பாட்டு உரிமையை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றவர்.

எல்லா உயிர்களையும் தன்னுடைய உயிர்களைப் போல் பாது காக்க வேண்டும் என்றவர்.

மனிதர்களுக்கும் உயிர்களுக்கும் தீங்கு செய்யும் கருணை இல்லாத ஆட்சி கடுகி ஒழிக . அழிந்து போக வேண்டும் என்று சாபம் கொடுத்தவர் .

உயிர்கள் மேல் அன்பு .இரக்கம்,கருணை உள்ள அருள் நயந்த நன்மார்க்கர் தான் நாட்டை ஆளவேண்டும் (ஆட்சி செய்யவேண்டும் ) என்றவர்.

ஏழை பணக்காரன் என்ற நிலை மாற வேண்டும் என்றவர் ..ஒத்தாரும் உயர்ந்தாரும் ,தாழ்ந்தாரும் உலகியல் நடத்த வேண்டும் என்றவர்.

எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள் எனவே வேற்றுமை பாராட்டக் கூடாது என்றவர்.

ஆலய வழிப்பாட்டு முறைகள் யாவும் உண்மையானது அல்ல .

அவை யாவும் ஜடமான தத்துவங்கள்,உணர்ச்சி இல்லாதது பேசாதது உங்கள் குறைகளை கேட்காதது,அவைகள் யாவும் வாய் பேசாத பொம்மைகள்

அவைகளை  கடவுள் என்று பெயர் வைத்து கடவுள் வழிபாடு என்று சொல்லி மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.

இயற்கையின் உண்மை ரகசியங்களை வெளிச்சம் போட்டு காட்டியவர் .

பிறப்பின் இறப்பின் ரகசியங்களைக் கண்டு பிடித்து மனிதன் இறப்பு இல்லாமல் வாழ முடியும் என்ற உண்மையை அறிவியல் ரீதியாக கண்டு பிடித்தவர்.

ஆணும் பெண்ணும் சமம் .ஆணுக்கு உள்ள உரிமைகள் யாவும் பெண்ணுக்கும் உண்டு என்று உலகில் முதன் முதலில் குரல் கொடுத்தவர் .

உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இருப்பது பெரிய குற்றம் என்றவர்.

எதிலும் பொது நோக்கம் இருக்க வேண்டும் என்றவர் .

இப்படியான பொது நோக்கம் உள்ள உலக சீர் சிருத்தவாதி தான் வள்ளல்பெருமான் .

உலக உயிர்களுக்காகவே வாழ்ந்து வழிக் காட்டியவர்.

உலக வரலாற்றில் அவருக்கு நிகர் அவரே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என வாழ்த்திக் கொண்டே இருந்தவர்

அவர் கடவுள் நிலை அறிந்து கடவுளின் நிலையாக தன்னை மாற்றிக் கொண்டவர் .

கடவுளின் அருள் பூரணத்தை முழுமையாகப் பெற்றவர்.

அவர் சொல்லியது அனைத்தும் உலகம் முழுவதும் நடைப்பெற்றுக் கொண்டு வருகின்றன.

வள்ளல்பெருமானை குற்றம் சொல்லக் கூடிய தகுதி உலகில் எவருக்கும் கிடையாது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளல்பெருமானக் கண்டு அசந்து போனவர் ,

கடவுளால் போற்றி புழந்து பாராட்டப் பட்டவர்தான் வள்ளலார்.

அவர் ஆன்மீக வாதி மட்டும் அல்ல ..ஆன்மீக உலக புரட்ச்சியாளர்

இன்னும் அவர் பெருமையும் புகழையும் புரட்சியும் மேலே சொல்லிக் கொண்டே போகலாம்.

அவர் ஒரு அருட் சுடர் .அவரிடம் யாரும் விளையாடாதீர்கள் அவரை குறை சொல்பவர்கள் குறை சொல்ல நினைப்பவர்கள்  அவர்களுக்கே தெரியாமல் தானே அழிந்து போவார்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு