திங்கள், 26 அக்டோபர், 2015

பகுத்தறிவு என்றால் என்ன ?

பகுத்தறிவு என்றால் என்ன ?

உண்மையும் அனுபவமும் நிறைந்தது தான் பகுத்தறிவு என்பதாகும்.

கடவுள் இல்லை என்பதும் ,கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்பதும் தான் பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.

கடவுள் இல்லை என்பவனும் அறிவு இல்லாதவன் தான்

கடவுள் பல உண்டு என்பவனும் அறிவு இல்லாதவன் தான்

எல்லோருமே படித்ததும், கண்டதும்,கேட்டதும், ,கற்றதும் , களித்ததும் தெரிந்ததையும் வைத்துக்குக் கொண்டு பகுத்தறிவு என்று பேசிக் கொண்டு உள்ளார்கள்.

பகுத்தறிவு என்பது ,தன்னை உணர்வது,தன்னைப் படைத்த மெய்ப்பொருள் எது? என்பதை அறிவது.

மற்றவர்கள் சொல்லியதை,எழுதியதை படிக்காமல் கேட்காமல் ,கற்காமல் அறியும் அறிவே பகுத்தறிவு என்பதாகும்.

உலகைப் படைத்தவன் யார் ? உயிர்களைப் படைத்தவன் யார் ?,அணுக்களைப் படைத்தவன் யார் ? பஞ்ச பூதங்களைப் படைத்தவன் யார் ? சூரியன் ,சந்திரன,நட்சத்திரங்கள் போன்ற கிரகங்களைப் படைத்தவன் யார் ?

அவைகளுக்கும் நமக்கும் உண்டான தொடர்பு என்ன ? நாம் ஏன் பிறக்கின்றோம் .இறக்கின்றோம்.அவை இயற்கையா ? செயற்கையா ? இதுதான் வாழ்க்கையா ? இதற்குமேல் என்ன இருக்கின்றது ? அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது போன்ற ,அறிவும் ஆராய்ச்சியும் உள்ளவன் எவனோ அவனே பகுத்தறிவாளன்.

இந்த உலகத்தில் வள்ளலாரைத் தவிர வேறு எவரும் பகுத்தறிவு உள்ளவன் அல்ல >

வள்ளல்பெருமான் ஒருவரே உலக உண்மைகளை அறிந்தவர் தெரிந்தவர் ,உலகுக்கு  வெளிச்சம் போட்டு காட்டியவர் .

பகுத்தறிவும் அனுபவமும் பெற்று, கண்டு தெரிந்து வாழ்ந்தவர் .வாழ்ந்து காட்டியவர் ,வாழ்ந்து  கொண்டும் இருப்பவர்.

பகுத்தறிவும் அனுபவமும் எப்போது கிடைக்கும் ? அருளைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்.

அருள் எங்கே இருக்கின்றது .? மனிதனின் தலைப்பாகத்தில் ஆன்மா இருக்கும் உள் ஒளியில் அருள் நிறைந்து இருக்கின்றது.

அந்த அருளைப் பூரணமாகப் பெற்றவன் எவனோ அவன் மட்டுமே பகுத்தறிவாளன்.

கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களும் .கடவுள் பல உண்டு என்று அலைந்து திரிந்து, நினைந்து வழிபடுபவர்களும் .அறிவு இல்லாதவர்கள் ,பகுத்தறிவு இல்லாதவர்கள் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் ;---

கண்டது எல்லாம் அனித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே

உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே

விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க

மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

எவன் ஒருவன் இறைவன் அருளைப் பெற்று இறவாமல் வாழ்கிறானோ அவனே பகுத்தறிவாளன் .அவனே முற்றும் தெரிந்தவன் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

3 கருத்துகள்:

27 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:21 க்கு, Blogger pravin kumar R கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 
17 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 10:50 க்கு, Blogger Iraiyarul கூறியது…

நம் நினைவானது
தோன்றா நிலையில் சரணாகதி அடையும் போது நம்மை அறியாமலே நம் கண்முன் தோன்றி மறையும் மறைபொருளே மெய்பொருள்.

 
17 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 10:54 க்கு, Blogger Iraiyarul கூறியது…

வழி வழியாக தோன்றிய பகுத்தறிவாளர்களில் வள்ளல் பெருமானும் ஒருவர்.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு