சனி, 1 ஆகஸ்ட், 2015

நம் நாட்டில் மகா ஆத்மாக்கள் நிறைய பேர் உள்ளார்கள் !

நம் நாட்டில் மகா ஆத்மாக்கள் நிறைய பேர் உள்ளார்கள் !

ஒழுக்கம் .உண்மை,நேர்மை,சத்தியம்,கொல்லாமை,ஜீவ காருண்யம் போன்ற குணங்கள் உள்ளவர்கள் அனைவரும் மகா அதமாக்களே !

பட்டம் .பதவி,புகழ்,அரசு அங்கிகாரம் பெற்றவர்களின் புகழ் மக்கள் மனதில் ஓங்கி ஒலிக்கின்றது.

கண்களுக்குத் தெரியாமல் மக்கள் நலனுக்காக ,உலக நலனுக்காக,தன்னை வருத்திக் கொண்டு பிரார்த்தனை செய்து வாழ்பவர்கள் ஏராளம்..

அவர்கள் மக்கள் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள் .தனிமையில் இறைவனிடத்தில் முற்றுகை இட்டு.என்றும் அழியாத அருளைப் பெற்று வெற்றிக் கண்டவர்கள்.

உயர்ந்த அறிவுள்ள மனிதன் தாழ்ந்த நிலையில் வாழுகிறானே என்று வேதனைப் பட்டுக் கொண்டு இருப்பவர்கள்.

தங்களுடைய ஆன்ம பலத்தால் இறைவன் அருளைப் பெற்று மரணம் அடையாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.

அவர்கள் ஆன்ம பலத்தால் இயற்கையை வென்றவர்கள்....இயற்கை அவர்களின் உடம்பையோ உயிரையோ அழிக்க முடியாது .

மக்கள் செயற்கை குணங்களால் அழிந்து போவதை நினைத்து கண்ணீர் விட்டு இடைவிடாது அழுது கொண்டு இருப்பவர்கள்..

அவர்களுடைய உண்மையான வேண்டுதலுக்கு இறைவனே காட்சிக் கொடுத்த வரலாறுகளும் உண்டு.

சாதாரண மனித சக்தியால் மக்களை திருத்த முடியாது ஆன்ம சக்தியால் அருளைப் பெற்றுத்தான் மக்களைத் திருத்த முடியும் என்ற உண்மையை அறிந்தவர்கள் .

அவற்றைப் போக்கும் வழியையும் கண்டவர்கள்

துன்பங்கள் துயரங்கள்.அச்சம் .பயம்.மரணம் போன்ற துன்பங்கள் இந்த உலகத்திற்கு வந்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தி தாங்கிக் கொண்டு வழி நடத்திக் கொண்டு உள்ளவர்கள் நமது அருளாளர்கள்.

அந்த வரிசையில் நமது தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று ,உலக மக்களுக்கு நல வழிக் காட்டிக் கொண்டு உள்ளவர்தான் நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான்.

மனித குலத்திற்கு அவர் போதித்த போதனைகள் ,அவர்காட்டிய ஒழுக்க நெறியான ஜீவ காருண்யம்,..அவர் காட்டிய கடவுள் வழிபாடு,அவர் காட்டிய கடவுள் .அவர் வாழ்ந்து காட்டிய அருள் வாழ்க்கை அவர் வென்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு .

இந்த உலகத்தில் இதுவரையில் யாரும் சொல்லி செய்து காட்ட முடியாத புதிய சிந்தனைகள் .அவர் கண்டு பிடித்த அணு ஆராய்ச்சிகள் யாவும் இன்னும் மனித குலம் கண்டு கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் உள்ளது.

அவர் கண்டு பிடித்த ஆராய்ச்சிகளிலே முதன்மையானது மரணத்தை வெல்ல முடியும் என்ற அணு ஆராய்சி கண்டு பிடிப்புத்தான் என்பதை மக்கள் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும் .,


இன்னும் பல நூறு ஆண்டுகளில் அவர் சொல்லிய அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை.

இன்னும் சிலபல ஆண்டுகளில் உலகில் உள்ள அனைத்து .சாதி,சமயம்,மதம் போன்ற கொள்கைகள் அழிந்து புதியதோர் பொது சமுதாயம் உருவாக்கப் படும்

இது தான் இறைவன் அருள் பெற்று இறைவன் துணையுடன் நிறை வேற்றும் அருளாளர்களின் செயல்களும் கடமைகளும் ஆகும் .

மரணம் அடையும் மனிதர்களால் சொல்லிய கருத்துக்கள்,கொள்கைகள் .ஆராய்ச்சிகள் குறிப்பிட்டக் காலத்தில் அழிந்து விடும் .

இது மனித சக்தி அல்ல ! ...மகா ஆத்மாக்களின் அருள் அறிவால் கண்ட உண்மையாகும். இறைவனின் அருள் ஆற்றலால் .அருள் சக்தியால் நிச்சயம் மாற்றம் அடையும்.

அதுதான் புதிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற பொது அமைப்பாகும்.

வள்ளலார் பாடல் ;--

எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண
இவ்வுலகில் என் தந்தை எனக்கு அளித்தான் --எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் தனை அடையச் செய்வித்தே
என் மார்க்கம் காண்பேன் இனி !

எல்லா உலகத்தையும் அண்டங்களையும் மாற்றி அமைத்து. உண்மையான உலகப் பொது நெறியை அறிமுகப் படுத்தி மக்களுக்கு உண்மை அறிவை விளக்கி ,உண்மையான இன்பத்தை அளித்து,

அதற்குண்டான ஒழுக்க நெறிகளைப் போதித்து அதற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்று பெயர் வைத்து .அதிலே மக்களை ஈடுபடுத்தி என்மார்க்கம் .என்மார்க்கம் என்று போற்றும் படி செய்து காட்டுவேன் .

இதுவே எனது தலையாய கடமையும் செயல்களும் ஆகும் .இது சத்தியம் .இது சத்தியம்,இது சத்தியம் என்று பறை சாற்றுகின்றார்.

இதுதான் இறை அருள் பெற்று சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் அழியா ''மகா ஆத்மாக்களின்'' செயல்களாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு