சனி, 4 ஜூலை, 2015

மனிதன் என்பவன் யார் ?

மனிதன் என்பவன் யார் ?

மனிதன் இறப்பதற்காக பிறக்க வில்லை .
இறக்காமல் வாழ்வதற்கே பிறக்கிறான் .

இறந்தால் மீண்டும் பிறப்பான் .
இறக்காமல் வாழ்ந்தால் பிறக்காமல் இருப்பான்.

மனிதன் மனிதனாக வாழ்ந்தால் இறப்பு இல்லை .
மனிதன் மிருகமாக வாழ்ந்தால் இறப்பு உண்டு .

கடவுளைக் காண்பவன் மனிதன் /
நல்ல மனிதனைக் காண்பவன் கடவுள் .

ஆசை உள்ளவன் மனிதன் ..அந்த
ஆசையை மாற்ற தெரிந்தவன் மனிதன்.

பொருளை விரும்புவன் மிருகம் .
அருளை விரும்புவன் மனிதன்.

தீவினை என்பது பொருள்.
நல்வினை என்பது அருள்

ஆசை என்பது மனைவி
பாசம் என்பது பிள்ளைகள் .


மோசம் என்பது பொருள் .
நாசம் என்பது துன்பம்

பாவம் என்பது மரணம்
புண்ணியம் என்பது மரணம் இல்லாமை.

பேசாத மிருகங்கள் மத்தியில்
பேசும் மனித மிருகங்கள் .

உலகில் உயர்ந்த பிறப்பு மனிதப் பிறப்பு
அதைத் தெரியாமல் தாழ்ந்து வாழ்கிறான் மனிதன்

இன்பம் தெரியாமல் துன்பத்தை தேடுகிறான் மனிதன்.
துன்பம் அறியாமல் மரணத்தை தேடுகிறான் .

தட்டினால் திறக்காது
கேட்டால் கிடைக்காது
வாழ்ந்தால் கிடைக்கும்.

உண்ணாமல் ,உறங்காமல்,உடுத்தாமல்.சுவாசிக்காமல் வாழத் தெரிந்தவன் மனிதன் .

மனித வாழ்க்கை கடவுள் வாழ்க்கை .
கடவுள் வாழ்க்கை மனித வாழ்க்கை .

இதை அறிந்தவனே மனிதன் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு