வியாழன், 28 மே, 2015

சி ,ஜெகநாதன் மரணம் !

சி ,ஜெகநாதன் மரணம் !

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள திலகர் திடல் என்னும் இடத்தில் 1890,எண் உள்ள பூமாயி இல்லத்தில் 27-5-2015,அன்று மரணம் அடைந்தார் .

சி,ஜெகநாதன் என்பவர் சுமார் நாற்பது ஆண்டுகளாக வள்ளலார் வழியில் ஈடுபாடு கொண்டு சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்தவர்.அழுத்தமான சுத்த சன்மார்க்க கொள்கைப் பிடிப்பு உள்ளவர் .

அவர் பல சன்மார்க்க ஆராய்சிக் கட்டுரைகளையும், சேர்ந்து சுமார் 15,நூல்களையும் எழுதி உள்ளார் .அவர் எழுதிய நூல்களில் சமீத்தில் வெளியிட்ட ''நீங்களும் வள்ளலார் ஆக '' என்ற நூல் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும் .

அவருக்கு சன்மார்க்க உலகம் ''அருட்பா அவதானி ''என்ற பட்டயத்தையும் வழங்கி உள்ளது.மேலும் பல பட்டங்களையும் வழங்கி உள்ளார்கள்.

எனக்கு சுமார் பத்து ஆண்டுகளாக நெருக்கமானவர் என்னிடம் அளவில்லா அன்பும் பாசமும் கொண்டு வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை பகிர்ந்து கொள்வார் .
அவருடைய மரணம் சன்மார்க்க உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

23-5-2015,அன்று வடலூரில் நடந்த சமரச சுத்த சன்மார்க்க சங்ககளின் ஒருங்கிணைந்த சன்மார்க்க மாநாட்டிற்கு வந்து என்னிடம் இறுதியாக ஒருமணி நேரம் உரையாடினார் என்பதை நினைக்கும் போது இறைவனின் சித்தம் என்னவென்று நினைப்பது .

நேற்று அவருடைய இறுதி சமாதி நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன்.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கும் ,சன்மாக்க உலகத்திற்கும் என்னுடைய் ஆழ்ந்த வருத்தத்தையும் ,இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீண்டும் அவருக்கு மனிதப் பிறவி கொடுத்து சுத்த சன்மார்க்கத்தில் சேர்ந்து வாழ்ந்து மரணத்தை வெல்ல வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..

மற்று அறிவோம் எனச்சிறிதும் தாழ்ந்திருப்பீர் ரானால்
மரணம் என்னும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே
சமரச சங்கத்தவர்கள் அல்லால் அதனை
ஏற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லை கண்டீர் சத்தியம் மீது என்மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்று அனைத்தினையும் பற்றற விட்டு அருள்
அம்மபல பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே !

மரணத்தை வெல்லும் வழியை வள்ளலார் வாழ்ந்து காட்டியும் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லியும் நாம் கடைபிடிக்காதது நம்முடைய குற்றமே !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு