புதன், 20 மே, 2015

சைவ உணவா ? அசைவ உணவா ?

சைவ உணவா ? அசைவ உணவா ?

நண்பருக்கு எழுதியக் கடிதம்.

சைவ உணவா ? அசைவஉணவா? என்பதை விட்டு,ஒரு உயிரைப் போக்கி உண்ணக் கூடிய உணவு எதுவாக இருந்தாலும் இறைவன் சட்டத்தில் தண்டிக்கபடுவார்கள்..

உயிரைக் கொடுத்துள்ளது கடவுள்,..
கடவுள் கொடுத்துள்ள உயிரை அழிப்பதற்கு யாருக்கும் உரிமைஇல்லை....

தாவர்ங்களும் உயிர்கள் தானே என்று சில மேதாவிகள் கேட்பார்கள். தாவரங்களும் உயிர்உள்ளவைதான்,தாவரங்களில் உள்ள பூ,காய்,இலை,பழம் இவைகளை மட்டுமே உண்ண வேண்டுமேத்,தவிர வேரோடு பிடுங்கி உண்ணக் கூடாது....

அதே நேரத்தில் நம்முடைய உடம்பில் உள்ள நகம், மூடி, போன்றவையை வெட்டும் போது உயிர் போகாது,வலிக்காது வெட்ட வெட்ட வளரும் அதுபோல் தான் தாவரங்களும் வளரும்.
அதனால் அவை உயிர்க்கொலை அல்ல என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.....

மேலும் மாமிசத்தில் புரதசத்தும்,புரோட்டினும் அடங்கியது அதனால்  அவற்றை உண்ணலாம் என்பது முற்றிலும்  தவறானது .அதனதன் உடம்பிற்காக அதன் வாழ்க்கைக்காக இறைவன் கொடுத்துள்ளார்.நாம் உண்ணுவதற்கு அல்ல.

அதை அறிவுள்ளவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.எல்லா உயிர்களிலும், உடம்புகளிலும் புரதசத்தும்,புரோட்டினும் உள்ளது.
தாவரங்களில் அதைவிட அதிகமாக உள்ளது.

மனிதநேயமும், ஆன்மநேயமும் உள்ளவர்கள் இப்படி ஒருஉயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணமாட்டார்கள். அதேநேரத்தில் அந்த உணவை கடவுள்ஏற்றுக் கொள்வதில்லை..

உயிர்க்கொலை செய்பவர்களையும்.அதன் புலாலை உண்பவர்களையும் எக்காலத்திலும் கடவுள் மன்னிப்பதில்லை.

எந்தக் கடவுளும் உயிர்ப்பலி கேட்பதில்லை.அப்படி கேட்டால் அவை கடவுள்கள் அல்ல

உலகை கெடுத்துள்ளது,சாதி...சமயம்..,மதம் ! ,அதன் கொள்கைகளும்,அவற்றைப் படைத்தவர்களும் அதன் தலைவர்களும்  தான் என்பதை புரிந்து கொண்டால் உண்மைகள் விளங்கும். !.

சாதியும்,சமயமும்,மதங்கள் யாவுமே பொய்யானது.அதன் கற்பனை தெய்வங்களும் பொய்யானது.இந்துமதம் மட்டும் அல்ல ! எல்லா மதங்களும் பொய்யான வழிமுறைகளையே சொல்லி உள்ளன.

புலால் உண்பவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் கடவுள் முன்  தண்டிக்கப் படுவார்கள்....

நன்றி அன்புடன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு