திங்கள், 11 மே, 2015

அனைவரும் கடவுளின் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டும் !

அனைவரும் கடவுளின் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டும் !


நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடார் தமையரை நாளுங்
கெடுநிலை நினைக்குஞ் சிற்றதி காரக்
கேடரைப் பொய்யலாற் கிளத்தாப்
படுநிலை அவரைப் பார்த்த போது எல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலக நடை எலாம் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய் !......வள்ளலார் .

நடுநிலை இல்லாத சட்டமும் ,கருணையே இல்லாத மனிதர்களும் கேடுகள் நினைக்கும் அதிகார ஆட்சி வெறியர்கள் உள்ள இந்த நாட்டில் அவர்களைப் பார்க்கும் போது எல்லாம் பயந்தனன் என்கின்றார் வள்ளல்பெருமான்.

இவற்றை மாற்றுவதற்கும்,இவற்றை ஒழிப்பதற்கும் கருணை உள்ள சுத்த சன்மார்க்க சங்க அருளாளர்கள் உலகத்தை ஆட்சி செய்ய வருவார்கள்,வரவைப்பேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .
அதற்காகத்தான் ...

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து ........வள்ளல்பெருமான்

சட்டத்தை இயற்றுபவனும் மனிதன் ,சட்டத்தை வலைப்பவனும் மனிதன் .சட்டத்தை சூறை யாடுபவனும் மனிதன்.சட்டத்தை புதைப்பவனும் மனிதன்.

பணம் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.என்பது மக்களுக்குத் தெளிவாக தெரிந்து விட்டது.

அரசியல் வாதிகளுக்கு சட்டம் சாம்பார் சாதம் ...நீதிபதிகளுக்கு சட்டம் தயிர் சாதம்...மக்களுக்கு சட்டம் புளிசாதம் !

இன்னும் மூன்று மாதம் பதவியில் உள்ள நீதிபதி குமாரசாமி அவர்கள் இதுவரையில் அவர் எதிர்பார்க்காத பலனை அடைந்துள்ளார் .

எல்லோருக்கும் இறைவன் கொடுக்கும் சரியான தீர்ப்பு மரணம்
மக்களை ஏமாற்றலாம்,சட்டத்தை ஏமாற்றலாம் ,கடவுளை ஏமாற்ற முடியாது ..

மரணத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது

மரணம் என்னும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ சற்றும் அதை உம்மால் தடுக்க முடியாதே !

கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவீர்
மரணபயம் தவிராதே வாழ்வதில் என்பயனோ

கடல் ,உலகம்,வானம் போன்றவற்றிககு அதிபதியாக மக்கள் மதிக்கத்தக்க ஆட்சி செய்து இருந்தாலும் மரணம் பயம் இல்லாமல் வாழ முடியுமா ? அற்ப கரணம் என்னும் மனம் மகிழ்ச்சியில் வாழ்ந்து என்ன பயன் ? மரணத்தை பணம் கொடுத்து நிறுத்த முடியுமா ?

உடம்பும் உயிரும் இருக்கும் வரைதான் அனைவரின் ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும்.மரணம் வந்தால் எல்லா வற்றையும் மறந்து ,இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையும் மறந்து ,அடுத்த பிறவி என்ன என்பது கூட மற்றவர்களுக்கு சொல்லமுடியாமல் வாய் அடைத்து ,மனம் ஒழிந்து மண்ணிற்கு போகப் போகிறீர்கள்

இறைவனின் இறுதி தீர்ப்பு மரணம் என்பதை மறந்து விடாதீர்கள்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு