வியாழன், 7 மே, 2015

கடவுள் வழிபாடு !

கடவுள் வழிபாடு !


அன்பான ஆன்மநேய சன்மார்க்க அன்பு உள்ளங்களுக்கும், உலக ஆன்மநேய சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள் .

உலகின் உண்மையாக கடவுள் யார் ? என்பதையும் அவருடைய உண்மைத் தன்மை என்ன என்பதையும்,அவர் உருவம் எவ்வாறு உள்ளன என்பதையும்.,அவர் ஒருவர்தான் எல்லாவற்றுக்கும் உரிமை உள்ளவர் என்பதையும் ,

அவரைத்தவர வேறு கடவுள்கள் இல்லை என்பதையும், கற்பனைக் கலைகளான கடவுள்களை நம்ப வேண்டாம் என்பதையும்,

அனைத்து உலக மக்களும் அந்த மாபெரும் பேர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கருணை உள்ளங்கொண்டு மக்களுக்கு ''வள்ளல்பெருமான்''உண்மைக் கடவுளை அறிமுகப் படுத்தி உள்ளார்

அந்த உண்மைக்கடவுள் யார் ? அவர்தான்
''அருட்பெருஞ்ஜோதி'' என்னும் அருள் நிறைந்த அருள்
பேரோளியாகும்..

ஒவ்வொரு வீட்டிலும் நான்கு சதுரமான தகரக்கண்ணாடி விளக்கு கூண்டு வாங்கி, அதனுள் அகல் விளக்கு வைத்து ,நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி நல்ல திரிபோட்டு அணையாமல் விளக்கு ஏற்றி வாருங்கள் .

தினமும் அந்த அருட்பெருஞ்ஜோதியின் முன் ,''அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! ''என்னும் மகா மந்திரத்தை சொல்லி வணங்கி விட்டு உங்களின் அன்றாட பணிகளை செய்து வாருங்கள்.பின் உங்கள் வாழ்க்கையின் தரம் எப்படி உள்ளது என்று நீங்களே சொல்லுவீர்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.,உங்கள் வீட்டில் எக்காரணத்தைக் கொண்டும் 'புலால் அதாவது மாமிசம்'' என்ற உணவை விட்டுவிடவேண்டும்.

இதுதான் உங்கள் வீட்டில்,உங்கள் தொழிற்சாலையில் உங்களின் வியாபாரக் கடைகளில் அன்றாடம் செய்யும் கடவுள் வழிபாடாகும் ,

நல்லதை செய்யுங்கள் நலம் பெற்று வாழ்வீர்கள்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு