வெள்ளி, 8 மே, 2015

பொருள் உலகம் ! அருள் உலகம் ! என இரண்டு உள்ளது !

பொருள் உலகம் ! அருள் உலகம் ! என இரண்டு உள்ளது  !


ஒன்று பொருள்கள் நிறைந்த உலகம் ,அது நாம் வாழும் உலகம் பொருளை விரும்புகின்ற வரை இந்த உலகைவிட்டு வெளியே செல்லமுடியாது.

பொருள் உலகத்தில் மேலும் மேலும் பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான் .எந்த பிறப்பு கிடைக்கும் என்பது  நாம்  யாருக்கும் தெரியாது.பொருளின் விருப்பத்திற்கு தகுந்தவாறு பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் .

பொருள் உலகம் என்பது இன்பமும்,துன்பமும் கலந்த உலகம்,இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையில் மரணம் வந்து கொண்டே இருக்கும்.

மற்றொன்று அருள் உலகம் ;-- அது கடவுள் உள்ள ''அருள் உலகம்'' அந்த உலகத்தில் இருந்துதான் எல்லா ஆன்மாக்களும் இங்கு வந்துள்ளன.இங்கு வரும்போது அருளை எடுத்துக் கொண்டு தான் வந்துள்ளது.

இங்கு வந்து அந்த அருளை வீணாக்கி அழித்து விட்டது ..எப்படி அருளைக் கொண்டு வந்ததோ அப்படியே அந்த அருளைப் பெற்றுக் (சம்பாதித்து ) கொண்டுதான் இந்த உலகத்தை விட்டு வெளியே செல்லமுடியும்.

அந்த அருளை நாம் பெறவேண்டும்.அந்த அருளை நாம் பெறுவதற்கு ஒரேவழிதான் உள்ளது .பொருளுக்காக அருளை வீணாக்கினோம்.அதே பொருளைக் கொண்டு தான்  அருளைப் பெறவேண்டும்.

அதுதான் பொருளை அருளாக மாற்றும் வழியாகும்.அதற்கு வள்ளல்பெருமான் ஜீவ காருண்யம் என்றும் பரோபகாரம் என்றும் பெயர் வைத்துள்ளார்.

ஜீவ காருண்யமே மோஷ்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளல்பெருமான்.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.

அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்யமே சரியான வழி என்பதை உணர்ந்து ,பொருள் உலகை விட்டு அருள் உலகத்திற்கு செல்லுவதுதான்  மனித குலத்தின் வாழ்க்கை முறையாகும்.

பொருள் உலகம் துன்பம் நிறைந்த உலகம் ! அருள் உலகம் இன்பம் நிறைந்த உலகம்.

சமய மதங்கள் எல்லாம் பொய்யான வழியைக் காட்டி உள்ளது ,காட்டியவர்களே அருளைப் பெறமுடியாமல் அழிந்து போய் விட்டார்கள்..அதை நம்பி வாழ்பவர்கள் அனைவரும் அழிந்து கொண்டே உள்ளார்கள்.

அழியும் உடம்பை அழியாமல் ஆக்கும் வழி தெரியாமல் இருந்த மக்களுக்கு அழியாமல் காக்கும் வழியைக் காட்டியவர் வள்ளல்பெருமான் அவர்கள் ஆவார்.

துன்பம் வேண்டுமா ? இன்பம் வேண்டுமா ? நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் . 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு