சனி, 2 மே, 2015

49, ஆம் ஆண்டு திருமண நாள் !

இன்று எங்களுக்கு திருமணம் நடந்து 49,நாற்பத்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன .அனைத்து  அன்பு உள்ளங்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள் .

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என் தந்தை நினது அருட் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ! இதுநாள் வரையில் நாங்கள் எந்த உயிர்களுக்கும் துன்பம் தந்தது இல்லை இனிமேலும் யாருக்கும் துன்பம் தரமாட்டோம்.

ஆண்டவரே நீ கொடுத்த இந்த உடம்பையும் உயிரையும் வைத்துக் கொண்டு உன்னுடைய அருட் புகழையும், பெருமையும்,பேர் உண்மையும் ,உலகம் முழுவதும் இயம்புயிடல் வேண்டும் .அதுவே என்னுடைய சத்தியமான விருப்பமாகக் கருதுகிறேன்.

இதுநாள் வரையில் நாங்கள் தெரிந்தோ ,தெரியாமலோ ஏதாவது தவறு செய்து இருந்தால் நீங்கள் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும்.

உலகில் நீங்கள் படைத்த எல்லா உயிர்களுக்கும் நான் அன்பு செலுத்த வேண்டும் இதுவே என்னுடைய பேராசையாகக் கருதுகிறேன் .அதற்கு உண்டான அறிவையும் ஆற்றலையும் எனக்கு வழங்க வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை எக்காலத்தும் ,எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும்,விலகாமல் நிறைந்து விளங்க அருள் செய்திடல் வேண்டும்.

''எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே'' எக்காரணத்தைக் கொண்டும் என்னை பிரியாமல் என்னை இயக்கிக் கொண்டு இருக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் .

ஆன்மநேயர்கள் ஈரோடு கதிர்வேல் அமுதா தம்பதியினர் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு