வியாழன், 30 ஏப்ரல், 2015

ஒன்றில் இருந்து தான் எல்லாம் உருவானது !


ஒன்றில் இருந்து தான் எல்லாம் உருவானது !

ஒன்றில் இருந்து எல்லாம் உருவானது என்பதை அறியாத மக்கள் ,உருவானதை உண்மை என்று உரிமைக் கொண்டாடுகிறார்கள் .

ஒன்று இரண்டாகவும்,இரண்டு பலவாகவும்,பல்வகை கோடியாகவும்,கோடி பலகோடி யாகவும், கோடிகள் கோடி கோடி யாகவும்,பரந்து விரிந்து இயங்கிக் கொண்டு உள்ளது.

அகம் என்ற ''ஆற்றல்'' படைத்த ஒன்று, அனகமாக விரிந்து என்னில் அடங்காத உயிர்களாகவும் ஜடமாகவும் பரந்து விரிந்து உள்ளது

உருவாக்கிய உண்மை எது என்றும்,அது யார்? என்றும் தெரியாமல் மனித இனம் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .

உருவாக்கிய மெய்ப்பொருள் உண்மையைக் கண்டவர் திரு அருட்பிரகாச வள்ளலார் .

என்றும் அழியாமல் எல்லாவற்றையும் படைத்து,காத்து,மாற்றிக் கொண்டு உள்ளதுதான் எல்லாம் வல்ல ''அருட்பெருஞ்ஜோதி '' என்னும் அருள் ஒளியாகும்.

அந்த அருள் ஒளியைக் கண்டவர் என்றும் அழியாமல் அதனுடன் சேர்ந்து, என்றும் அழியாமல் வாழலாம் என்பதை அறிந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் அருட்பிரகாச வள்ளல்பெருமான் என்பவராகும்.

அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.!

அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.!

அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் !

அதுவே முத்தேக சித்தி என்பதாகும் !

அருட்பெருஞ்ஜோதி அகவல் !
ஒன்றதில் இரண்டு அது வொன்றினில் இரண்டு அது
ஒன்றினுள் ஒன்றது ஒன்று எனும் ஒன்றே !
ஒன்றல இரண்டு அல வொன்றினில் இடண்டு அல
ஒன்றினுள் ஒன்று அது ஒன்று எனும் ஒன்றே !
ஒன்றினில் ஒன்று உள வொன்றினில் ஒன்று இல
ஒன்றுற வொன்றிய ஒன்று எனும் ஒன்றே !

என்று வள்ளல்பெருமான் அகவலில் சரியான தகவலை மக்களுக்கு தந்துள்ளார்
அந்த ஒன்றை அறிவதுதான் ''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை'' என்பதாகும்.

ஆன்மாவை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு