வியாழன், 30 ஏப்ரல், 2015

வெற்றி என்பது என்ன ?

வெற்றி என்பது என்ன ?

இறைவன் படைத்த உலகை மனிதன் ஆளுவது எவ்வளவு அறியாமையாகும் .மனிதனை மனிதன் ஆள்வது அதைவிட கொடுமை.வேறு எதுவும் இல்லை.

உலகில் தோன்றிய மனித பிறவிகள் தவிர அனைத்து பிறவிகளும் எதையும் ஆள்வதில்லை.அதன் அதன் வாழ்க்கையை அவைகளே தீர்மானித்துக் கொள்கின்றன.

மனிதன் மட்டும்தான் மனிதனை ஆள்கிறான் .இவை எவ்வளவு முட்டாள் தனம்,..இறைவன் மனிதனுக்கு உயர்ந்த அறிவை கொடுத்துள்ளான் .அந்த அறிவு எதற்க்காக ?

மனிதன் தன்னுடைய அறிவை பயன்படுத்தி .தன்னுடைய உயிரையும் உடம்பையும் காப்பாற்றிக் கொண்டு இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே மனித வெற்றியாகும்

அருள் என்னும் ஆற்றலைப் பெறுவதே வெற்றியாகும் .அருளைப் எப்படி பெறவேண்டும் என்பதை அறிந்து அதில் வெற்றி பெறுபவனே மனிதன் .அருளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக உயர்ந்த அறிவை மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளார் .

இந்த உலகை ஆண்டவர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாக மறைந்து போய் விட்டார்கள் .இந்த உலகை மனிதனால் ஆளமுடியாது.இறைவனால் மட்டுமே ஆளமுடியும்,....இறைவன் படைத்த உலகை மனிதன் ஆள்வதற்கு இறைவன் சட்டத்தில் இடம் இல்லை.

இறைவன் ஆட்சியில் உள்ள உயிர்கள் இறைவன் சொல்படி கேட்டு அதன்படி வாழ்ந்தால்தான் வெற்றிபெற முடியும்.

இதைத் தான் கடைபிடித்து வாழ்ந்து காட்டியவர் தான் வள்ளலார் என்பவராகும் அவர் சொல்லுவதை பாருங்கள்.

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கை அதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய்யகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப்பொருளாம் தனித் தந்தை இந்தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்தி புரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !

மரணத்தை வென்று வாழும் வாழ்க்கையே வெற்றிபெறும் வாழ்க்கையாகும்.மற்ற வாழ்க்கைகள் யாவும் மிருக வாழ்க்கையாகும்.மனிதன் மிருக வாழ்க்கை வாழாமல் அருள் வாழ்க்கை வாழ்வதே வெற்றி வாழ்க்கையாகும் .

மனிதனால் உருவாக்கிய சட்டத் திட்டங்களால் மக்களைக் காப்பாற்ற முடியாது .அதில் வெற்றி காணவும் முடியாது. இறைவன் படைத்த சட்ட திட்டத்தை பின் பற்றி வாழ்ந்து அதில் வெற்றிப் பெற்றவனே உயிர்களையும் உலகையும் காப்பாற்ற முடியும் .அதுவே மகத்தான வெற்றியாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு