புதன், 29 ஏப்ரல், 2015

கடவுளைக் காண வழி காட்டியவர்கள் !

கடவுளைக் காண வழி காட்டியவர்கள் !

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பல ஞானிகள் ,கடவுளைக் காண பல வழிகளைக் காட்டினார்கள் .

எல்லா வழிகளும் தவறான வழிகளாகவே இருந்தன.அவர்கள் காட்டிய கடவுளும் பொய்யானக் கடவுளாகவே இருந்தன .

வள்ளல்பெருமான் மட்டுமே,''அருட்பெருஞ்ஜோதி ' என்னும்   உண்மையான கடவுளைக் காட்டினார்.அந்தக் கடவுளைக் காண உண்மையான நேர்மையான,இலகுவான,சிரமம் இல்லாத, நேர் வழியைக் காட்டினார் .

அவர் காட்டிய வழியில் செல்வதற்கு 'சமரச சுத்த சனமார்க்க சத்திய சங்கம் '' என்ற பொது நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .

அந்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்பது இறைவனே காட்டிய ,தோற்றுவித்த மார்க்கமாகும்.

ஆதலால் நான் உண்மையை உரைக்கின்றேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாஞ் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவீர்
தண்மையொடு சுத்த சன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்க
கண்மை தரு ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

அழியாத கருணை நிதி என்னும் அருளை வழங்குவதற்கு கருணையான இறைவன் வருகின்றார்.நான் சொல்லியபடி கேட்டு நீங்களும் அந்த உண்மையான வழியில் விரைந்து வந்தீர்களானால்,  நீங்களும் அந்த அருள் நிதியைப் பெற்றுக் கொள்ளலாம்.வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு