சனி, 9 மே, 2015

எல்லாப்புகழும் இறைவனுக்கே ஏற்புடையதா !

எல்லாப்புகழும் இறைவனுக்கே ஏற்புடையதா !

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் .இதை இறைவன் ஏற்றுக் கொள்வாரா ? என்ற வினா இங்கே எழுப்பபடுகின்றது.

நாம் செய்யும் செயலுக்கு தகுந்தாற் போல் பணம்,பதவி,புகழ்,பரிசு,வசதி ,பாராட்டுகள் ,பெருமை,மகிழ்ச்சி மதிப்பு எல்லாம் கிடைக்கின்றது.

இவைகள் யாவும் மனிதர்களால் கொடுக்கப்படுகின்றது பாராட்டப்படுகின்றது.அந்த மகிழ்ச்சியில், பெருமைக்காக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லி தன்னை ஏமாற்றிக் கொள்கின்றார்கள்

இறைவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம் வாழ்கிறோமா ? என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு உயிரை கொன்று அதன் புலாலை உண்ணும் பழக்கமுடையவர்கள் .எவ்வளவு உயர்ந்த புகழ் பெற்று இருந்தாலும்  அவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை,

ஒரு நொடியில் ஆண்களை பெண்களாக ,பெண்களை ஆண்களாக மாற்றும் சித்துப் பெற்று இருந்தாலும் இறந்த உயிர்களை ஒரு நொடியில் எழுப்புகின்ற ஆற்றல் படைத்த சித்துகளைப் பெற்ற ஞானிகளாக இருந்தாலும் ,அவர்கள் புலால் உண்ணும் பழக்க முடையவர்களாக  இருந்தாலும் ,புலால் உண்ணலாம் என்ற நினைப்பு உள்ளவர்களாக இருந்தால் அவர்களை ஞானி என்று சொல்லவேண்டாம் என்கின்றார் ,நமது வள்ளல் பெருமான்

புலால் உண்ண நினைத்தவர்களாக இருந்தாலும் அவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை .

எனவே உயிர்க்கொலை செய்யாமலும் ,புலால் உண்ணாமலும் இருப்பவர்களையே எல்லாம் வல்ல இறைவன் ஏற்றுக் கொள்கின்றார்.என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

புற இனைத்தார் ! அக இனத்தார் ! என இரு பிரிவுகளாக இறைவன் வகுத்துள்ளார் .

உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் என்று இரண்டு வகையாகப் பிரிக்கின்றார் .

புலால் உண்பவர்கள் புற இனத்தவர்கள் அவர்கள் இறைவனை நினைக்கத் தகுதி அற்றவர்கள் அவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை என்கின்றார்..

புலால் உண்ணாதவர்கள் அக இனத்தார்கள் அவர்கள செய்யும் ஒவ்வொரு நல்ல செயலகளையும் இறைவன் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவார் .

ஆதலால் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று நினைப்பவர்கள் சொல்லுபவர்கள் .உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் ,உண்பதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே இறைவன் புகழுக்கு பாத்திரமாவீர்கள்  

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு