சனி, 9 மே, 2015

எல்லாம் இறைவன் படைத்தது !

எல்லாம் இறைவன் படைத்தது !


இறைவன் படைத்த உலகில் உரிமை கொண்டாடுவது அபத்தமானதும் அறியாமையுமாகும் .

என்மொழி, என் நாடு ,என் இனம், என்சாதி, என்சமயம், என்மதம், என்பது எல்லாம் அறியாமையின் வெளிப்பாடுகளாகும்..
இறைவன் படைத்ததை யாராலும் அழிக்க முடியாது.,

மாயையால் படைத்ததும் ,மனிதர்களால் படைத்தது எல்லாம் அழிந்து கொண்டே இருக்கும்.

தமிழ நாட்டில் பிறந்தவன்,தெலுங்கில் பிறந்தவன் கேரளத்தில் பிறந்தவன்,கன்னடத்தில் பிறந்தவன் மேலும் மற்ற மாநிலங்களில் பிறந்தவன்,மற்ற நாடுகளில் பிறந்தவன் (மரணம் அடைந்தவன்) இறந்தால் எந்த மொழியில் எந்த நாட்டில் ,எந்த ஊரில் இறைவன் பிறக்க வைப்பான் என்பது யாருக்கும் தெரியாது.

நாம் சம்பாதிக்கும் சொத்து,பணம்,வீடு பங்களா ,கார் வான் ஊர்தி,மற்றும் எதுவாக இருந்தாலும் மரணம் அடைந்தால் எவரும் எடுத்து செல்லமுடியாது

எல்லா உண்மைகளும் தெரிந்து இருந்தும் மனிதனின் அற்ப ஆசைகளை விடாமல் பொருளுக்காக அலைந்து கொண்டே உள்ளான் .அதனால் அவன் அடையும் லாபம் என்ன ? இறுதியில் மரணம்தான் வருகின்றது.
இறைவன் படைத்த உலகில் இறைவன் படைத்த பொருள்களை எவரும் எடுத்து செல்ல முடியாது.

ஒவ்வொரு பொருளும் அப்படியேதான் இருக்கின்றன .சில நேரங்களில் உருவம் மாறிக் கொண்டு உள்ளன.பெயர்கள் மாறிக் கொண்டே உள்ளன .அதுவும் மனிதர்கள் தான் பெயரை மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.
காலங்கள் மாற மாற எல்லாம் உருவங்களும் நிலைபெறாமல் அழிந்து கொண்டே உள்ளன .

மொழியோ ,நாடோ,இனமோ,பொருளோ மதமோ,சமயமோ,
எவருக்கும் எதுவும் சொந்தமில்லை.

மரணம் வருகின்ற போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு எல்லாவற்றையும் மறந்து விட்டுதான் உடம்பில் இருந்து உயிர் பிரிகின்றது.

இதைத்தான் வள்ளல்பெருமான் தன்னுடைய அனுபவத்தில் மக்களுக்கு

பாடலின் வாயிலாக பதிவு செய்கின்றார்.
புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழி யோர் பொய் மொழி என்னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும்,பிறரும்
உடமைகளும் உலகியலும் உற்ற துணை அன்றே
மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே
மெய்ப் பயனே கைப்பொருளே விலை அறியா மணியே
தகுந்த தனிப் பெரும் பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்று உரைமின் பத்தியோடு பணிந்தே !

இறைவன் படைத்த இந்த உலகில் மனிதர்கள் பெறவேண்டியது என்றும் அழியாத நிதி ஒன்று உள்ளது அதுதான் ''அருள்நிதி '' அவற்றை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் மட்டுமே பெறமுடியும்.அதுதான் என்றும் அழியாத நிலைப் பெற்ற நிதியாகும்.

அந்த அருள் நிதியை பெற்றவர்கள் மட்டுமே பிறப்பு,இறப்பு இல்லாமல் எல்லாவற்றையும் அனுபவிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் .எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்.எல்லா வற்றையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் .எல்லா வற்றையும் மாற்றும் ஆற்றல் படைத்தவர்கள் .

மேலும் எல்லா உலகங்களுக்கும் எவ்வித தடைகளும் இல்லாமல் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் .அவர்களே கடவுளுமாவார்கள்.
இவ்வளவு பெரிய ஆற்றலைப் பெறத்தக்க மனிதப் பிறப்பு கிடைத்தும் அழியும் பொருளைத் தேடி அலைந்து பெற்று அழிந்து போய் கொண்டு உள்ளார்கள்.

அழியாப் பொருள் என்னும் அருள் நிதியைப் பெற்று என்றும் எப்போதும் மரணம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாய் வாழ்வோம்.

வாருங்கள் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்'' சேர்ந்து

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு