வெள்ளி, 8 மே, 2015

சாதி,சமயம் ,மதங்களை ஒன்று இணைக்க முடியாது !

சாதி,சமயம் ,மதங்களை ஒன்று இணைக்க முடியாது !

கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற தரம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்கு திருக்கதவும் திறந்து இன்னமுதம் அளித்தே
தேருகின்ற மெய் ஞான சித்தி உறப் புரிவாய்
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே ....வள்ளலார் ...

இந்த உலகில் உள்ள மதங்களும்,சமயங்களும்,பொய்யானது என்று புரியாமல், மக்கள் எந்த பலனும் கிடைக்காமல்,உண்மை அறியாமல் வீணே அலைகின்றார்கள் ,மரணம் அடைந்து மண்ணாகி,புழுத்து ,நெருங்க முடியாமல் நாற்றம் அடைந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்

வெறிபிடித்த மதங்களும்,சமயங்களும் மக்களை அழித்துக் கொண்டு உள்ளன .அவர்கள்போல் நான் அல்ல ! மக்களை நல்வழிப் படுத்தி மனிதகுலம் மேன்மை பெற ,மனிதர்களை அழிவுப் பாதையில் இருந்து மீட்டு மரணம் இல்லாமல் வாழும் நல்வழிக் காட்டுவதற்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற உலகப் பொது நெறியை .அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் தனி நெறியை ,அருள் பெரும் நெறியை தோற்றுவித்து உள்ளேன் .

அழிந்து போகும் வழியைக் காட்டிய சமய மத நெறிகளில் இருந்து மீட்டு அழியாத நெறியைக் காட்டியுள்ளேன்.வாருங்கள் ,வாருங்கள் என அழைக்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

எக்காலத்திலும் சமயங்களையும்,மதங்களையும் ஒன்று சேர்க்க இயலாது .அவைகள் யாவும் கொலைக்கார கூட்டம் , உயிர் குலத்தை ,மனித குலத்தை அழிக்கவந்த வெறிபிடித்த கூட்டங்கள்....மத ஒற்றுமை ,...சமய ஒற்றுமை,..சாதி ஒற்றுமை என்பது எல்லாம் வேலை இல்லாதவர்களின் வீணான வாதங்களாகும்

சாதி,சமயம்,மதங்களை ,எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது..அவைகள் மனித ஆன்மாவில் ஆழமாக வேறுன்றி உள்ளது .அந்த வேரை அழிக்க வேண்டும்.அந்த வேரைஅழிக்க வேண்டுமானால் வள்ளலார் சொல்லிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியில்'' வந்தால் அவற்றை பின்பற்றினால் அவைகள் யாவும் தானே அழிந்துவிடும்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் ! என்ற உண்மையை அறிந்து அவரால் தோற்றுவிக்கப் பட்ட உண்மை நெறியை பின்பற்றி வாழ்வோம் வளம் பெறுவோம் .

மனிதகுலமே வாருங்கள் ,வாருங்கள் வாருங்கள்.!

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு