புதன், 22 ஜூன், 2011

சரியை ,கிரியை ,யோகம ,ஞானம் ,அன்பருக்கு கடிதம் ,!

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம் 
ஆன்மீகத்திற்கு பதினாறு படித்தரங்கள் உள்ளன என்கிறார் வள்ளலார் 
௧,சரியை 
௨,கிரியை 
௩,யோகம 
௪,ஞானம் 
இதில் ஒன்று ஓன்றிலும்,நான்கு உள்ளன ,
௧,-சரியை --சரியையில் சரியை,சரியையில் கிரியை ,சரியையில் யோகம,சரியையில் ஞானம்.
௨,-கிரியை;--கிரியையில் சரியை ,கிரியையில் கிரியை ,கிரியையில் யோகம,கிரியையில் ஞானம்.
௩,-யோகம;--யோகத்தில் சரியை,யோகத்தில் கிரியை,யோகத்தில் யோகம,யோகத்தில் ஞானம்.
௪,-ஞானம் ;--ஞானத்தில் சரியை,ஞானத்தில் கிரியை,ஞானத்தில் யோகம,ஞானத்தில் ஞானம் ,

இந்த பதினாறு படிகளையும் கடந்தவர் வள்ளலார் .
அவர் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு ,

சரியை நிலை நான்கும் மொரு கிரியை நிலை நான்கும் 
தனி யோக நிலை நான்கும் தனித்தனித் கண்டறிந்தேன் 
உரிய சிவ ஞான நிலை நான்கும்அருள் ஒளியால் 
ஒன்று ஒன்றாய் அறிந்தேன் மேல் உண்மை நிலைப்பெற்றேன்
அறிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் 
ஆறந்த நிலை யறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் 
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் 
பெற்றேன் இங்கு இறவாமை யுற்றேன் காண தோழி 

என்கிறார் வள்ளலார் பதினாறு நிலைக்கப்பால் ஆறு அந்த நிலையூம் அறிந்தேன்
அதற்கு அப்பால் அருட்பெரும் ஜோதியை க்கண்டேன்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய 
சங்கம் கண்டேன்,,என்னுடைய உடம்பை அழியாமல் இருக்கும் இறவாமை 
உற்றேன் என்கிறார் வள்ளலார்,

அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் முழு உண்மையையும் கண்டு அககடவுளின்
நிலைக்கு தன்னை சேர்த்துக் கொண்டார்,
அதைத்தான கடவுள் நிலை அறிந்து தன மயமாதல் என்கிறார் வள்ளலார் .

ஆன்மநேய அன்பருக்கு வணக்கம் ;--கதிர்வேலு 

1 கருத்துகள்:

21 ஜூலை, 2017 அன்று PM 11:38 க்கு, Blogger Vetrivendhan R கூறியது…

https://www.youtube.com/playlist?list=PLbb60V1ZcvrfubYn4ntnjuj2sXERUoMTT

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு