அறிவு மனம் !
அறிவுக்கும் மனதுக்கும் நடக்கும் போராட்டம்தான் மனித வாழ்க்கையாகும் .
அறிவு ஆன்மா தொடர்பு உடையது ஆற்றல் மிக்ககது,அறிவு சொல்படி மனம் செயல்பட்டால் துயரமும் துயரமும் வராது.,
மனம் இந்திரியங்கள்,கரணங்கள் தொடபு உடையது,வெளித்தோற்றத்தை பார்த்து செயல்படுவது மனம் அறிவை பயன் படுத்தினால் துன்பமும் துயரமும் வந்து கொண்டே இருக்கும் .
ஆதலால் அறிவுக்கு மனம் அடங்கினால் நல்லதே நடக்கும். நாம் மனம் சொல்படி கேட்காமல் அறிவு சொபடி கேட்கவேண்டும்.
இதை மனிதர்களாக பிறந்தவர்கள் கடைபிடிக்கவேண்டும் .மனதை அடக்க பல பேர் பலவழிகளை காட்டியுள்ளார்கள்.வள்ளலார் காட்டிய வழி தனி வழியாகும்.
நாம் எதை செய்தாலும்,நம்மை இயக்கம் உயிர் ஒளியான ஆன்மாவை இடைவிடாது தொடர்பு கொள்ளவேண்டும் .எப்படி என்றால் நம்முடைய மனதை வெளியில் செல்ல வொட்டாமல்,ஆன்மாவில் தொடர்பு கொண்டால் மனம் அடங்கி விடும் ,பிறகு ஆன்மாவில் விளங்கும் அறிவு சொல்படிமனம் கேட்க்கும்.அதன் பின் அறிவு தன்னுடைய சுய கட்டுப்பாட்டில் இயங்கும். நாம் மகிழ்ச்சியுடன் வாழலாம்.
இப்படி தொடர்பு கொண்டால் நல்லது எது ?கெட்டது எது ?என்று அறிவே விளக்கும் .அப்போது அனைத்து உண்மைகளும் விளங்கும் .
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு