ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

பெண்களை நெருங்காத வள்ளலார் !

 *பெண்களை நெருங்காத வள்ளலார்!* 

வள்ளலார் சென்னையில் ஏழுகிணறு வீராசாமி தெரு 38 ஆம் எண் வீட்டில் வாழ்ந்த காலத்தில்  

*சன்னதி வீதி வழியாக திருவெற்றியூர் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.*

*அத்தெருவில் வள்ளலார் செல்லும் போது அவரைப்பார்த்து அவர் அழகில் மயங்கி அவரை அடைய நிறைய பெண்கள் விரும்பி உள்ளார்கள்.* 

பொருளைக் கொடுத்தும் வசப்படுத்தவும் முயற்சி செய்துள்ளார்கள்.

*ஆனாலும் அவர்களை திட்டியதும் இல்லை*. *அவர்களின் ஆசைக்கு இசைந்ததும் இல்லை*

*அவர்களிடம் சிக்கியதும் இல்லை என்பதை பல பாடல்களின் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்*

பாடல்! 

வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந் தடுத்தபின் நினைந்தே

மலிந்திவர் காணில் விடுவர் அன்றிவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ

நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும் எனப் பயந்தே

மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.!

அடுத்த பாடல்!

வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்

சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்

பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள் முதலியகொடுத் திசைத்தும்

கை கலப்பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்! 

என்னும் பல பாடல்கள் வாயிலாக தெரிவிக்கின்றார்.

வள்ளலார் எந்த பெண்களையும் நேருக்கு நேர் பார்த்ததும் பேசியதும் நெருங்கியதும் இல்லை பயந்து நடுநடுங்கி ஓடியது உமக்குத் தெரியுமே எந்தாய் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே முறையிடுகின்றார்

மேலும் இதுபோல் பெண்கள் என்னிடம் வராதவாறு என்னை விரும்பாதவாறு  செய்தல் வேண்டும் என ஆண்டவரிடத்தில் வேண்டுகிறார்.  

அடுத்து வள்ளலார் சன்னதிவீதி வழியாக கோயிலுக்குப்  செல்வதை விடுத்து தெற்கு வீதியில் உள்ள நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்தின் வழியாக செல்வதை வழக்கமாக கொண்டார்.  

*வள்ளலார் உடல் அமைப்பு* 

வள்ளலார் உருவத்தில் சாதாரண உயரம் உள்ளவர்.மெலிந்த சரீரம் உடையவர் எலும்புகள் தெரியும் ஆயினும் வீரிய பலமுள்ளவர்.

நிமிர்ந்த தேகம். தெளிந்த மாநிற சிவப்பு மேனியர். (சாதாரணசிவப்பு) வேகமாக நடக்கும் பழக்கம் உடையவர்

நீண்ட மெல்லிய நாசி உடையவர். பறந்த பொறி பறக்கும் கண்களை உடையவர்.

இவருடைய முகத்தில் சதா சற்று விசனக்குறியாகவே காணப்படுவார்.

வள்ளலார் யோகிகளுக்கு வழக்கம் இல்லாத பாதரட்சையைத் தரித்திருந்தார்.( ஆற்காடு சோடுபோன்றது)

அவருடைய உடை இரண்டு வெள்ளை ஆடையைத்தவிர வேறில்லை என்று சொல்லுவார்கள்.

ஒரே ஆடையை உடுத்தி இருந்த்தாகவும் கேள்வி. 

*அவர் ஆடையை  துவைத்து உணர்த்தி இருந்ததை யாரும் கண்டதில்லை*. 

அவர் கடும் நிராகாரத் தபசிபோல் இருப்பார்.

இவர் இளைப்பாறினதாக எவரும் அறிந்ததில்லை.

இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை ஒரு கவளம் உண்பார்.

இரண்டு மூன்று மாதகாலம் உபவாச விரதம் எடுப்பார்.

அப்போது கொஞ்சம் சர்க்கரை கலந்த  பானத்தைத் தவிர வேறு ஒன்றையும் உட்கொள்ள மாட்டார்.

சாதி சமய மதங்களின் வேற்றுமையை விரும்பமாட்டார்.

எனினும் பல சாதி சமய மதங்களைச் சார்ந்தவர்கள் அவரைச் சுற்றி பெருங் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

கூட்டமாக கூடியவர்கள் வள்ளலார் சொல்லிய போதனைகளைக் கேட்டு பின் பற்றுவதற்காக வரவில்லை. அவர் அற்புத சித்திகளைப் பெற்றவர் என்பதை கேள்வியுற்று அவ் அற்புதங்களைப் பார்க்க வந்தவர்களாகவே இருந்தனர்.

அவரால் பொருள் வசதி வாய்ப்புக்கள் கிடைக்கும் என நினைத்து அவருடன் இருந்துள்ளார்கள்.

கூட்டமாக வந்தவர்களுக்கும் எமது கொள்கை *சமரச சுத்த சன்மார்க்க சத்திய புதிய கொள்கை* என்றும் பலமுறை சொல்லியும் ஒருவரும் கேட்பாரில்லை என்பதை அறிந்து வருத்தப்பட்டும் இருந்துள்ளார்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக  வடலூரில் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் நாள். ஆதரவு அற்ற பசித்த ஏழை எளியவர்களுக்கு உணவும் உடையும் அளிக்கப்பட்டு வந்தது.

இன்றுவரை  தொடர்ந்து அன்னதானம் மட்டும் நடைபெற்றுக் கொண்டும் வருகிறது. 

சன்மார்க்க சங்கங்கள் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் ஆரம்பித்து அன்னதானம் மட்டும் செய்துகொண்டு  வருகிறார்கள் சன்மார்க்க கொள்கைகளை எவரும் பின்பற்றியதாக தெரியவில்லை.

1872 ஆம் ஆண்டு சாதி சமயம் மதம் பேதமற்ற பொது வழிப்பாட்டுக்கென சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்தார்.

*ஜட தத்துவ உருவமான சிலை வழிப்பாட்டை தோற்று விக்காமல். ஆன்ம தத்துவ உருவமான ஒளிவழிப்பாட்டை துவக்கி வைத்தவர் வள்ளலார் இது உலகின் புதிய வழிப்பாட்டு முறையாகும்*. 

வள்ளலாருக்கு 51 வயது கடந்தபோது தாம் உலகை விட்டு ப்போவதாகச் சொல்லி சீடர்களுடைய மனதை ஒருவகை ஆறுதலுக்குக் கொண்டு வந்தார். சிலகாலம் நிட்டையில் அமரப் போவதாகக் தமது விருப்பத்தைக் காட்டிக் கொண்டே வந்துள்ளார்.

கடைசி ஆறுமாத காலமாக சகோதர உரிமையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை பற்றியும் வெகு விமரிசையாக போதித்து வந்துள்ளார்.

கடைசியாக 30-01-1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கடைசியில் பேசத் தொடங்கி இனி நடக்கப்போகும்  விஷயங்களை எச்சரிக்கையாக கொடுத்துள்ளார்.

*வள்ளலார் ஞானத்தினால் சொன்ன  விஷயங்கள் யாவும் உலகம் முழுவதும் வேறு வேறு அறிவுசார்ந்த நபர்களால்*

*அறிவியல் ரீதியாகவும்*

*பகுத்தறிவு ரீதியாகவும்*.

*மூடநம்பிக்கை இல்லாத ஆன்மீகவாதிகளாலும் தவறாமல் நிறைவேறிக் கொண்டு வருகின்றன*.

*எனவேதான் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்பதின் நோக்கமே இதுதான்*

*மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்பது சிறிதளவும் பற்று இல்லாமல் வாழ்ந்த வள்ளலாருக்கு பூரண அருள் வழங்கி ஐந்தொழில் வல்லபத்தை கொடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டார் என்பதே உண்மையான வரலாற்று உண்மையாகும்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு