வெள்ளி, 14 மே, 2021

பேசும் தெய்வங்கள் ! பேசாத தெய்வங்கள் !

 பேசும் தெய்வங்கள்! பேசாத தெய்வங்கள்! 


பேசும் தெய்வங்கள் மனிதர்கள்.

பேசாத தெய்வங்கள் மற்ற உயிர் இனங்கள்.


எல்லா உயிர்களிலும் இறைவன் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டுள்ளார் என்பதுதான் இயற்கை உண்மையாகும்.


பேசாதே தெய்வங்களான உயிர் இனங்களை அழிக்காமல் பாதுகாப்பதே பேசும் தெய்வங்களான மனிதர்களின் கடமையாகும் கட்டளையாகும்


பேசாத தெய்வங்களை பிடித்து அடித்து கொன்று அழித்து உபயோகப்படுத்துவதால் பேசும் தெய்வங்களான மனித குலத்திற்கு பேர்ஆபத்து நேரிடுகிறது. 


தீதும் நன்றும் பிறர்தர வாராது. 


ஆயுதம் இல்லாமல் கருவிகள் இல்லாமல் மறைமுகமான முறையில் மனிதர்களை அழிக்கும் கொடூரமான கொரோனோவில் இருந்து காப்பாற்றிக்கொள்ள.


உயிர் இரக்கமான ஜீவகாருண்யத்தை கடைபிடித்தால். பேசும் தெய்வங்களான மனிதர்களை இயற்கைஉண்மை எனும் தயவால் கருணையால் எளிதில் காப்பாற்றப் படுவார்கள் 


ஜீவகாருண்யமான உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் வழிபடவேண்டும்.


அவ்வாறு செயல்பட்டால் இயற்கை உண்மை எனும் எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் எல்லா உயிர்களும் காப்பாற்றப்படும்.


சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

காப்பாற்றப்படுவீர்கள்.


வள்ளலார் பாடல் ! 


எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல் இன்புறச் செயவும்


அவ்வுயிர் களுக்கு வரும் இடை யூற்றை அகற்றியே அச்சம் நீக் கிடவும்


செவ்வையுற்று உனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்று கூத் தாடி


ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே  ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.! 


மேலும் ஒருபாடல் ! 


எவ்வுயிரும் பொது எனக்கண் டிரங்கி உப

கரிக்கின்றார் யாவர் அந்தச்


*செவ்வியர் தம் செயல்அனைத்தும் திருவருளின்

செயல்எனவே தெரிந்தேன்* இங்கே


கவ்வை இலாத் திருநெறிஅத் திருவாளர்

தமக்கேவல் களிப்பால் செய்ய


ஒவ்வியதென் கருத்தவர் சீர் ஓதிட என்

வாய்மிகவும் ஊர்வ தாலோ.! 


மேலே கண்ட பாடலை படித்து உட்பொருளை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடித்தால் தீமைகள் நெருங்காது நன்மைகள் பெருகும்.


பிற உயிர்களை காப்பாற்றினால் தன் உயிரை தானே காப்பாற்றப்படும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு