வெள்ளி, 24 ஜனவரி, 2020

உயிர்களை காப்பாற்றுவதே ஆன்மீகம் !


உயிர்களை காப்பாற்றுவதே ஆன்மீகம்* !

*பொருமையாக ஊன்றி படிக்கவும்*

வள்ளலார் அன்பு.தயவு. கருணையே வடிவமாக வாழ்ந்த காரணத்தினால் இறைவனிடம்   அருளை முழுமையாக பெற்று கொண்டார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரிலே வந்து உமக்கு என்ன வேண்டுமானாலும் கேள் வேண்டியதை எல்லாம் தருகிறேன் என்கின்றார்

வள்ளலார் என்ன கேட்டார் ? கேட்டு எதனைப் பெற்றார் ? என்பதை நினைக்கும் போதும் படிக்கும் போதும் கரையாத கல்லும் கரைந்துவிடும்.

இப்படி ஒரு அருளாளர்  ஞானிகள் உலகத்தில் உண்டா என நினைக்கத் தோன்றும்.

வள்ளலார் இறைவனிடம் கேட்பதைப் பாருங்கள்.

உங்களால் படைக்கப்பட்ட.தாவரம்.ஊர்வன.பறப்பன
நடப்பன. தேவர்.அசுரர். மனித உயிர் இனங்கள் யாவும் துன்பப் பட்டு அழிந்து  கொண்டு உள்ளன அவைகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் தாழ்ந்த கதி அடையக்கூடாது.அதுவே என்னுடைய விருப்பம் என்றும்.மனித குலத்திற்கு பூரண அருள் வழங்க வேண்டும் என்பதே எனது விருப்ப முயற்சியாக உள்ளது என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வேண்டுகோள் வைத்து கேட்கிறார் வள்ளலார்.

உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியாகிய உங்களைத் தொடர்பு கொள்ளாமல் .பொய்யான சாதி.சமய.மதங்களின் தத்துவ கடவுளைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சூழலில் சிக்கி தவிக்கின்றன.அவற்றை நீக்க வேண்டும்.

எல்லா உயிர்களுக்கும் உண்மையை அறிவித்து ஆன்மலாபம் பெற்று வாழ்வதற்கு. அருளைப் பெற வாய்ப்பு அளிக்க வேண்டும்.

எல்லா உயிர்களும்  இன்புற்று வாழ வேண்டும்
கொல்லா நெறி உலகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.இதுவே என்னுடைய வேண்டுகோள் என்பதை ஆண்டவர் இடத்தில் கேட்கின்றார். 

வள்ளலார் பாடல் !

கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
தருண நின்அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் 

*வன் புலை கொலை இரண்டும்*
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்கவும் உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.!

என்றும் மேலும்

மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்

நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்!

என்றும் மேலும்

இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை எனக்கிலை

இவைஎலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெருந் தயாநிதி நின் திருவுளத் தறிந்தது தானே

தவம் இலேன் எனினும் இச்சையின் படிநீ தருதலே வேண்டும் இவ் விச்சை
நவைஇலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.!

இப்படி யாராவது எந்த அருளாளராவது இறைவனிடம் விண்ணப்பம் வைத்தது உண்டா .வைப்பார்களா என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

மேலும் வள்ளலார் பாடல் !


இந்த பாடல் வள்ளலாருக்கு உயர்ந்த மகுடம் சூட்டிய பாடல் என்பது உலகமே அறிந்தது.

எல்லாம் இறைவன் விதிப்படித்தான் நடக்கும் என்றும்.எல்லாம் இறைவன் திருவிளையாடல் செயல் என்றும்.
பாவம் புண்ணியம் என்றும்.சொர்க்கம்.நரகம் கைலாயம்.வைகுண்டம் என்றும்.நல்வினை தீவினை என்றும்.

தீதும்  நன்றும் பிறர்தர வராது என்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் ஆன்மீக சிந்தனையாளர்கள் மத்தியில் இறைவனிடம் வள்ளலார் கேட்கும் விருப்பம். வரம். வேண்டுதல்  ஒரு புதுமையானதாகும்.அதிசயமானதாகும்.

இவை எல்லாம் ஆண்டவர் ஏற்றுக் கொண்டாரா  ? இல்லையா ?
மறுத்தாரா ? என்ற கேள்வி எழலாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சொல்கிறார்.

வள்ளலார் பாடல் !


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து.நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் ஆதலால் உம்மை நேர்காணல் செய்ய வந்துள்ளேன் என்கிறார்.

வள்ளலாருக்கு ஆனந்தம் மகிழ்ச்சி அளவிட முடியாமல் பொங்கி வழிந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார்.

உம் எண்ணம் பலிக்க வேண்டும்.!  நிறை வேற்ற வேண்டும்!என்பதற்காக உமக்கு ஐந்தொழில் வல்லபத்தை தருகிறேன் என்றும் ஐந்தொழில் செய்யும் அருள் வல்லபத்தை வள்ளலாருக்கு அளித்து விடுகின்றார்.

வள்ளலார் பாடல் !


இனிமேல் உலகில் உள்ளவர்கள் யாவரும் உம் சொல் வழியே பின்பற்றி வாழ்வார்கள் .நீ எண்ணிய படியே எல்லாம் நடைபெற செயல்பட .நிறைவேற்ற அருட்பெருஞ்ஜோதியை ஈந்தனம்.அதாவது முழுமையான அருள் ஆற்றலை உம்மிடம் கொடுத்து விட்டேன் என்கிறார்.

மேலும் எம் பணியான ஐந்தொழில் வல்லபத்தை உம்மிடம் கொடுத்து விட்டதால் என்னுடைய  துன்பம் நீங்கியது என்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

வள்ளலார் பாடல்! 


என்னும் பாடல் வாயிலாக தெளிவான விளக்கம் தந்து மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றார்.

உலக உயிர்களை காப்பாற்ற ஐந்தொழில் வல்லபத்தை பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டு உள்ளவர் வள்ளலார்.

மேலும் ஒரு கட்டளையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு  சொல்லுகின்றார்.

வள்ளலார் பாடல் ! 



சாதி.சமயம் மத்த்தால் மனித குலம் போறிட்டு சண்டையிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்..

உலக பொது நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்து மக்களை ஒன்று படுத்தி ஜீவகாருண்ய  நேயத்தை.ஆன்மநேயத்தை கடைபிடிக்க செய்ய வேண்டும்.என்பிள்ளை என்பதால் இந்த பணியை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.

மனதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாதி சமய.மதங்களை அழித்து மக்களை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆணையை அனுமதியை வள்ளலார் இடம் வழங்குகிறார்.

*இவ்வளவு ஆற்றல் மிகுந்த வள்ளலார்  என்னை வணங்க வேண்டாம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே வணங்க வேண்டும் வழிபட வேண்டும் என்று ஆணையிடுகின்றார்*

ஆன்மீகம் என்பது சாதி.சமய.மதம் என்ற வேற்றுமையான வேஷம் போடுவதில்லை.உலக உயிர்களை காப்பாற்றுவதே ஆன்மீகம் என்பதாகும்.

விரிக்கில் பெருகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு