செவ்வாய், 14 ஜனவரி, 2020

ஓதாமல் உணர்வதே ஞானம் !

ஓதாமல் உணர்வதே ஞானம் !

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி!

வள்ளலார் அகவலிலே அழுத்தமாக ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

அடுத்து

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பின் உள் ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி!

என்றும் பதிவு செய்துள்ளார்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வாறு?

உலகில்  தோன்றிய அருளாளர்கள்.ஞானிகள்.
சித்தர்கள்.யோகிகள்.போதகர்கள் போன்ற பெரியோர்கள்.கண்டது.கேட்டது.கற்றது .களித்தது.உண்டது .உட்கொண்டது அனைத்தும் அவர்கள் எழுதிவைத்த நூல்கள் உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

அவற்றில் உள்ள கருத்துக்கள் செய்திகள் கொள்கைகள் யாவும் மனித உயிர்களை பிரித்து வைத்த சாதி.சமய.மதக் கொள்கைகளாகவே உள்ளன. இது இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளாகவே மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அவர்கள் காட்டிய வழிப்பாட்டு முறைகள்.கடவுள் கொள்கைகள்.வாழ்க்கை முறைகள்.ஒழுக்க நெறிகள்.உலகில் தோற்றுவித்த தத்துவக் கடவுள்கள் யாவும் உண்மைக்கு புறம்பானவைகளே.

அவர்கள் உலகிற்கு  சொல்லிய கொள்கைகள்.வழிமுறைகள் யாவும் படிக்காமல்.கேட்காமல்.கற்காமல் மக்கள் தெரிந்து கொண்டது அல்ல.

இறை அருளால் தானே கற்றதோ இறைவனே சொல்லியதோ எந்த நூல்களும் உலகில் இல்லை.

ஏகதேச அருளால் எழுதி வைத்தவர்கள் ஒருசில அருளாளர்கள்.

பூரணமாக முழு அருளைப் பெற்று தன்னைத்தானே  அறிந்தவர்கள் வள்ளலாரைத் தவிர இவ்வுலகில் ஒருவரும் இல்லை.எந்த அருளாளரும் இல்லை.

காரணம் உண்மையான இறைவன் யார்? என்பதே இவ்வுலகில் எந்த அருளாளரும் கண்டதில்லை.
( வள்ளலாரைத்தவிர) தொடர்பு கொண்டது இல்லை.

மனிதர்கள் பின்பற்றி வருகின்ற அனைத்தும் உண்மைக்கு புறம்பானவைகளே. பொய்யை உண்மை என்று நம்பி பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.

எனவேதான் மனிதர்களுக்கு அச்சம்.துன்பம்.ஐயம். பயம்.மரணம் வந்து கொண்டே உள்ளது.

பிறப்பு இறப்பை தவிர்த்து கொள்ள முடியாமல் ஆன்மாக்கள் தவித்துக் கொண்டுள்ளன.

 ஜீவதேகம் எடுத்த ஒவ்வொரு ஆன்மாக்களும்.தன்னை தானே
உணர்ந்து தலைவனை அறிந்து நேரடி தொடர்புகொண்டு அருளைப்பெற்று  கற்றுக் கொள்வதே சாகாக்கல்வியாகும்.

இதுவே ஓதாது உணர்தல் என்பதாகும்.
இதுவே ஞானம் அடையும் வழியாகும்.

  • இதுவே மரணம் அடையா  பெருவாழ்வு என்பதாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு